wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

போஷன் அபியான் வினாடி வினா – பெருந்துறை வட்டாரம்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

போஷன் அபியான் திட்டம் என்றால் என்ன?

a)

குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறை, வயதிற்கேற்ற உயரமின்மை (குள்ளத்தன்மை) மற்றும் உயரத்திற்கேற்ற எடையின்மை போன்றவற்றை தடுத்தல் மற்றும் குறைத்தல்

b)

குழந்தைகள், வளரிளம் பெண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் இரும்பு சத்து பற்றாக்குறையை ( ரத்த சோகை) குறைத்தல்.

c)

பிறப்பு எடை குறைவுடன் குழந்தைகள் பிறப்பதை குறைத்தல்

d)

மேற்கண்ட அனைத்தும் சரி

2.

போஷன் அபியான் திட்டம் எப்போது அமல்படுத்தப்பட்டது?

a)

March 8, 2018

b)

May 8, 2018

c)

April 8, 2018

d)

September 8, 2018

3.

தங்கமான 1000 நாட்கள் என்பது ______________ ?

a)

270 நாட்கள் - 9 மாத கர்ப்ப காலம்

b)

180 நாட்கள் - குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதம் வரை

c)

550 நாட்கள் - ஆறு மாதத்தில் இருந்து இரண்டு வயது வரை.

d)

இவை அனைத்தும் சரி

4.

போஷன் அபியான் திட்டத்தில் சமுதாயம் சார்ந்த நிகழ்வுகளின் மொத்த எண்ணிக்கை எத்தனை ?

a)

2 நிகழ்வுகள்

b)

3 நிகழ்வுகள்

c)

4 நிகழ்வுகள்

d)

5 நிகழ்வுகள்

5.

குழந்தை பிறந்தவுடன் முதல் ஒரு மணி நேரத்திற்குள் கொடுக்கப்பட வேண்டியது என்ன?

a)

தேன்

b)

சர்க்கரை தண்ணீர்

c)

சீம்பால் (கொலஸ்ட்ரம்)

d)

இவை அனைத்தும் சரி

6.

தாய்ப்பாலின் நன்மைகள்

a)

குழந்தைக்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது

b)

தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக மற்றும் கர்ப்பபை புற்று நோய் வராமல் தடுக்கலாம்

c)

குழந்தைக்கு தேவையான அளவு தண்ணீர் தாய்ப்பாலிலேயே உள்ளது

d)

தாய் மற்றும் சேய்க்கு இடையே ஆரோக்கியமான உறவு வளரும்

e)

அனைத்து சரி

7.

எத்தனை மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும்?

a)

முதல் 6 மாதங்கள்

b)

முதல் 7 மாதங்கள்

c)

முதல் 8 மாதங்கள்

d)

முதல் 5 மாதங்கள்

8.

குழந்தைக்கு தாய்ப் பாலுடன் இணை உணவு எப்போது கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்?

a)

ஆறு மாதம் முடிந்தவுடன்

b)

12 மாதம் முடிந்தவுடன்

c)

18 மாதம் முடிந்தவுடன்

d)

இரண்டு வயதிற்கு மேல்

9.

6 மாதம் முடிந்த பின்னர் துணை உணவு தொடங்கப்பட்டு, குறைந்தது எத்தனை வயது வரை தாய்ப்பால் வழங்க வேண்டும்?

a)

2 வயது வரை

b)

3 வயது வரை

c)

4 வயது வரை

d)

5 வயது வரை

10.

குழந்தைக்கு கொடுக்கப்பட வேண்டிய துணை உணவின் அளவு

a)

6 மாதம் முடிந்தவுடன் - 1 கப் (100g)

b)

9 மாதம் முடிந்தவுடன் - 2 கப் (200g)

c)

12 மாதம் முடிந்தவுடன் - 3 கப் (300g)

d)

18 மாதம் முடிந்தவுடன் - 5 கப் (500g)

e)

இவை அனைத்தும் சரி

11.

பச்சிளம் குழந்தை பராமரிப்பின் முக்கிய கூறுகள் ,சரியானவற்றை குறிக்கவும்.

a)

தாய்ப்பால் கொடுத்தல்

b)

உடலை கதகதப்பாக வைத்திருத்தல் ( கங்காரு பராமரிப்பு) மற்றும் தொப்புள் கொடி பராமரிப்பு

c)

தன் சுத்தம் மற்றும் சுகாதாரமான சுற்றுப்புற பராமரிப்பு

d)

இவை அனைத்தும் சரி

12.

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும்??

a)

12 gm/dl

b)

10-12 gm/dl

c)

7.1-9 gm/dl

d)

7 gm/dl

13.

ரத்த சோகையின் அறிகுறி என்னென்ன?

a)

எளிதில் களைப்பு அடைதல்

b)

கண்ணின் கீழ் பாகம் வெளிரியிருத்தல்

c)

முடி உதிர்தல்

d)

இவை அனைத்தும்

14.

இரும்புச் சத்து நிறைந்துள்ள உணவு

a)

புளிச்சைக் கீரை, பாலக்கீரை

b)

சுண்டைக்காய்

c)

ஆட்டு ஈரல்

d)

உலர்ந்த திராட்சை, பேரிச்சம்பழம்

e)

அனைத்தும் சரி

15.

ரத்த சோகையை சரி செய்ய இரும்புச் சத்து மற்றும் புரதச் சத்துடன் எந்த உயிர் சத்தினை எடுத்துக் கொள்ள வேண்டும்?

a)

உயிர்ச்சத்து A

b)

உயிர்ச்சத்து B

c)

உயிர்ச்சத்து C

d)

உயிர்ச்சத்து D