NEW
Font size
Worksheetsதிருக்குறள் புதிர்ப் போட்டி படிநிலை 2
Total questions: 10
Worksheet time: 5mins
கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பதை விளக்கும் குறள்
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
______________________________________.
நிறைவு செய்க.
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
கல்லார்கண் பட்ட திரு.
கற்றா ரனைத்திலர் பாடு.
மாணவர்களே... நாளை நம் பள்ளிக்கு சொற்பொழிவாளர் திரு.சுகி அவர்கள் வரவிருக்கிறார். அவரின் சொற்பொழிவைக் கூர்ந்து செவிமடுத்துச் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். சூழலுக்கு ஏற்ற குறளைத் தெரிவு செய்க.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை.
அன்னை திரேசா ஏழை எளியவர்களிடம் அன்பு கொண்டு, பல தொண்டுகள் செய்துள்ளார். அதனால், மக்கள் அவரைத் தெய்வத்திற்குச் சமமாக கருதி மதிக்கின்றனர்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்.
தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
கோடிடப்பட்ட சொல்லுக்குப் பொருத்தமான பொருள் யாது?
தேவர்
மாணவன்
மிருகம்
மனிதர்
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
நன்றி எனும் சொல்லின் பொருள் யாது?
கடமை
நட்பு
உதவி
கடுஞ்சொல்
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
___________________________________.
குறளை நிறைவு செய்க.
என்னுடைய ரேனு மிலர்.
பெருக்கம் பெருமித நீர்த்து
உவகையும் ஏதம் இறைக்கு.
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
ஏற்ற குறளை தெரிவு செய்க.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.
பொருளுக்கு ஏற்புடைய குறளைத் தெரிவு செய்.
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ பிற.
மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்... இக்குறளில் இன்னாச் சொல் நான்கும் என்பது எதனைக் குறிக்கிறது?
பொறுமை, பேராசை, மகிழ்ச்சி, கடுமை
பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல்
எரிச்சல், பொறுமை, கடுமை, வருத்தம்
