wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வாக்கிய வகை

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வாக்கியம் ___________ , _____________ என இரு வகையில் உள்ளது.

a)

அமைப்பு , கருத்து

b)

தனி , கலவை

c)

அமைப்பு , கலவை

d)

தொடர் , கருத்து

2.

அமைப்பு அடிப்படையில் வாக்கியங்கள் 3 வகைப்படும். அவை___________, _________,_________.

a)

தனி , தொடர் , செய்தி

b)

தனி , தொடர் , கலவை

c)

செய்தி , வினா , கலவை

d)

உணர்ச்சி , தனி , தொடர்

3.

ஓர் எழுவாய் அல்லது பல எழுவாய்கள் ஒரே பயனிலையைப் பெற்று வருவது___________ வாக்கியமாகும்.

a)

தொடர்

b)

கலவை

c)

தனி

d)

அமைப்பு

4.

கீழே உள்ள கூற்றுகளில் எது தொடர் வாக்கியத்தைப் பற்றிய தவறான கூற்றுகளாகும்.

a)

ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடியும்

b)

ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் அதனால்,இதனால், ஏனெனில், இருப்பினும்

முதலிய இணைப்புச் சொற்களாலும் கருத்துத் தொடர்பாலும் இணைந்துவரும்.

c)

ஓர் எழுவாய் அல்லது பல எழுவாய்கள் ஒரே பயனிலையைப் பெற்று வரும்.

d)

ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்களை அல்லது செய்திகளை ஒரே வாக்கியத்தில் தரும்.

5.

இளவேந்தனும் இளமாறனும் பாடங்களை முறையாகப் படித்தனர்; தேர்வினைச் சிறப்பாகச் செய்தனர்.


இது எந்த வகை வாக்கியம் ஆகும்?

a)

தனி

b)

தொடர்

c)

கலவை

d)

உணர்ச்சி

6.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தனி வாக்கியங்களைத் தெரிவு செய்க.

a)

திவாகரன் புத்தகம் படித்தான்.

b)

கதிரவனும் ,ஷாரங்கினும் ஒன்றாகப் பந்து விளையாடினர்.

c)

டர்மின் கடைக்குச் சென்று புத்தகத்தை வாங்கினான்.

d)

சூரியன் தோன்றியது : ஆகையால் , பனி மறைந்தது.

7.

குமரனும் முருகனும் நன்றாகப் படித்தார்கள்; தேர்வில் சிறப்பான புள்ளிகள் பெற்றார்கள்.


இந்த வாக்கியங்களை தனி வாக்கியங்களாக மாற்றுக.

a)

1.குமரன் நன்றாகப் படித்து தேர்வில் சிறந்த

புள்ளிகளைப் பெற்றான்..

2. முருகன் நன்றாகப் படித்தான்.

b)

1. முருகன் நன்றாகப் படித்தான்.

2. முருகன் சிறப்பான புள்ளிகள் எடுத்தான்.

c)

1.குமரனும் முருகனும் நன்றாகப் படித்தார்கள்.

2. தேர்வில் சிறப்பான புள்ளிகள் பெற்றார்கள்.

d)

1. குமரன் தேர்வில் சிறப்பான புள்ளிகள் பெற்றான்.

2. முருகன் நன்றாகப் படித்தான்.

8.

இதில் எது கலவை வாக்கியத்தைப் பற்றிய தவறான கூற்றாகும்?

a)

ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்களை அல்லது செய்திகளை ஒரே வாக்கியத்தில் தருவது

b)

சில வாக்கியங்கள் ‘என்னும்’, ‘என்றும்’ முதலிய சொற்களைக் கொண்டிருக்கும்

c)

இவ்வாக்கியங்களில் சில சமயங்களில் அதனால், ஆகையால், இதனால், ஏனெனில், இருப்பினும் போன்ற இணைப்புச் சொற்கள் இருக்கும

d)

ஒரு முதன்மை வாக்கியத்தைச் சார்ந்து ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சார்பு வாக்கியங்கள் இடம் பெறும்

9.

வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்தது என்றும், சிக்கல் ஏற்பட்டால் அதைத் தீர்த்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்றும் அறிஞர் அறிவுரை கூறுவர்.


இது எவ்வகை வாக்கியம்?

a)

கலவை

b)

தொடர்

c)

தனி

d)

வினா

10.

Ø ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்களை அல்லது

செய்திகளை ஒரே வாக்கியத்தில் தருவது

Ø ஒரு முதன்மை வாக்கியத்தைச் சார்ந்து ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சார்பு வாக்கியங்கள் இடம் பெறும்.

Ø சில வாக்கியங்கள் ‘என்னும்’, ‘என்றும்’ 'ஆல்' 'ஓ'

முதலிய சொற்களைக் கொண்டிருக்கும்.


இது எவ்வகை வாக்கியத்தைக் குறிக்கிறது?

a)

தனி

b)

கலவை

c)

தொடர்

d)

உணர்ச்சி

11.

கீழ்க்காணும் தனிவாக்கியங்களைத் தொடர்வாக்கியமாக மாற்றுக.


கம்பர் சடையப்ப வள்ளலின் ஊருக்குச் சென்றார். கம்பர் இராமாயணத்தை இயற்றினார்.

a)

கம்பர் சடையப்ப வள்ளலின் ஊருக்குச் சென்றதோடு இராமாயணத்தை இயற்றினார்

b)

சடையப்ப வள்ளல் கம்பரின் ஊருக்குச் சென்றதும் கம்பர் இராமாயணத்தை இயற்றினார்.

c)

இராமாயணத்தை இயற்றுவதற்காகக் கம்பர் சடையப்ப வள்ளலின் ஊருக்குச் சென்றார்.

d)

கம்பர் சடையப்ப வள்ளலின் ஊருக்குச் சென்று இராமாயணத்தை இயற்றினார்.

12.

கீழ்க்காணும் வாக்கியங்களுள் தொடர் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

நான் குறித்த நேரத்தில் வந்தேன்; எனினும் சுமதியைக் காணவில்லை

b)

தென்னவனும் பிரமிளாவும் தங்கம் வென்றனர்.

c)

நாடு முன்னேற வேண்டுமென்றால், மக்கள் அயராது உழைக்க வேண்டும்.

d)

மணிமேகலை ஏழை எளியோருக்கு உணவளித்தாள்.

13.

தனி வாக்கியம் என்றால் என்ன?

a)

ஓர் எழுவாயும் பல பயனிலைகளையும் கொண்டு முடியும்.

b)

ஓர் எழுவாய் அல்லது பல எழுவாய்கள் ஒரே பயனிலையைப் பெற்று முடிவது.

c)

ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்களை ஒரே வாக்கியத்தில் தருவது

d)

பல வாக்கியங்கள் அதனால்,இதனால் முதலிய இணைப்புச் சொற்களாலும் இணைந்துவருவது

14.

ஒரு முதன்மை வாக்கியத்தைச் சார்ந்து ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சார்பு வாக்கியங்கள் இடம் பெறும்.


இக்கூற்று எவ்வகை வாக்கியத்தைக் குறிக்கின்றது?

a)

தனி

b)

தொடர்

c)

கலவை

d)

வினா

15.

அமைப்பு அடிப்படையில் வாக்கியங்கள் எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

a)

1

b)

2

c)

3

d)

4