wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆத்திசூடி

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

அறம் செய விரும்பு

a)

தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்

b)

தருமம் மற்றும் தீமை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்

2.

ஆறுவது சினம்

a)

கோபத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

b)

கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

3.

இயல்வது கரவேல்

a)

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.

b)

கொடுக்க இயலாததை இல்லை என்று மறைக்கக்கூடாது.

4.

ஈவது விலக்கேல்

a)

பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.

b)

நமக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.

5.

உடையது விளம்பேல்

a)

நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது

b)

பிறரிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.

6.

ஊக்கமது கைவிடேல்

a)

முயற்சியை விட்டு விடலாம்.

b)

முயற்சியை விட்டு விடக்கூடாது.

7.

எண்ணெழுத் திகழேல்

a)

எண்களையும் மொழியையும் அலட்சியம் செய்யாமல் கற்க வேண்டும்.

b)

எண்களையும் மொழியையும் அலட்சியம் செய்து கற்க வேண்டும்.

8.

ஏற்ப இகழ்ச்சி

a)

உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.

b)

உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகாது.

9.

ஆத்திசூடியை எழுதியவர் யார்?

a)
b)
c)
d)
10.

மேற்காணும் படம் எந்த ஆத்திசூடியைக் குறிக்கின்றது?

a)

அறம் செய்ய விரும்பு

b)

ஐய மிட்டுண்

c)

இயல்வது கரவேல்

d)

ஒப்புர வொழுகு

11.

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.

a)

அறஞ்செய விரும்பு

b)

இயல்வது கரவேல்

c)

ஈவது விளக்கேல்

12.

இயல்வது கரவேல். தவறான படம் எது?

a)
b)
c)
13.
a)

இயல்வது கரவேல்

b)

உடையது விளம்பேல்

c)

ஊக்கமது கைவிடேல்