Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 11

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் எவ்வகை ஆகுபெயர்


சீரான உணவுப் பழக்கமில்லாத வாழ்க்கை முறையினால் நீரிழிவு நோய் தாக்கப்பட்டு சிறுநீரகம் செயலிழந்தவர்களின் எண்ணிக்கையில் மலேசியா முதலிடம் வகிக்கிறது

a)

பொருளாகு பெயர்

b)

இடவாகு பெயர்

c)

சினையாகு பெயர்

d)

காலவாகு பெயர்

2.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் எவ்வகை ஆகுபெயராகும்


இளமாறன் வீட்டுக்கு வெள்ளை அடித்தான்.

a)

தொழிலாகு பெயர்

b)

இடவாகு பெயர்

c)

பண்பாகு பெயர்

d)

பொருளாகு பெயர்

3.

தொழிலாகு பெயரை ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மருதன் தோட்டத்துக்குச் சென்று கத்தரி நட்டான்.

b)

அருணன் கோவிலில் பெற்ற பொங்கலை உண்டான்.

c)

முகுந்தன் அருகிலுள்ள ஆற்றில் அழுக்கைத் துவைத்தான்.

d)

பினாங்கில் நடைபெற்ற கோர விபத்தைக் கண்டு நாடே அதிர்ந்தது.

4.

கீழ்க்காண்பனவற்றுள் ஆகுபெயரைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அந்த மேடை நாடகத்திற்குத் தலைக்குப் பத்து ரிங்கிட் வசூலிக்கப்படும்.

b)

தொழில்துறை முன்னேற்றத்தால் உலக மக்கள் தூய்மைக் கேட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

c)

இனிப்புப் பலகாரங்களை அதிகம் உண்பது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.

d)

நேற்று நடைபெற்ற காற்பந்து போட்டியில் மலேசிய விளையாட்டாளர்கள் சிறப்பாக விளையாடினர்

5.

கீழ்க்காணும் வாக்கியங்களில் சினையாகு பெயரை ஏற்றுவந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மாநில பேச்சுப் போட்டியில் எங்கள் பள்ளி பங்கேற்றது.

b)

தமிழ்ப் புத்தாண்டுக்கு அம்மா பொங்கல் வைத்தார்

c)

வீட்டுக்கு வந்த உறவினர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினோம்

d)

தோட்டத்தில் நான் நட்ட ரோஜா பூத்துக் குலுங்கியது

6.

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆகுபெயர் வகைகளில் எது இடவாகு பெயர்?

a)

உலகம் அழுதது

b)

தாமரை மலர்ந்தது

c)

கத்தரி நட்டாள்

d)

கார்த்திகை மலர்ந்தது

7.

பின்வருவனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க

a)

தோட்டத்தில் நட்ட ரோஜா மலர்ந்தது - இடவாகு பெயர்

b)

குமணன் பொரியல் தின்றான் - பண்பாகு பெயர்

c)

நேற்று நடந்த போட்டியில் எங்கள் பள்ளி வென்றது – காலவாகு பெயர்

d)

படம் பார்க்கத் தலைக்கு RM16 செலுத்தினோம் – சினையாகு பெயர்

8.

கீழ்காணும் புணரியல் சொற்களில் மிகச் சரியானவற்றைத் தெரிவு செய்க.

i பதின்நான்கு iii கீழ்மேற்கு

ii எவ்வேழு iv ஒன்பதொன்பது

a)

i, ii

b)

i, iii

c)

ii, iii

d)

ii, iv

9.

கீழ்க்காணும் அட்டவணையில் சரியான புணர்ச்சியைத் தெரிவு செய்க

a)

மேற்கு + திசை = மேற்றிசை

b)

ஏழு + ஏழு = ஏழேழு

c)

ஒன்பது + ஒன்பது = பத்தொன்பது

d)

எட்டு + பத்து = பதினெட்டு

10.

கீழ்க்காணும் அட்டவணையில் சரியாகப் பிரித்தெழுதப்பட்டுள்ளதைத் தெரிவு செய்க

a)

முப்பது = பத்து + மூன்று

b)

மேனாடு = மேற்கு + நாடு

c)

நந்நான்கு= நா + நான்கு

d)

வடமேற்கு= வட + மேற்கு

11.

கீழ்காணும் புணரியல் சொற்களில் மிகச் சரியானவற்றைத் தெரிவு செய்க.

i பத்து + பத்து = பப்பத்து

ii வடக்கு + நாடு = வடனாடு

iii ஏழு + பத்து = எழுபது

iv பத்து + ஏழு = எழுபது

a)

i, ii

b)

i, iii

c)

ii, iii

d)

ii, iv