wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 3 (திருக்குறள்)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திருக்குறளை வடித்த தமிழ்ச்சான்றோர் யார் எனத் தெரிவு செய்க.

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

திருவள்ளுவர்

d)

கம்பர்

2.

திருக்குறளில் மொத்தம் _______________ குறட்பாக்கள் உள்ளன.

a)

130

b)

1330

c)

1030

d)

1000

3.

கீழே கொடுக்கப்பட்டவை யாவும் திருக்குறளைச் சுட்டும் பெயர்கள். ஒன்றைத் தவிர.அதைத் தெரிவு செய்க.

a)

உலக பொதுமறை

b)

முப்பால்

c)

தமிழ் மறை

d)

இராமாயணம்

4.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் ___________.


திருக்குறளில் விடுபட்டுள்ள சொல்லைத் தெரிவுச் செய்க.

a)

கற்பு

b)

நட்பு

c)

உப்பு

d)

பட்டு

5.

______________ இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.


திருக்குறளில் விடுபட்டுள்ள சொல்லத் தெரிவுச் செய்க.

a)

உதவியை

b)

உடுக்கை

c)

நட்பை

d)

உரிமை

6.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

____________ களைவதாம் நட்பு.


திருக்குறளில் விடுபட்டுள்ள சொல்லத் தெரிவுச் செய்க.

a)

இடுக்கண்

b)

துயரம்

c)

இனிமை

d)

அன்பை

7.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு


கொடுக்கப்பட்டுள்ள இத்திருக்குறளின் பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவுச் செய்க.

a)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

b)

இளைமைக் கல்வி சிலை மேல் எழுத்து.

c)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

d)

சிறு துளி பெரு வெள்ளம்

8.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு


கொடுக்கப்பட்டிருக்கும் திருக்குறளின் பொருளைத் தெரிவுச் செய்க.

a)

உடுத்திய ஆடை நழுவும்போது அவரறியாமல் உடனே ஆடையை இழுத்து மானத்தைக் காப்பது போன்று நண்பருக்குத் துன்பம் வந்தகணமே ஓடிச்சென்று அதனைப் போக்குவதே நட்பு.

b)

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

9.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு


உடுக்கை என்ற சொல்லின் பொருள் யாது?

a)

பணம்

b)

உடை

c)

பலகாரம்

d)

இசைக்கருவி

10.

திருக்குறல் முதன்முதலாக எந்த ஆண்டில் அச்சிடப்பட்டது ?

a)

2021

b)

1812

c)

1990

d)

2020