Font size
Worksheetsஇலக்கணம்
Total questions: 20
Worksheet time: 7mins
தைப்பிங் ______________யில் படகோட்டி விளையாட மகிழ்ச்சியாக இருக்கும்.
ஏறி
ஏரி
அவன் தன் நண்பனுக்குக் கடிதம் எழுதி _____________யிலிட்டுத் தபாலில் சேர்த்தான்.
உறை
உரை
அந்தக் காலத்தில் வெண்ணெய்யை _______________யில் சேமித்து வைப்பது வழக்கம்.
உரி
உறி
அந்த ___________________ இறங்கிய கார் கட்டுப்பாட்டை _______________விபத்துக்குள்ளானது.
இரக்கத்தில்...இழந்து
இறக்கத்தில்......இலந்து
இரக்கத்தில்.....இளந்து
இறக்கத்தில்.....இழந்து
பிள்ளையாருக்கு ______________மாலை மிகவும் விருப்பமானது என்று அம்மா அடிக்கடி கூறுவார்.
அருகு
அறுகு
சமையலில் மும்முரமாக இருந்த என் அக்காள் வேகமாகக் காய்கறிகளை________________ போட்டார்.
அரிந்து
அறிந்து
தன் தாயின் _______________ அவனை வெகுவாகப் பாதித்திருந்தது.
இரத்தல்
இறத்தல்
சிற்றரசர்கள் பேரரசர்களுக்குத் ___________ செலுத்த வேண்டும் என்பது சட்டமாகும்.
திறை
திரை
அம்மா மீனை நன்றாகப் _____________ அனைவருக்கும் பரிமாறினார்.
பொறி
பொரி
நேற்று பெய்த கனத்த____________யால் _______________கரைப் புரண்டோடியது.
மாறி.......வெள்ளம்
மாரி........வெள்ளம்
மாறி......வெல்லம்
மாரி....வெல்லம்
கடலில் இருந்த கற்____________ நீக்கப்பட்டன.
பாரைகள்
பாறைகள்
தென்றல் இரவில் நாயைக் கண்டு ___________________.
அலறினாள்.
அலரினாள்.
தீயால் ஏற்பட்ட புகை மண்டலம் கண்ணை _____________.
மரைத்தது.
மறைத்தது.
என் அப்பா கப்பல் ______________முகத்தில் பணிப்புரிகிறார்.
துறை
துரை
கீதனின் புதிய சட்டையில் சேற்றின் ___________ பட்டது,
கறை
கரை
பூனை தன் நகத்தால் என்னைக் _________________.
கீரியது.
கீறியது
பெரிய கப்பல்கள் ஆழமான ________________யில் செல்லும்.
பரவை
பறவை
பந்தயத்தில் ______________ வேகமாய் ஓடும்.
கரி
வரி
பரி
நெரி
அகிலா தன் கோழிக்குஞ்சுகளுக்கு சத்தான ___________யைத் தூவினாள்.
உறை
நறை
திறை
இரை
பெரியவர்களின் _______________அறிவுரையைக் கேளாததால் இன்று ___________________ அடைக்கப்பட்டான்.
கூரிய.......சிறை
கூறிய.....சிரை
கூரிய....சிரை
கூறிய.....சிறை
