wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் இலக்கியம் நாவல்- அத்தியாயம் 1 கருத்துணர்தல்

Total questions: 1

Worksheet time: 17mins

Name
Class
Date
1-5.

அத்தியாயம் 1: சிறுவயது நட்பு குழந்தைவேல் & தானப்பன்

சிறுவர்களான குழந்தைவேலும் தானப்பனும் இணை பிரியா நண்பர்களாக இருந்தார்கள். குழந்தைவேல் கதை சொல்வதில் திறமை பெற்றிருந்தான். பல கதைகளைத் தானே இட்டுக்கட்டி தானப்பனுக்குச் சுவைபடக் கூறுவான். தானப்பன் குழந்தைவேல் கூறும் கதைகளை ஆர்வமுடன் கேட்பான். சில வேளைகளில் அவனும் தான் கேட்ட, படித்த கதைகளைக் கூறுவான்.

பருவ நிலையின் மாற்றங்களுக்கு ஏற்றவாறு அவர்களின் பொழுதுபோக்கும் மாறும். கரித்துண்டைக் கொண்டு மீசை வரைதல், பட்டம் விடுதல், கோலி ஆடுதல், புள் ஆட்டம் என அவர்கள் இருவர் மட்டும் விளையாடிய விளையாட்டுகளுடன் மற்றச் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடும் சடுகுடுவும் சேர்ந்துகொண்டது. அவை அவர்களின் வாழ்க்கையை இன்பமாகக் கழிக்க வகை செய்தன.

அப்படி இன்பமாகச் சென்ற நாள்களில், ஒரு நாள், தானப்பனின் தாய் இறந்துவிடுகிறார். குழந்தைவேலுக்கு அந்த நாள் மறக்க முடியாத நாளாக ஆனது. தானப்பனின் தாய்போல் தன் தாயும் ஒரு நாள் இறந்துபோவர் என நினைக்க நினைக்க அவனுக்குச் சோகம் மனதைக் கௌவுகிறது. இதைத் தாயிடம் சொன்னபோது, அவர், "அம்மா போனால் பெண்டாட்டி வருவாள்," எனக் கூறி அவனைச் சமாதானம் செய்கிறார்.

இருப்பினும், தானப்பனோடு விளையாடும் போதெல்லாம் குழந்தைவேலுக்குத் தானப்பனின், தாயின் உயிரற்ற உடலே நினைவுக்கு வந்து சோகத்தில் ஆழ்த்தும். அதனால், அவனது கற்பனை தடைபட்டுக் கதை சொல்லும் வழக்கம் நின்று போனது; தானப்பனும் கதை சொல்லும்படிக் கேட்பதுமில்லை.

1.

கதை சொல்வதில் திறமையானவன் யார்?

4 lines
2.

குழந்தைவேலும் தானப்பனும்ன் விளையாடும் விளையாட்டுகள் இரண்டைக் குறிப்பிடவும்.

4 lines
3.

குழந்தைவேலின் சோகத்துக் காரணம் என்ன?

4 lines
4.

தானப்பனின் தாயார் மறைவு குழந்தைவேலிடம் ஏற்படுத்திய தாக்கம் எத்தகையது?

4 lines
5.

இவ்வத்தியாயத்தில் வெளிப்படும் குழந்தைவேலின் பண்புநலன்கள் இரண்டினைக் குறிப்பிடுக.

4 lines