wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Oli Verupadu

Total questions: 15

Worksheet time: 13mins

Name
Class
Date
1.
  1. 1.விமலன் மேல் படிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்றான். அவன் தனக்கு தேவையான ___________________பொருட்களையும் பெட்டியில் எடுத்து வைத்தான்.

a)

அனைத்து

b)

அணைத்து

2.

2. கலா தன் நண்பர்களுடன் திடலில் பட்டம் விட்டுக் கொண்டிருந்தாள். கலாவின் பட்டத்தில் கட்டப்பட்டிருந்த நூல் _______________ பட்டம் கீழே விழுந்தது

a)

அருந்து

b)

அறுந்து

3.

3.தம்பி நண்பர்களுடன் திடலில் விளையாடினான் அதனால் அவன் வெள்ளை சட்டையில்________ பட்டது

a)

கரை

b)

கறை

4.

4.தங்க மாளிகை' நகை கடை லிட்டில் இந்தியாவில் இருக்கிறது. நேற்று சிலர் கடையில் புகுந்து _______________ அடித்தனர்

a)

கொல்லை

b)

கொள்ளை

5.

5.ரவியின் பள்ளியில் கலைநிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அவ்விழாவிற்கு அப்பள்ளியின்_____________ தலைமையாசிரியர் வந்திருந்தார்.

a)

முன்னாள்

b)

முன்னால்

6.

6.கலா அவளுடைய தோழிக்கு ஒரு கடிதம் எழுதினாள்.அதை ஓர் _____________ வைத்து அனுப்பினாள்.

a)

உரையில்

b)

உறையில்

7.

8.குண்டர்கள் பலர் தெருவில் சண்டை போட்டனர்.__________ செய்தவர்களை காவலர்கள் கைது செய்தனர்.

a)

கலகம்

b)

கழகம்

8.

9.கடலுக்குச் சென்ற ஏழை மீனவன் மீன்களைப் பிடிக்க __________வீசினான். நீண்ட நேரம் காத்திருந்தும் எந்த மீனும் கிடைக்கவில்லை

a)

வளை

b)

வலை

9.

10.காட்டுத்தீயால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் __________ சாம்பலாகின.

a)

எரிந்து

b)

எறிந்து

10.

11.மாணவர்கள்______________ வீட்டுப்பாடங்களையும் முடிக்க வேண்டும் என்று ஆசிரியர் எடுத்துரைத்தார்.

a)

அனை

b)

அணை

11.

12. மரத்திலிருந்து கீழே விழுந்ததால் சிறுவனின்_________ எலும்பு முறிந்தது.

a)

விலா

b)

விழா

12.
  1. 2015 ஆம் ஆண்டில் சென்னையில் ஏற்பட்ட_________ பேரிடர் காலமாக கருதப்பட்டது. அதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்தனர்.

a)

வெள்ளம்

b)

வெல்லம்

13.

திரு கோபால் ஒரு சிறந்த மருத்துவர்.________ குணம் கொண்ட அவர் ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்தார்.

a)

இறக்க

b)

இரக்க

14.

திடீரென்று பயங்கர இடி இடித்தது. மாலா அதிர்ச்சியில் ஒரு ________சிலை போல் நின்றாள்.

a)

கணம்

b)

கனம்

15.

அகிலன் பணத்தைத் திருடினான். ஆனால் பிடிபட்டதும் அவன் தன் நண்பன் மீது _______ சுமத்தினான்

a)

பழி

b)

பலி