NEW
Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 6
Total questions: 22
Worksheet time: 11mins
உணவு பதனிடுதல் என்றால் என்ன ?
உணவிலுள்ள அனைத்து குச்சியங்களையும் கொல்லும் செயற்பாங்காகும்
உணவை அதிக நாள்கள் கெடாமல் இருக்க மேற்கொள்ளும் செயற்பாங்காகும்.
பல வருடங்களுக்கு உணவின் ருசியை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாங்கு
கீழ்க்காண்பனவற்றுள் நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற சூழ்நிலை எது?
போதிய வெப்பம் மற்றும் உலர்ந்த நிலை
குளிர் மற்றும் உலர்ந்த நிலை
போதிய வெப்பம் மற்றும் ஈரத்தன்மை
குளிர் மற்றும் ஈரத்தன்மை
இரு நாள்களாக மேசையின் மீது வைக்கப்பட்ட ஒரு குவளையிலுள்ள பால் புளிப்பு சுவையோடு திரிந்தும் விட்டது. இந்நிலை ஏற்பட்டதற்கான காரணம் என்ன?
குச்சியம்
நச்சியம்
பூஞ்சணம்
கீழ்க்காண்பனவற்றுள் எது தவறான கூற்றாகும்?
உப்பேற்றம் - உப்பைக் கொண்டு தடவுதல்
உலர வைத்தல் - நீரை நீக்குதல்
ஊற வைத்தல் - வினிகர், உப்பு மற்றும் சீனியைப்
பயன்படுத்தி ஊற வைத்தல்.
குளிர்ந்துறைத்தல் - 0℃ முதல் 5℃ வெப்பநிலையில் வைத்தல்.
படம் ஒருவித உணவைக் காட்டுகிறது.
மேற்காணும் உணவுப் பொருளின் தன்மை பல மாதங்களுக்கு மாறாமல் இருக்க உணவுப் பதனிடும் முறையில் எது சிறந்த்தாகும்?
மெழுகிடுதல்
கொதிக்க வைத்தல்
குளிர்ப்படுத்துதல்
குளிர்ந்துறையச் செய்தல்
உலர்ந்த உணவைக் காட்டிலும் ஈரத்தன்மையுள்ள உணவு ஏன் விரைவில் கெடுகிறது?
ஈரத்தன்மையுள்ள உணவு குச்சியங்களுக்கு அதிக தாதுச்சத்தைத் தருகிறது.
ஈரத்தன்மையுள்ள நிலையில் குச்சியங்கள் விரைவாக வளரும்.
ஈரத்தன்மையுள்ள உணவில் அதிக காற்று இருக்கும்.
ஈரத்தன்மையுள்ள உணவு வெப்பமாக இருக்கும்.
உலர்ந்த உணவைக் காட்டிலும் ஈரத்தன்மையுள்ள உணவு ஏன் விரைவில் கெடுகிறது?
ஈரத்தன்மையுள்ள உணவு குச்சியங்களுக்கு அதிக தாதுச்சத்தைத் தருகிறது.
ஈரத்தன்மையுள்ள நிலையில் குச்சியங்கள் விரைவாக வளரும்.
ஈரத்தன்மையுள்ள உணவில் அதிக காற்று இருக்கும்.
ஈரத்தன்மையுள்ள உணவு வெப்பமாக இருக்கும்.
மலையேறும் நடவடிக்கையின்போது சரவணன் தான் கொண்டு வந்த கோழி இறைச்சி மலை உச்சியில் இருக்கும்போது அதிக நேரம் கெடாமல் இருப்பதை உணர்ந்தான். இந்நிலைக்கான காரணம் என்ன?
மலை உச்சியில் வெப்பநிலை குறைவாக இருக்கும்.
அப்பகுதியில் குச்சியங்கள் வாழவில்லை
மலைப்பகுதியில் சூரிய ஒளி வெளிச்சமாக இருக்கும்.
அப்பகுதியில் உள்ள காற்று உலர்ந்துவிட்டது
கீழ்க்காண்பனவற்றுள் எது புகையிடும் செயற்பாங்கைப் பற்றிய சரியான கூற்றாகும்?
அதிக நேரத்திற்கு சூரிய ஒளியில் உலர வைக்கப்படும் ஒரு முறையாகும்.
அதிக நேரத்திற்கு புகையிட்டு வெப்பப்படுத்தி உலர வைக்கப்படும் ஒரு முறையாகும்.
குறிப்பிட்ட வெப்பநிலைக்கு ஏற்ப சூடாக்கிய பின் உடனே குளிர்ப்படுத்துதல்.
ஒரு நாள் முழுவதும் உணவிலுள்ள நீரை வெளியேற்றும் செயற்பாங்கு
படம் பாஸ்டர் செய்யப்பட்ட பாலைக் காட்டுகிறது.
கீழ்க்காண்பனவற்றுள் எது பாலை பாஸ்டர் செய்யும் செயற்பாங்கின் சரியான நிரலாகும்?
புட்டியலிடுதல் - கொதிக்க வைத்தல்
வெப்பப்படுத்துதல் - புட்டியலிடுதல்
வெப்பப்படுத்துதல் - குளிர்ப்படுத்துதல்
குளிர்ப்படுத்துதல் - வெப்பப்படுத்துதல்
படம் கெட்டுப்போன ஒரு தட்டு சோற்றைக் காட்டுகிறது. கெட்டுப்போன சோற்றின் தன்மை என்ன?
வழவழப்புத் தன்மை மற்றும் கரும்புள்ளிகள்
மஞ்சள் நிறம் மற்றும் துர்நாற்றம் வீசும்
நுரைத்தள்ளும் மற்றும் இழையமைப்பில் மாற்றம்
பூஞ்சணம் வளர்ந்து திட்டு திட்டாக இருக்கும்.
