wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உவமைத்தொடர் (படிவம் 4)

Total questions: 9

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல என்பதன் பொருள் யாது?

a)

துன்பத்துக்குமேல் துன்பம்.

b)

நல்ல நிலையில் உள்ள ஒன்றிற்கு மெல்ல மெல்ல கேடு விளைவித்தல்.

c)

ஒரு பொருள் சேதமடைவதைத் தடுக்க முடியாமை/பாதிப்பு ஏற்படுவது உறுதி

d)

எந்தப் பக்கமும் சார முடியாத இக்கட்டான நிலை

2.

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல என்பதன் பொருள் யாது?

a)

நிலையாமை

b)

நல்ல நிலையில் உள்ள ஒன்றிற்கு மெல்ல மெல்ல கேடு விளைவித்தல்

c)

ஒரு பொருள் சேதமடைவதைத் தடுக்க முடியாமை/பாதிப்பு ஏற்படுவது உறுதி

d)

நல்ல நிலையில் உள்ள ஒன்றிற்கு மெல்ல மெல்ல கேடு விளைவித்தல்

3.

நீர்மேல் எழுத்துப் போல என்பதன் பொருள் யாது?

a)

மனத்தில் ஆழமாகப் பதிதல்

b)

நிலையாமை

c)

ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்

d)

துன்பத்துக்குமேல் துன்பம்

4.

இருதலைக் கொள்ளி எறும்பு போல என்பதன் பொருள் யாது?

a)

பாதிப்பு ஏற்படுவது உறுதி.

b)

இணைந்தே இருப்பது/ விட்டுப் பிரியாமை.

c)

துன்பத்துக்குமேல் துன்பம்.

d)

எந்தப் பக்கமும் சார முடியாத இக்கட்டான நிலை.

5.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல என்பதன் பொருள் யாது?

a)

ஒன்றிற்கு மெல்ல மெல்ல கேடு விளைவித்தல்.

b)

இணைந்தே இருப்பது/ விட்டுப் பிரியாமை

c)

துன்பத்துக்குமேல் துன்பம்.

d)

பிரிவுக்குப் பிறகு ஏற்படும் துன்பம்.

6.

வானதி வறுமையான குடும்பத்தில் பிறந்தவள். குடும்பச் சூழல் காரணத்தினால், வானதியின் தந்தை கடன்காரர்களிடமிருந்து பணம் வாங்கியிருந்தார். கோவிட்-19 நோயினால் இவர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மறுநாள் உயிரிழந்தார். தந்தையை இழந்து தவித்த வானதிக்குக் கடன்காரர்களின் தொல்லை...

a)

இருதலைக் கொள்ளி எறும்பு போல

b)

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

c)

நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல

d)

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல

7.

மாலாவின் அப்பா அவளது பிடிவாதத்தைக் கண்டித்துக் கடுமையாகத் திட்டினார். அழுது கொண்டே அறையினுள் நுழைந்த மாலாவை அவளது அம்மா, சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அவள் அழுகையை நிறுத்தவில்லை. அதனால், அம்மா அப்பாவிடம் முறையிட்டார். அவரோ அம்மாவின் முறையீட்டைச் செவிமடுக்கவில்லை. இவர்கள் இருவருக்கிடையே அம்மா செய்வதறியாது தவித்தார்...

a)

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல

b)

இருதலைக் கொள்ளி எறும்பு போல

c)

நீர்மேல் எழுத்துப் போல

d)

யானை வாயில் அகப்பட்ட கறும்பு போல

8.

வறுமையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அமுதாவிற்கு நன்கு படித்துப் பட்டதாரியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதை அறிந்த அமுதாவின் தந்தை, வேறு வழியில்லாமல் வட்டி முதலையிடம் கடன் வாங்கியிருந்தார். அந்த கடனைத் திருப்பி கட்ட முடியவில்லை. அதனால், அமுதாவின் தந்தை அதிலிருந்து மீள முடியவில்லை; மன வேதனை அடைந்தார்.

a)

அனலில் இட்ட மெழுகு போல

b)

இருதலைக் கொள்ளி எறும்பு போல

c)

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

d)

நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல

9.

மகிழன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய மாணவன். எப்பொழுதும் ஆசிரியரின் கேள்விகளுக்கு முன்வந்து பதில் கூறும் மாணவனும் இவனே. ஆனால், ஒழுக்கமின்மையான நண்பர்களின் சேர்க்கையால் தவறான செயல்களில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டான். அவனது வாழ்க்கை திசை மாறிப்போனது.

a)

நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல

b)

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

c)

இலைமறை காய் போல

d)

இருதளைக் கொள்ளி எறும்பு போல