NEW
Font size
Worksheets14.2.2021
Total questions: 12
Worksheet time: 12mins
1. ____________ மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய இடத்தைப் பற்றிக் கூறுகிறேன்.
உன்னை
நீங்கள்
என்னை
தன்னை
2. வங்கக்கடல், அரபிக்கடல், இந்தியமாக்கடல் என முக்கடல் சங்கமிக்கும் ______________ கண்டேன்.
இடம்
இடத்தைக்
இடத்தால்
இடத்திற்கு
கீழுள்ளவற்றில் எழுத்து வழக்குச் சொல்லைக் கண்டறிக
எண்ணெய்
எண்ணை
என்னெய்
எண்ணேய்
4. பொய் சொல்லாமல் வாழ்வது __________ எல்லா அறங்களையும் தேடித்தரும்.
அவன்
அவள்
அவ்வாறு
ஒருவர்க்கு
5. குமாரும் ____________ நண்பர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அவருக்கு
அவர்களால்
அவனது
அவனே
6. தமிழர்கள் சித்த வைத்தியத்தைக் கொண்டே ____________ நோயையும் குணப்படுத்தினர்.
அணைத்து
அனைத்து
அவர்களாம்
அவை
7. கறிவேப்பிலை எலும்புகளுக்குப் ______ தரக்கூடியது.
பழம்
பளம்
வலம்
பலம்
8. அடர்ந்த காடு ஒன்று இருந்தது. _________ சுற்றிலும் அழகான குட்டிக் குட்டித் தீவுகள் இருந்தன.
எதை
அப்பொழுது
எதனால்
அதைச்
9. கரிகாலன் தனது நாட்டை வளப்படுத்துவதற்காக வேளாண்மை, வணிகம், கைத்தொழில் ____________ கவனம் செலுத்தி நாட்டை வளப்படுத்தினான்.
ஆகியவற்றில்
ஆகையால்
அதனால்
அப்படியானால்
10. கம்பர் இராமாயணத்தை இயற்றினார். இதில் இடம் பெற்றுள்ள எழுவாய் சொல் _______
கம்பர்
இராமாயணத்தை
இயற்றினார்
11. சிற்பி சிலையைச் செதுக்கினார். - இதில் இடம் பெற்றுள்ள பயனிலை _______
சிலையை
செதுக்கினார்
சிற்பி
12. உழவர் நிலத்தை உழுதார். - இதில் இடம் பெற்றுள்ள செயப்படு பொருள் _________________
உழுதார்
உழவர்
நிலத்தை
