Worksheetsகூண்டிற் கிளி
Total questions: 20
Worksheet time: 10mins
கூண்டிற் கிளி பாடலின் ஆசிரியர் யார் ?
அழ. வள்ளியப்பா
வித்துவான் க வேந்தனார்
கணேசலிங்கன்
கூண்டில் அடைக்கப்படட கிளியிடம் யார் உரையாடுவதாக ஆசிரியர் பாடியுள்ளார்?
சிறுவன் ஒருவன்
பவளம் என்ற சிறுமி
வயது முதிர்ந்த தாத்தா
'குழந்தை மொழிகள் சொல்கிறாய்' என்பதில் வந்த குழந்தை என்பதன் ஒத்தபாதம்
குளவி
குழவி
பவளம்
'அடிமை வாழ்வு ஒழிக என்பதில் வந்துள்ள வினை.
முன்னிலை வினை
ஏவல் வினை
வியங்கோள் வினை
'வண்ணக்கூண்டில் இறுகிறாய் ' என்பதில் வந்த வண்ணம் என்பதன் கருத்து?
வன்மை
அழகு
பெரிய
"வீட்டில் உன்னை அடைக்க நீ விரும்பும் இன்பம் "
என்பதில் வந்த இன்பம் என்பதன் எதிர்ப்பதம்
சந்தோசம்
துன்பம்
மகிழ்ச்சி
" கோலப்பந்தை அடிக்கிறாய்" இதில் வந்த கோலப்பந்து என்பது குறிப்பது
கோளவடிவாமன பந்து
அழகான பந்து
கோலையுடைய பந்து
'பறவை இனத்தை கலக்கவோ 'இங்கு பறவை என்பதன் ஒத்தகருத்து
பட்சி
காகம்
விலங்கு
'மாலை தோறும் வந்துனது' இங்கு மாலை என்பதன் எதிர்ப்பதம்
மாலை
மதியம்
காலை
"நல்ல மொழிகள் கூறியே நாண வைத்தாய் " இங்கு நாணம் என்பதன் அர்த்தம்
நாணுதல்
வெட்கம்
நண்பர்
அடிமை வாழ்வு ஒழிக என்று கூறியவர் யார்?
நேரு
மகாத்மா காந்தி
அறிஞர் அண்ணா
தேனை போன்ற மாங்கனிகள் ' என்பதில் இடம் பெற்ற அணி யாது?
உருவக அணி
உவமை அணி
சிலேடை அணி
பவளத்தின் தோழி யார் ?எனக் கிளி கூறுகிறது ?
அன்னம்மா
நல்லம்மா
செல்லம்மா
கிளிக்கும் பவளம் எனும் சிறுமிக்குமிடையிலான உறவு எத்தகையது ?
சகோதரத்துவம்
தோழமை
பகைவர்
ஏதோ ஒன்றின் பொருளை அல்லது கருத்தை உணர்த்தி வரும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?
வினைச்சொல்
பெயர்ச்சொல்
இடைச்சொல்
கருமை, வெண்மை , வட்டம் என்பன எவ்வகைப் பெயராகும் ?
இடப்பெயர்
காலப்பெயர்
குணப்பெயர்
பெயர்ச் சொற்கள் எத்தனை வகைப்படும் ?
பத்து
மூன்று
ஆறு
அம்மா மீன் பொரித்தார் . இங்கு பொரித்தல் என்பது
எவ்வகைப் பெயர்?
காலப்பெயர்
தொழிற் பெயர்
இடப்பெயர்
சிறை வாழ்க்கையிலிருந்து தன்னை விடுதலை செய்யும்படி வேண்டியது எது?
கிளி
சிறுமி
கூடு
பூனை வந்து பிடிக்காமல் காப்பதாகவும், மாங்கனிகள் தருவதாகவும் கூறியது யார் ?
பூனை
கிளி
பவளம்
