wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திரு.குமார் கடன் பற்று அட்டையின் மதிப்பு RM500 000 ஆகும். அவர் தனது நிறுவனத்திற்காக RM234 834க்கு தளவாடப் பொருள்களை வாங்கினார். அவரின் கடன் பற்று அட்டையின் மீத மதிப்பு என்ன?

a)

RM265 166

b)

RM756 156

2.

குணவதி தனது சிகை அலங்கார வியாபாரத்தை விரிவுபடுத்த தனது சேமிப்புக் கணக்கிலிருந்த RM300 000ஐ பயன்படுத்தினார். அவர் அப்பணத்தை 25 மாதத்தில் சேமித்தார். அவரின் ஒரு மாதச் சேமிப்பு எவ்வளவு?

a)

RM13 000

b)

RM12 000

3.

கணேசன் தன் வங்கி சேமிப்பில் RM364 240.75 சேமித்திருந்தார். அவர் மேலும் RM12 240ஐ தனது வங்கிச் சேமிப்பில் சேர்த்தார். தற்போது அவரின் மொத்த சேமிப்பு எவ்வளவு?

a)

RM376 480.75

b)

RM275 132.85

4.

முத்தியாரா வீட்டு மேம்பாட்டாளர் வங்கியிலிருந்து இரண்டு காசோலைகளைப் பெற்றது. அவை முறையே RM471 850, RM365 421.20 ஆகும். அந்நிறுவனம் மொத்த தொகையிலிருந்து RM745 364.90ஐ செலவு செய்தது. அவர்களிடம் உள்ள மீதத் தொகை எவ்வளவு?

a)

RM837 271.20

b)

RM91 906.30

5.

ஒரு மிதிவண்டியின் விலை RM387.50 ஆகும். ஜடா நிறுவனம் 40 மிதிவண்டிகளை வாங்கியது. அந்நிறுவனம் செலுத்த வேண்டிய மொத்த பணம் எவ்வளவு?

a)

RM15 500

b)

RM15 200

6.

கீர்த்தி தன் கையிருப்பில் RM48 000 வைத்திருந்தார். அதில் RM26 543-ஐ கல்வி செலவுக்காக நிரந்தர சேமிப்பிற்கு மாற்றினார். அப்படியானால், அவரிடம் உள்ள மீதப் பணம் எவ்வளவு?

a)

RM21 457

b)

RM23 567

7.

சுமித்ரா ஒவ்வொரு ஆண்டும் RM450 வீதம் 3 ஆண்டுகள் சேமிப்பார். அவர் சேமித்த பணம் எவ்வளவு?

a)

RM1 350

b)

RM1 450

8.

ரவி, RM25 000 விலை மதிப்புடைய ஒரு மகிழுந்து பழுது பார்க்கும் பட்டறையைத் திறக்க எண்ணினார். ஒவ்வொரு மாதமும் RM5 000ஐ சேமித்தார். எத்தனை மாதத்திற்கு அவர் பணத்தைச் சேமிக்க வேண்டும்?

a)

10

b)

5

9.

திரு.கதிர் தமது சேமிப்பில் இருந்த RM99 450.67இல் இருந்து RM23 400ஐ ஆடம்பர அடுக்குமாடி வீடு ஒன்றை வாங்க முன் பணமாகச் செலுத்தினார். பின் தமது சேமிப்பிலிருந்து RM15 945.90ஐ அப்புதிய வீட்டிற்கான தளவாடப் பொருள்களை வாங்கினார். அவரிடமுள்ள மீதப் பணம் எவ்வளவு?

a)

RM76 050.67

b)

RM60 104.77

10.

ஒரு பேரங்காடியில் வியாபாரம் செய்ய 12 பேர் RM86 436ஐ முதலீடு செய்தனர். ஒருவர் முதலீடு செய்த தொகையைக் கணக்கிடுக.

a)

RM7 203

b)

RM8 203