Worksheets6. இலக்கணம் - தொழிற்பெயர்
Total questions: 10
Worksheet time: 2mins
1. ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது _______.
அ) பொருட்பெயர்
ஆ) சினைப்பெயர்
இ) பண்புப்பெயர்
ஈ) தொழிற்பெயர்
2. தொழிற்பெயர் ______ இடத்தில் மட்டும் வரும்.
அ) தன்மை
ஆ) முன்னிலை
இ) படர்க்கை
ஈ) மூன்று இடத்திலும்
3. தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, வு, தி, சி, வி, மை போன்றவை தொழிற்பெயர் _______ களாக வரும்.
அ) பகுதி
ஆ) விகுதி
இ) இடைநிலை
ஈ) விகாரம்
4. வினைப்பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து வருவது _________.
அ) தொழிற்பெயர்
ஆ) விகுதிபெற்ற தொழிற்பெயர்
இ) முதனிலைத் தொழிற்பெயர்
ஈ) முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
5. பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் எது?
அ) எழுது
ஆ) பாடு
இ) படித்தல்
ஈ) நடி
6. ஏவல் ஒருமை வினையாக அமையும் வினைச்சொற்களின் பகுதியை ________ என்பர்.
அ) தொழிற்பெயர்
ஆ) விகுதி
இ) இடைநிலை
ஈ) முதனிலை
7. முதனிலை எவ்வகை மாற்றமும் பெறாமல் தொழிற்பெயராக அமைவது _________ எனப்படும்.
அ) தொழிற்பெயர்
ஆ) விகுதிபெற்ற தொழிற்பெயர்
இ) முதனிலைத் தொழிற்பெயர்
ஈ) முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
8. பின்வருவனவற்றுள் முதனிலைத் தொழிற்பெயர் எது?
அ) ஓட்டம்
ஆ) பிடி
இ) சூடு
ஈ) எழுது
9. முதனிலை திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் _______.
அ) தொழிற்பெயர்
ஆ) விகுதிபெற்ற தொழிற்பெயர்
இ) முதனிலைத் தொழிற்பெயர்
ஈ) முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
10. பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எது?
அ) ஊறு
ஆ) நடு
இ) விழு
ஈ) எழுதல்
