wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் படிவம் 4

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இழுக்கல் உடையுழி _____________ அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

a)

ஊற்றுக்கோள்

b)

உற்றுக்கோல்

c)

ஊற்றுக்கோல்

d)

ஊற்றுகோல்

2.

சரியான திருக்குறளைத் தெரிவு செய்க.

a)

விறைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்

b)

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

c)

விரைந்து தொழில்கெட்கும் ஞாலம் நிரந்தினது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்

d)

ஊடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்

உடையது உடையரோ மற்று

3.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல் எனும் திருக்குறளுக்குப் பொருள் யாது?

a)

சேற்று நிலத்தில் ஊன்றுகோல் தேவை இல்லாதது போல் வாழ்க்கையில் வழிதவற நேரும்போது ஒழுக்கமுடையவரின் அறிவுரையானது துணை நிற்கும்.

b)

வழுக்காத நிலத்தில் நடப்பார் போல வாழ்க்கையில் வழிதவற நேரும்போது ஒழுக்கமுடையவரின் அறிவுரையானது துணை நிற்கும்.

c)

வழுக்கும் சேற்று நிலத்தில் நடப்பார்க்கு ஊன்றுகோல் உதவுவதுபோல வாழ்க்கையில் வழிதவற நேரும்போது ஒழுக்கமுடையவரின் அறிவுரையானது துணை நிற்கும்.

d)

வழுக்கும் சேற்று நிலத்தில் நடப்பார்க்கு ஊன்றுகோல் உதவுவதுபோல வாழ்க்கையில் வழிதவற நேரும்போது ஒழுக்கமுடையவரின் அறிவுரையானது துணை நிற்காது.

4.

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினது

சொல்லுதல் வல்லார்ப் பெறின் எனும் திருக்குறளின் பொருள் யாது?

a)

கருத்துகளை முறையாகவும் இனிமையாகவும் சொல்லாதவர் சொன்ன வேலையை உலகத்தார் உடனே செய்வார்கள்

b)

கருத்துகளை முறையாகவும் இனிமையாகவும் சொல்லும் ஆற்றலுள்ளவர் சொன்ன வேலையை உலகத்தார் உடனே செய்வார்கள்

c)

கருத்துகளை முறையாகவும் இனிமையாகவும் சொல்லும் ஆற்றலுள்ளவர் சொன்ன வேலையை உலகத்தார் உடனே செய்யமாட்டார்கள்

d)

கருத்துகளை உற்சாகத்துடன் ஆற்றலுள்ளவர் சொன்ன வேலையை உலகத்தார் உடனே செய்வார்கள்

5.

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்

உடையது உடையரோ மற்று எனும் திறக்குறளின் பொருள் யாது?

a)

ஊக்கம் உடையவர்கள்தாம் செல்வம் இல்லாதவராகக் கருதப்படுவார்கள். ஊக்கம் இல்லாதவர்கள் எவ்வகைச் செல்வங்களைக் கொண்டிருந்தாலும் உடையவர்களாக ஆகமாட்டார்கள்.

b)

ஊக்கம் இல்லாதவர் செல்வம் உடையவர்களாகக் கருதப்படுவார்கள். ஊக்கம் இல்லாதவர்கள் எவ்வகைச் செல்வங்களைக் கொண்டிருந்தாலும் உடையவர்களாக ஆகமாட்டார்கள்.

c)

ஊக்கம் உடையவர்கள்தாம் செல்வம் உடையவர்களாகக் கருதப்படுவார்கள். ஊக்கம் இல்லாதவர்கள் எவ்வகைச் செல்வங்களைக் கொண்டிருந்தாலும் உடையவர்களாக ஆகமாட்டார்கள்.

d)

ஊக்கம் உடையவர்கள்தாம் செல்வம் உடையவர்களாகக் கருதப்படுவார்கள். ஊக்கம் இருப்பவர்களும் கூட எவ்வகைச் செல்வங்களைக் கொண்டிருந்தாலும் உடையவர்களாக ஆகமாட்டார்கள்.

6.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல் எனும் திருக்குறளுக்கு ஏற்ற சூழல் யாது?

a)

மங்கை தனது வாழ்வில் எத்தனை துன்பங்கள் கண்டாலும் சோர்வுடையமாட்டாள்.

b)

குமரன் வாழ்க்கையில் துன்பம் நேரும் பொழுது அப்துல் கலாம் கூறிய அறிவுரைகளை நினைவில் கொள்வான்.

c)

மாறன் தனது வியாபாரம் வீழ்ச்சி அடைந்தாலும் மேலும் முயற்சியுடன் செயல்பட்டான்.

d)

.மலர் தனது வாழ்வில் நெறியைக் கடைப்பிடித்து வாழ்கிறாள்.

7.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல் எனும் திருக்குறளில் இழுக்கல் எனும் சொல் எதனைக் குறிக்கிறது?

a)

வழுக்கும்

b)

நொறுக்கும்

c)

சிவக்கும்

d)

இழுத்து

8.

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினது

சொல்லுதல் வல்லார்ப் பெறின் எனும் திருக்குறளில் விரைந்து என்ற சொல் எதனைக் குறிக்கிறது?

a)

காலத்தை மதிக்காமல்

b)

காலம் தாழ்த்தி

c)

காலம் தாழ்த்தாமல்

d)

காலத்தைப் பொருட்படுதாமல்

9.

