Font size
Worksheetsபழமொழி - PT3 (KSSM) -குமார் துரைராஜு -
Total questions: 10
Worksheet time: 5mins
பின்வரும் பழமொழியை நிறைவு செய்க.
பெற்ற மனம் பித்து ___________________________
பிள்ளை மனம் வெள்ளை
உற்றார் நம் சொத்து
பிள்ளை மனம் கல்லு
பிள்ளை நம் சொத்து
கனிமொழி கணிதப் பாடத்தில் மிகவும் பின்தங்கி இருந்தாள். இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்து வந்ததால் இன்று அப்பாடத்தில் புலமை பெற்றுத் திகழ்கிறாள்.
இச்சூழலுக்கு ஏற்ற பழமொழி என்ன?
எறும்பு ஊரக் கல்லும் தேயும்
மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
தன் கையே தனக்கு உதவி
பின்வரும் பழமொழியை நிறைவு செய்க.
___________ ____________ __________ நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
குறளும் பொருளும் வாழ்வுக்குறுதி
ஒன்றும் மூன்றும் எண்ணுக்குறுதி
நாளும் பொழுதும் பல்லுக்குறுதி
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
கொடுக்கப்பட்டுள்ள பழமொழியை நிறைவு செய்க.
அடாது செய்பவன் ________________
விடாது படுவான்
படாது படுவான்
அன்றே கெடுவான்
அவசியம் கெடுவான்
இளமையிற் சோம்பல் கொண்டு உழைக்காமல் இருந்தால், முதுமையில் வறுமையில் வாட நேரிடும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
இளமையிற் சோம்பல் முதுமையில் வறுமை
இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை
இளமையிற் கல்வி சிலைமேல் எழுத்து
இப்படம் விளக்கும் பழமொழி என்ன?
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
புலி வாலைப் பிடித்தால் விடவா முடியும்?
புலி பசித்தால் தின்னாதது ஒன்னுமில்லை
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது.
இப்பழமொழியின் முழுமையான பொருள் என்ன?
நடந்து முடிந்த ஒரு காரியத்தை நினைத்து வருந்திப் பயனில்லை.
கைவிட்டுப் போன ஒரு பொருளை நினைத்து வருந்திப் பயனில்லை.
நடந்து முடிந்த ஒரு காரியத்தை அல்லது கைவிட்டுப் போன ஒரு பொருளை நினைத்து வருந்திப் பயனில்லை.
நாம் பழைய பெருமைகளைப் பேசி வாழ்வதால் எந்த ஒரு பயனுமில்லை; எனவே உரிய நடவடிக்கையில் இறங்குவதே சாலச் சிறந்தது.
சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் பழமொழியைத் தெரிவு செய்க.
தன் கையே தனக்கு உதவி
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
பணம் பத்தும் செய்யும்
பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும்
அற்ப அறிவு ஆபத்துக்கிடம்.
இப்பழமொழி தொடர்பான சரியான கருத்துகளைத் தெரிவு செய்க.
நமக்குப் போதிய அறிவு இருத்தல் அவசியம்
நம்மிடம் போதிய பணம் இருத்தல் அவசியம்
குறைவான அறிவு ஆபத்துக்கு வழிவகுத்துவிடும்
பல நூல்களைக் கற்பதால் அறிவு வளரும்
தம் குறையையும் இயலாமையையும் சொல்லத் துணிவு இல்லாமல் அதற்காக மற்றவரையும் மற்றவற்றையும் குறை கூறுவர்.
இவ்விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி?
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
ஆடிக்கறப்பதை ஆடிக்கற பாடிக்கறப்பதைப் பாடிக்கற