பின்வருவற்றுள் எஃது உணவுப் பதனிடும் முறையல்ல ?
உலர வைத்தல்
குளிர்ந்துறையச் செய்தல்
கலனிடுதல்
வண்ணக் கலவையில் இடுதல்
உணவு பதனீடு தொடர்பான கூற்றுகளில் எது சரி ?
பதனிடப்பட்ட உணவுகள் எளிதில் கெட்டுப்போய்விடும்.
மிகக் குறைவான வெப்பநிலையில் நுண்ணுயிர் செயலிழந்துவிடும்; அதிக வெப்பநிலையில் நுண்ணுயிர் இறந்து விடும்.
கெட்டுப்போன உணவு வகைகள் உண்பதற்குப் பாதுகாப்பானவை.
நீர், காற்று, மிதமான வெப்பநிலை ( 5℃ முதல் - 65 ℃ வரை), தாதுச்சத்து மற்றும் ஏற்ற காடித்தன்மை இருக்கும் சூழல்களில் நுண்ணுயிர்கள் உணவுப் பொருள்களை எளிதில் கெடாமல் பாதுகாக்கின்றன.
உணவு பதனீடு தொடர்பான சரியான தகவலைத் தெரிவு செய்க.
உலர்த்துதல் - சூரிய ஒளியில் உணவை உலர்த்துவதன் மூலம் உணவுப் பொருளில் உள்ள நீர் அகற்றப்படுகிறது.
குளிரச் செய்தல்- கடுங் குளிரில் நுண்ணுயிர்கள்
செயலிழக்கின்றன.
குளிர்ந்துரையச் செய்தல் - குளிரச்செய்வதன் வழி நுண்ணுயிர்கள் செயலிழக்கின்றன; அவற்றின் நடவடிக்கை தாமதப்படும்.
பாஸ்டர் முறை - உணவுப்பொருள் அதிக நேரம் நெருப்புப் புகையில் வைக்கப்பட்டு வாட்டப்படும். புகையிலிருந்து வெளியாகும் இரசாயனமும் உலர்ந்த தன்மையும் உணவுப் பொருள்களைப் பதப்படுத்துகின்றன
புளிக்காடி மற்ற காடித்தன்மைக் கொண்ட திரவங்கள் மற்றும் சீனி கரைசலில் உணவு பொருள்கள் ஊற வைக்கப்படுகின்றன.
மேற்காணும் கூற்றுக்கேற்ற உணவு பதனிடும் முறையைத் தேர்ந்தெடுக.
காற்று நீக்கிப் பொட்டலமிடுதல்
புகையிடுதல்
பாஸ்டர் முறை
ஊறவைத்தல்
புளிக்காடி மற்ற காடித்தன்மைக் கொண்ட திரவங்கள் மற்றும் சீனி கரைசலில் உணவு பொருள்கள் ஊற வைக்கப்படுகின்றன.
மேற்காணும் கூற்றுக்கேற்ற உணவு பதனிடும் முறையைத் தேர்ந்தெடுக.
காற்று நீக்கிப் பொட்டலமிடுதல்
புகையிடுதல்
பாஸ்டர் முறை
ஊறவைத்தல்
மேற்காணும் உணவை எப்படி பதனிடலாம் ?
புகையிடுதல்
கலனிடுதல்
உப்பேற்றம்
பாஸ்டர் முறை
கெட்டுப்போன கோழித்துண்டின் தன்மை என்ன ?
•துர்நாற்றம் வீசும்.
• உணவின் ஓரத்தில் கருமை நிறம் தோன்றும்.
•வழவழப்பு மற்றும் பிசுபிசுப்புத் தன்மை
உண்டாகும்.
• நிறமாற்றம் ஏற்படும்.
• இழையமைப்பு மாறி வழவழப்பு மற்றும்
பிசுபுசுத்தன்மைத் தன்மை உண்டாகும்.
• பூஞ்சணம் பூக்கும் / கரும்புள்ளிகள் தோன்றும்.
•துர்நாற்றம் ஏற்படும்.
•நிறமாற்றம் ஏற்படும்.
•புளிப்புத் தன்மை ஏற்படும்
உணவுப் பதனிடும் தொழில் நுட்பத்தின்
நன்மை என்ன ?
உணவு விரயமாகும்.
உணவுப் பொருள் அதிக நாள்கள் கெடாமல் இருக்கும்.
உணவு தட்டுப்பாடு ஏற்படும்.
உணவுப் பொருள்கள் கெட்டுப் போவதற்குக் காரணம்..........
நுண்ணுயிர்களும் புழுக்களும்
பூச்சிகளும் பூஞ்சைக் காளானும்
பூஞ்சைக்காளானும் குச்சியமும்
ஈயும் நுண்ணுயிர்களும்
குச்சியம் உயிர் வாழ ஏற்றச் சூழல்கள்.
நீர், காற்று, மிதமான வெப்பநிலை ( 5℃ முதல் - 65 ℃ வரை), தாதுச்சத்து மற்றும் ஏற்ற காடித்தன்மை
நீர், காற்று, மிதமான குளிர்
நீர், காற்று, மிதமான குளிர், தாதுச்சத்து மற்றும் ஏற்ற காடித்தன்மை
நீர், காற்று, மிதமான குளிர், தாதுச்சத்து மற்றும் ஏற்ற காரத்தன்மை
உணவுகளில் உள்ள காற்றை வெளியேற்றி பதனிடும் முறையும் ஒன்றாகும். பின்வருவனவற்றுள் எஃது மேற்கண்ட கூற்றை ஒட்டியது?
உலர வைத்தல்
காற்று நீக்கி பொட்டலமிடுதல்
குளிர்ந்துறையச் செய்தல்.
கலனிடுதல்
