wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

VI 3. நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்SCI TERM1

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளை ----முறையில் நீக்கலாம்

a)

வடிகட்டுதல்

b)

காந்தப்பிரிப்பு

c)

கையால் தெரிந்தெடுத்தல்

d)

தெளிய வைத்து இறுத்தல்

2.

தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் ----அவசியம் தேவைப்படுகிறது

a)

காற்று

b)

மழை

c)

நீர் .

d)

மண்

3.

-----என்பது பருப்பொருளால் ஆனது அல்ல

a)

எண்ணெய் துளி

b)

ஒளி

c)

தங்க மோதிரம்

d)

இரும்பு ஆணி.

4.

அரிசி மற்றும் பருப்புகளில் கலந்துள்ள லேசான மாசுப்பொருட்களை ---- முறையில் நீக்கலாம்

a)

தெளிய வைத்து இறுத்தல்

b)

காந்தப்பிரிப்பு

c)

புடைத்தல்

d)

வண்டலாக்குதல்

5.

----வகையான கலவையினை வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கலாம்

a)

நீர்மம்- நீர்மம்

b)

நீர்மம்-வாயு

c)

திடப்பொருள்- நீர்மம்

d)

திடப்பொருள்- திடப்பொருள்

6.

400 மி.லி கொள்ளவு கொண்ட ஒரு கிண்ணத்தில் 200 மி.லி நீர் ஊற்றப்படுகிறது. இப்போது நீரின் பருமன்

a)

200 மி.லி

b)

400 மி.லி

c)

600 மி.லி

d)

800 மி.லி

7.

பின்வருவனவற்றில் எது கலவை அல்ல?

a)

நீர்

b)

பாலுடன் காபி

c)

எலுமிச்சை ஜீஸ்

d)

கொட்டைகள் புதைந்த ஐஸ்கிரீம்

8.

பருப்பொருள் என்பது---- ஆனது

a)

அணுக்களால்

b)

திரவங்களால்

c)

வாயுக்களால்

d)

நீர்மங்களால்

9.

திண்மத்தில் துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி ----- விட குறைவு

a)

நீர்மங்களை

b)

வாயுக்களை

c)

திரவங்களை

d)

திரவம்,வாயுக்களை

10.

நெல் தாவரத்திலிருந்து தானியங்களை -----முறை மூலம் பிரித்தெடுக்கலாம்

a)

புடைத்தல்

b)

சலித்தல்

c)

தூற்றுதல்

d)

வடிகட்டுதல்

11.

உப்புமாவில் இருந்து -----முறையில் மிளகாயினை நீக்கலாம்

a)

கையால் தெரிந்து எடுத்தல்

b)

தூற்றுதல்

c)

சலித்தல்

d)

வடிகட்டுதல்

12.

நீரில் இருந்து களிமண் துகள்களை நீக்க ------முறை பயன்படுகிறது

a)

சலித்தல்

b)

வடிகட்டுதல்

c)

தூற்றுதல்

d)

வண்டலாக்குதல்

13.

ஊசி, பென்சில் இரப்பர் வளையம் மற்றும் வளையல் இவற்றில் ----காந்தத்தால் கவரப்படும்

a)

வளையல்

b)

ஊசி

c)

பென்சில்

d)

இரப்பர் வளையம்

14.

குழாய் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீர் பொதுவாக ----- நீராக அமையும்

a)

கலங்கிய

b)

தெளிவான

c)

சுத்தமான

d)

தூய்மையான

15.

திண்மம்: கடினத்தன்மை: வாயு;------

a)

நெகிழும் தன்மை

b)

உருகும் தன்மை

c)

கொதிக்கும் தன்மை

d)

நீளும் தன்மை

16.

துகள்களுக்கு இடையே அதிக இடைவெளி உடையது: வாயு: ----------------------------: திண்மம்

a)

துகள்களுக்கு இடையே மிக குறைந்த இடைவெளி உடையது

b)

துகள்களுக்கு இடையே மிக அதிக இடைவெளி உடையது

c)

துகள்களுக்கு இடையே மிக மிக அதிக இடைவெளி உடையது

d)

துகள்களுக்கு இடையே இடைவெளி குறிப்பிட இயலாது

17.

பாயும் தன்மை: திரவம் மற்றும் வாயு: குறிப்பிட்ட பருமன்: ----------

a)

திட மற்றும் வாயு

b)

திட, திரவ மற்றும் நீர்மம்

c)

திட மற்றும் திரவம்

d)

நீர்மம் மற்றும் வாயு

18.

உமி-தானியங்கள்; தூற்றுதல்; மரத்தூள்-சுண்ணக்கட்டி---------------

a)

தூற்றுதல்

b)

சலித்தல்

c)

வண்டலாக்குதல்

d)

வடிகட்டுதல்

19.

. சூடான எண்ணெயிலிருந்து முறுக்கினை எடுத்தல்: ------------: காபியை வடிகட்டிய பின் அடியில் தங்கும் காபித்தூள்; வண்டல்

a)

வடிகட்டுதல்

b)

கசடு

c)

தூசு

d)

மாசு

20.

இரும்பு-காந்த கலவை:--------- : : உளுத்தம் பருப்பு-கடுகு கலவை:உருட்டுதல்

a)

சலித்தல்

b)

காந்தப்பிரிப்பு

c)

புடைத்தல்

d)

கடைதல்