Worksheetsபழமொழி
Total questions: 14
Worksheet time: 14mins
பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
இளங்கன்று பயம் அறியாது
இளமைக் காலத்தில் கற்கப்படும் கல்வி சிலையில் பொறிக்கப்பட்ட எழுத்தைப் போன்று, அழியாது மனதில் நிலைத்திருக்கும்.
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
இளவயதினர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு செயலில் துணிந்து இறங்கி விடுவர்.
எந்தவொரு செயலிலும் முயற்சியோடு ஈடுபடுபவருக்கு அச்செயலில் வெற்றி கிட்டுவது உறுதி.
பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
எந்தவொரு செயலிலும் முயற்சியோடு ஈடுபடுபவருக்கு அச்செயலில் வெற்றி கிட்டுவது உறுதி.
தேவைக்கு ஏற்பச் சிக்கனமாகச் செலவு செய்து சேமித்து வாழ்ந்தால் சிறப்புற வாழலாம்.
ஒருவருடைய மன உணர்வை வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் முகம் காட்டிவிடும்.
சிறுக சிறுக சேமிக்கின்ற ஒன்றே நாளடைவில் பேரளவாகப் பெருகிவிடும்.
பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
இளமைக் கல்வி சிலையில் எழுத்து
ஒவ்வொரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்.
நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்.
இளமைக் காலத்தில் கற்கப்படும் கல்வி சிலையில் பொறிக்கப்பட்ட எழுத்தைப் போல அழியாமல் மனதில் நிலைத்திருக்கும்.
பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
ஒருவருடைய மன உணர்வை வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் முகம் காட்டிவிடும்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
சிக்கனம் சீரளிக்கும்
பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
ஒரு குழந்தை சிறு வயதிலே எப்படிச் செயல்படுகிறதோ அதைக் கொண்டு பிற்காலத்தில் எப்படி விளங்கும் என்பதை ஊகித்து அறியலாம்.
சிறு துளி பெரு வெள்ளம்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
உடல்நலத்தோடு வாழ்வதே வாழ்க்கையில் ஒருவருக்குக் கிடைத்த பெரும் பேறாகும்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
சிக்கனம் சீரளிக்கும்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்.
ஊருடன் கூடி வாழ்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
இளங்கன்று பயம் அறியாது
பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
சிறுகச் சிறுகச் சேர்க்கின்ற ஒன்றே நாளடைவில் பேரளவாகப் பெருகிவிடும்.
சிக்கனம் சீரளிக்கும்
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
சிறு துளி பெரு வெள்ளம்
பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
எதையும் இளமையில் எளிதாகவும் விரைந்து கற்றுக் கொள்ளலாம்; முதுமையில் அவ்வாறு செய்ய இயலாது.
சிறு துளி பெரு வெள்ளம்
ஊருடன் கூடி வாழ்
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
உதவி செய்தவரின் நன்றியை நம் உயிருள்ளவரை மறக்கக்கூடாது.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
இளங்கன்று பயம் அறியாது
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
இறைவனை நம்பி வழிபடுவோருக்குக் கடவுள் என்றும் துணையிருப்பார்.
இளமைக் கல்வி சிலையில் எழுத்து
முயற்சியுடையோஎ இகழ்ச்சியடையார்
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஊருடன் கூடி வாழ்
நிழலில் அருமை வெயிலில் தெரியும்
பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்