wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

காலம் பறக்குதடா! அணி சிறப்பு

Total questions: 11

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் கவிதை அடிக்கேற்ற அணிச்சிறப்பைத் தேர்ந்தெடு.

ஊற்றுப் பெருக்கெனவே - இன்பம்

ஊறத் திளைக்கின்றார்!

a)

திரிபு அணி

b)

உருவக அணி

c)

உவமை அணி

d)

தற்குறிப்பேற்ற அணி

2.

கீழ்க்காணும் கவிதை அடிக்கேற்ற அணிச்சிறப்பைத் தேர்ந்தெடு.

ஒன்றிச் செயல்புரிந்தால் - நாம்

உச்சிக் குயர்வோமென

ஒன்றி முறைவகுப்பாய்! - சின்னாள்

a)

திரிபு அணி

b)

பின்வருநிலை அணி

c)

உவமை அணி

d)

தற்குறிப்பேற்ற அணி

3.

கீழ்க்காணும் கவிதை அடிக்கேற்ற அணிச்சிறப்பைத் தேர்ந்தெடு.

நேற்றுத் திருந்தியவர் - உன்னை

நோக்கிப் பழகியவர்

ஊற்றுப் பெருக்கெனவே - இன்பம்

ஊறத் திளைக்கின்றார்!

காற்றுக் கிடையினிலே - அலை

a)

திரிபு அணி

b)

பின்வருநிலை அணி

c)

உவமை அணி

d)

தற்குறிப்பேற்ற அணி

4.

கீழ்க்காணும் கவிதை அடிக்கேற்ற அணிச்சிறப்பைத் தேர்ந்தெடு.

கோளம் வலம்வரவே - உலகம்

கோலம் புனையுதடா!

a)

திரிபு அணி

b)

பின்வருநிலை அணி

c)

உவமை அணி

d)

தற்குறிப்பேற்ற அணி

5.

கீழ்க்காணும் கவிதை அடிக்கேற்ற அணிச்சிறப்பைத் தேர்ந்தெடு.

நாளும் முழங்குகின்றாய் - அந்த

நாளில் இருந்ததெல்லாம்!

காலப் பயனறியாய்!- உய்வைக்

a)

திரிபு அணி

b)

பின்வருநிலை அணி

c)

உவமை அணி

d)

தன்மை நவிற்சி அணி

6.

கீழ்க்காணும் பொருளின் அணியைத் தேர்ந்தெடு.

சீர்களில் முதல் எழுத்து மட்டும் வேறுபட்டிருக்க, மற்றவை எல்லாம் அதே எழுத்துகளாக ஒன்றி வருவது

a)

திரிபு அணி

b)

பின்வருநிலை அணி

c)

உவமை அணி

d)

தன்மை நவிற்சி அணி

7.

கீழ்க்காணும் பொருளின் அணியைத் தேர்ந்தெடு.

ஒரு கவிதையில் முன்னர் வந்த சொல்லே திரும்பவரினும் அல்லது முன்னர் வந்த பொருளே பின்னர்த் திரும்ப வருதல்

a)

திரிபு அணி

b)

பின்வருநிலை அணி

c)

உவமை அணி

d)

தன்மை நவிற்சி அணி

8.

கீழ்க்காணும் பொருளின் அணியைத் தேர்ந்தெடு.

உவமையைப் பொருளும் வேற்றுமை இன்றி ஒன்றென கொள்வது. முதலில் உவமைப்படுப்பொருளும் அடுத்து உவமையும் வருதல்.

a)

திரிபு அணி

b)

உருவக அணி

c)

உவமை அணி

d)

தன்மை நவிற்சி அணி

9.

கீழ்க்காணும் பொருளின் அணியைத் தேர்ந்தெடு.

ஒன்றன் பண்பு, தொழில், பயன் ஆகியவை நன்கு விளங்குமாறு ஒத்ததை ஒப்பிட்டுக் கூறுவது. இதில் முதலில் உவமையும் அடுத்து உவமைப்படுபொருளும் வரும்.

a)

திரிபு அணி

b)

உருவக அணி

c)

உவமை அணி

d)

தன்மை நவிற்சி அணி

10.

கீழ்க்காணும் பொருளின் அணியைத் தேர்ந்தெடு.

கவிஞர், ஓர் அஃறிணைப் பொருளை உயர்திணையாக உருவகம் செய்து தன் குறிப்பினையும் கருத்தையும் அதன்மேல் ஏற்றிக் கூறுதல்.

a)

தற்குறிப்பேற்ற அணி

b)

உருவக அணி

c)

உவமை அணி

d)

தன்மை நவிற்சி அணி

11.

கீழ்க்காணும் பொருளின் அணியைத் தேர்ந்தெடு.

ஒன்றன் தன்மையை அப்படியே இயல்பாக அழகுபட நவில்வது.

a)

தற்குறிப்பேற்ற அணி

b)

உருவக அணி

c)

உவமை அணி

d)

தன்மை நவிற்சி அணி