Worksheets+2 கணக்குப்பதிவியல் - பாடம் 5 & 6
Total questions: 20
Worksheet time: 10mins
மறுமதிபீட்டுக் கணக்கு ஒரு
சொத்து க/கு
பெயரளவு க/கு
ஆள்சார் க/கு
ஆள்சாரா க/கு
மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது
ஆதாயம்
நட்டம்
செலவு
இவற்றுள் எதுவுமில்லை
சொத்துகள் மற்றும் பொறுப்புகளை மறுமதிப்பீடு செய்யும் போது ஏற்படும் இலாபம் அல்லது நட்டம்யாருடைய முதல் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?
பழைய கூட்டாளிகள்
புதிய கூட்டாளி
அனைத்து கூட்டாளிகள்
தியாகம் செய்த கூட்டாளிகள்
கூட்டாளியின் புதிய இலாபப்பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால்அவ்வேறுபாடு
அழைக்கப்படுவது
முதல் விகிதம்
தியாக விகிதம்
ஆதாய விகிதம்
இவற்றுள் எதுவுமில்லை
கூட்டாளி சேர்ப்பின்போது நற்பெயரானது மதிப்பீடு செய்யப்பட்டு யாருடைய முதல்கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.
அனைத்து கூட்டாளிகள்
பழைய கூட்டாளிகள்
புதிய கூட்டாளி
தியாகம் செய்த கூட்டாளிகள்
கூட்டாளி சேர்ப்பு தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானதல்ல?
பொதுவாக கூட்டாளிகளின் பரஸ்பர உரிமைகள் மாறும்
முந்தைய ஆண்டுகளின் இலாபம் மற்றும் நட்டங்கள் பழைய கூட்டாளிகளுக்கு
பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்
கூட்டாண்மை நிறுவனமானது புதிய ஒப்பந்தத்தின் கீழ் மறு கட்டமைக்கப்படும்
ஏற்கனவே உள்ள ஒப்பந்தமானது முடிவுக்கு கொண்டு வரப்படாது
பொருத்துக
(i) தியாக விகிதம் 1. முதலீட்டு மாறுபடும் நிதி
(ii) பழைய இலாபப் பகிர்வு விகிதம் 2. பகிர்ந்துதரா இலாபம்
(iii) மறுமதிப்பீட்டு கணக்கு 3. நற்பெயர்
(iv) முதல் கணக்கு 4. பதிவுறா பொறுப்பு
1 2 3 4
3 2 4 1
4 3 2 1
3 1 4 2
பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்
மறுமதிப்பீட்டு இலாபம்
பகிர்ந்தளிக்கப்படாத இலாபம்
புதிய கூட்டாளி கொண்டு வந்த நற்பெயர்
முதலீட்டு மாறுபடும் நிதி
ஜேம்ஸ் மற்றும் கமல் இலாப நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர்.
அவர்கள் சுனில் என்பவரை 1/5 இலாப பங்கிற்கு கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். தியாக
விகிதத்தை கணக்கிடவும்.
1:3
3:1
5:3
3:5
பாலாஜி மற்றும் கமலேஷ் கூட்டாளிகள். இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில்
பகிர்ந்துகொண்டனர். அவர்கள் யோகேஷ் என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர்.
பாலாஜி, கமலேஷ் மற்றும் யோகேஷின் புதிய இலாப் பகிர்வு விகிதம் 3:1:1. பாலாஜி மற்றும்
கமலேஷின் தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.
1:3
3:1
2:1
1:2
கூட்டாளி ஒருவர் ஜுன் 30 அன்று கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர்
கூட்டாண்மை நிறுவனத்தின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பாவது
நடப்பு கணக்காண்டின் இறுதி வரைக்கும்
முந்தைய கணக்காண்டின் இறுதி வரைக்கும்
கூட்டாளி விலகும் நாள் வரைக்கும்
கூட்டாளியின் கணக்கைத் தீர்வு செய்யும் வரைக்கும்
கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து கூட்டாளி விலகலின்போது பகிர்ந்து தரா இலாபங்கள் மற்றும்
நட்டங்கள் கூட்டாளிகளுக்கு இந்த அடிப்படையில் பகிரப்படுகிறது.
புதிய இலாபப் பகிர்வு விகிதம்
பழைய இலாபப் பகிர்வு விகிதம்
ஆதாய விகிதம்
தியாக விகிதம்
கூட்டாளி விலகலின் போது பொதுக்காப்பு மாற்றப்படுவது
அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
மறுமதிப்பீட்டுக் கணக்கிற்கு
தொடரும் கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
நினைவுக் குறிப்பு மறுமதிப்பீட்டு கணக்கிற்கு
மறுமதிப்பீட்டின்போது, பொறுப்புகளின் அதிகரிப்பு தருவது
ஆதாயம்
நட்டம்
இலாபம்
மேற்கண்ட எதுவுமில்லை
ஒரு கூட்டாளி விலகலின்போது, ஆதாய விகிதத்தின் நிர்ணயம் எதற்கு தேவைப்படுகிறது?
மறுமதிப்பீட்டு இலாபம் அல்லது நட்டம் மாற்றப்படுவதற்கு
பகிர்ந்து தரா இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்தளிப்பதற்கு
நற்பெயரை சரிக்கட்டுவதற்கு
மேற்கண்ட எதுவுமில்லை
விலகும் கூட்டாளிக்குரிய தீர்வுத்தொகை உடனடியாகசெலுத்தாதபோது, அது மாற்றப்படும் கணக்கு
வங்கி க/கு
விலகும் கூட்டாளியின் முதல் க/கு
விலகும் கூட்டாளியின் கடன் க/கு
பிற கூட்டாளிகளின் முதல் க/கு
ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளியாக இருந்த ‘A’ என்பவர் 2019, மார்ச் 31 அன்று இறந்து விட்டார். அவருக்கு செலுத்த வேண்டிய இறுதித்தொகை ` 25,000 உடனடியாகச்செலுத்தப்படவில்லை. அது மாற்றப்பட வேண்டிய கணக்கு
A-ன் முதல் கணக்கு
A-ன் கடன் கணக்கு
A –ன் நிறைவேற்றாளர் கணக்கு
A –ன் நிறைவேற்றாளர்கடன் கணக்கு
A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 2:2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர்.
B-ன் விலகலின் போது நிறுவனத்தின் நற்பெயர் ` 30,000 என மதிப்பிடப்பட்டது. கூட்டாளி B-க்கு
ஈடு செய்வதற்கு A மற்றும் C யின் பங்களிப்பைக் கண்டறியவும்.
20,000 மற்றும் 10,000
8,000 மற்றும் 4,000
10,000 மற்றும் 20,000
15,000 மற்றும் 15,000
A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 4:2:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர்.
தற்போது C விலகுகிறார். A மற்றும் B யின் புதிய இலாபப் பகிர்வு விகிதம்
4:3
3:4
2:1
1:2
X, Y மற்றும் Z என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2019, ஏப்ரல் 1 அன்று X இறந்து விட்டார். 2018 இல் இலாபம் ரூ 36,000 என்ற அடிப்படையில் 2019 ஆம்
ஆண்டுக்குரியஇலாபத்தில் X ன் பங்கினைக்கண்டறியவும்.
ரூ 1,000
ரூ 3,000
ரூ 12,000
ரூ 36,000