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்

உடையது உடையரோ மற்று எனும் திருக்குறளில் உடையர் என்ற சொல் எதனைக் குறிக்கிறது?

a)

நெறி உடையவர்

b)

வீடு உடையவர்

c)

செல்வம் பெற்றுள்ளவர்

d)

புகழ் உடையவர்

10.

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்

உடையது உடையரோ மற்று எனும் திருக்குறளில் ஊக்கம் என்ற சொல் எதனைக் குறிக்கிறது?

a)

பண்பு

b)

நெறி

c)

மனவெழுச்சி

d)

கருணை

11.

கீழ்க்காணும் செய்யுளில் விடுப்பட்டுள்ள சொல்லை நிரப்புக.


சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை ___________

தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான்

a)

அரங்கிடப்பத்

b)

அறங்கிடப்பத்

c)

அறங்கிடப்ப

12.

செய்யுளில் விடுப்பட்டுள்ள சொற்றொடரை தேர்ந்தெடுக.


சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத்

தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் - மாதர்

அருகூட்டும் ______________ ________________

ஒரு கூட்டில் வாழ உலகு

a)

பைங்கிளியும் ஆடற்பருந்தும்

b)

கிளியும் ஆடற்பருந்தும்

c)

பைங்கிளியும் பருந்தும்

13.

கீழ்க்காணும் செய்யுள் அடிகளின் பொருள்___________


அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்

ஒரு கூட்டில் வாழ உலகு.

a)

பாலும் பழமும் ஊட்டி வளர்க்கும் மென்மை குணமுடைய பச்சைக்கிளியும் போராட்ட குணமுடைய வலிய பருந்தும் பகைமை நீங்கி ஒரே கூட்டிற்குள் வாழும் நிலை உள்ளது.

b)

மென்மை குணமுடைய பச்சைக்கிளியும் போராட்ட குணமுடைய வலிய பருந்தும் பகைமை நீங்கி ஒரே கூட்டிற்குள் வாழும் நிலை உள்ளது.

c)

மென்மை குணமுடைய பச்சைக்கிளியும் போராட்ட குணமுடைய வலிய பருந்தும் ஒரே கூட்டிற்குள் வாழும் நிலை உள்ளது.

14.

சரியான இணைகளைத் தேர்ந்தெடுக.

a)

சீத மதிக் = நிலவு போன்ற

b)

தாதவிழ் = மகரந்தப்பொடி சிந்துகின்ற

c)

செம்மை அறங்கிடப்பத் = சிறந்த அறங்கள் நிலைத்து நிற்கும்

15.

செய்யுள் அடிகளை வரிசைப்படுத்துக.


1. அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்


2 சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத்


3. ஒரு கூட்டில் வாழ உலகு.


4. தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் - மாதர்

a)

1, 2, 3, 4

b)

4, 2, 1, 3

c)

2, 4, 1, 3

16.

கீழ்க்காணும் செய்யுளின் பொருளைத் தேர்தெடுக.

சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத்

தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் - மாதர்

அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்

ஒரு கூட்டில் வாழ உலகு.

a)

குளிர்ந்த நிலவு போன்ற வெண்கொற்றக் குடை நிழலில் வீற்றிருக்கின்ற நளமன்னன் மகரந்தப்பொடி சிந்துகின்ற மலர்மாலையை அணிந்தவன் ஆவான். அவன் சிறந்த அறங்கள் நிலைத்து நிற்கும் வகையில் தன் நாட்டைத் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் ஆண்டு வந்தான். அவன் நாட்டில் பெண்கள் பாலும் பழமும் ஊட்டி வளர்க்கும் மென்மை குணமுடைய பச்சைக்கிளியும் போராட்ட குணமுடைய வலிய பருந்தும் பகைமையுடன் ஒரே கூட்டிற்குள் வாழும் நிலை உள்ளது.

b)

குளிர்ந்த நிலவு போன்ற வெண்கொற்றக் குடை நிழலில் வீற்றிருக்கின்ற நளமன்னன் மகரந்தப்பொடி சிந்துகின்ற மலர்மாலையை அணிந்தவன் ஆவான். அவன் சிறந்த அறங்கள் நிலைத்து நிற்கும் வகையில் தன் நாட்டைத் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் ஆண்டு வந்தான். அவன் நாட்டில் பாலும் பழமும் ஊட்டி வளர்க்கும் வன்மை குணமுடைய பச்சைக்கிளியும் போராட்ட குணமுடைய வலிய பருந்தும் பகைமை நீங்கி ஒரே கூட்டிற்குள் வாழும் நிலை உள்ளது.

c)

குளிர்ந்த நிலவு போன்ற வெண்கொற்றக் குடை நிழலில் வீற்றிருக்கின்ற நளமன்னன் மகரந்தப்பொடி சிந்துகின்ற மலர்மாலையை அணிந்தவன் ஆவான். அவன் சிறந்த அறங்கள் நிலைத்து நிற்கும் வகையில் தன் நாட்டைத் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் ஆண்டு வந்தான். அவன் நாட்டில் பெண்கள் பாலும் பழமும் ஊட்டி வளர்க்கும் மென்மை குணமுடைய பச்சைக்கிளியும் போராட்ட குணமுடைய வலிய பருந்தும் பகைமை நீங்கி ஒரே கூட்டிற்குள் வாழும் நிலை உள்ளது.