Worksheetsவாக்கிய வகைகள் (படிவம் 4)
Total questions: 10
Worksheet time: 11mins
கர்ணன் சிறந்த கொடையாளி மட்டுமல்லன்; சிறந்த போர் வீரனும் ஆவான்.
இது எந்த வகை வாக்கியம்?
தனி
தொடர்
கலவை
செய்தி
எறும்புகளும் தேனீக்களும் இனிப்பினை விரும்பி உண்ணும்.
இது எந்த வகை வாக்கியம்?
தனி
தொடர்
விழைவு
கலவை
மாலினி ஆலயத்திற்குச் சென்றாள்; இறைவனைத் தொழுதாள்; மன அமைதிப் பெற்றாள்.
இது எந்த வகை வாக்கியம்?
கலவை
தனி
செய்தி
தொடர்
விளையாட்டுத்துறையில் நம் நாடு வெற்றிக்கொடி நாட்ட இந்நாட்டுக் குடிமக்களான நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.
இது எந்த வகை வாக்கியம்?
தனி
தொடர்
கலவை
தனி வாக்கியத்தில் பல பயனிலைகள் இருக்கும்.
சரி
பிழை
கலவை வாக்கியம் பல முதன்மைக் கருத்துகளும் ஒரு சார்பு கருத்தும் கொண்டிருக்கும்.
சரி
பிழை
ஒன்றுக்கும் மேற்பட்ட தகவல்களை அல்லது செய்திகளை ஒரே வாக்கியத்தில் தருவது கலவை வக்கியமாகும்.
சரி
பிழை
நாடு முன்னேற வேண்டுமென்றால், மக்கள் அயராது உழைக்க வேண்டும்.
இதில் எது சார்பு வாக்கியம்?
மக்கள் அயராது உழைக்க வேண்டும்
நாடு முன்னேற வேண்டும்.
நான் குறித்த நேரத்தில் வந்தேன்; எனினும் , கதிரைக் காண முடியவில்லை.
இது எந்த வகை வாக்கியம்?
தனி
தொடர்
கலவை
ஒரே பயனிலையைக் கொண்டு முடிவதுதான் தொடர் வாக்கியமாகும்.
சரி
பிழை
