wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

THURUPPIDITHAL

Total questions: 10

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

1. W,X,Y மற்றும் Z எனும் நான்கு ஆணிகள் வெவ்வேறான திரவப் பொருள்களில் வைக்கப்பட்டன.


W - குழாய் நீர்

X - எண்ணெய்

Y- கொதி நீர்

Z- மழை நீர்


திரவப் பொருள்களில் வைக்கப்பட்ட ஆணிகளில் எது துருப்பிடிக்காது?

a)

W

b)

X

c)

Y

d)

Z

2.

2. சுபாஷினி பயன்படுத்தும் இரும்பு வளையல் துருப்பிடித்திருக்கிறது. அத்துருப்பிடித்தலைத் தவிர்க்கும் வழிகளில் மிகவும் பொருத்தமானது எது?

a)

சாயம் பூசுதல்

b)

நெகிழி உறையிடுதல்

c)

மசகு பூசுதல்

d)

முலாம் பூசுதல்

3.

3. சரண் தனது மிதிவண்டி துருப்பிடித்தலைத் தவிர்க்க எண்ணினான். அவன் என்ன செய்ய வேண்டும்?

a)

சலவைத் தூளைக் கொண்டு கழுவ வேண்டும்.

b)

தூரிகையைக் கொண்டு அமிலத் திரவம் பூச வேண்டும்.

c)

தூரிகையைக் கொண்டு எண்ணெய் பூச வேண்டும்.

d)

தூரிகையைக் கொண்டு சாயம் பூச வேண்டும்.

4.

4. துருப்பிடிக்கப்பட்ட பாலங்கள் ஏன் உடனடியாக சாயம் பூசப்பட வேண்டும்?

a)

மீண்டும் புதிய பாலம் அமைக்க வேண்டியதில்லை

b)

பொது மக்களின் உடல் நலத்தை உறுதி செய்ய

c)

பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய

d)

பாலம் அழகாக இருப்பதை உறுதி செய்ய

5.

5. கீழ்க்காண்பனவற்றுள் எது இரும்புப் பொருள்கள் துருப்பிடிப்பதனால் ஏற்படும் விளைவு அல்ல?

a)

பணவிரயம் ஏற்படும்

b)

பொருள்களின் உறுதித்தன்மை குறையும்

c)

பொருள்கள் தேய்மானம் அடையும்

d)

பொருள்களின் ஆயூட்காலம் நீடிக்கும்

6.

6. பின்வருவனவற்றுள் துருப்பிடித்தலின் காரணிகளைத் தேர்ந்தெடுக.


அ - நீர்

ஆ - சூரிய ஒளி

இ - காற்று

ஈ - வெப்பம்

a)

அ,ஆ

b)

அ,இ

c)

அ,ஈ

d)

இ,ஈ

7.

7. கீழ்க்காணும் பொருள்களில் துருப்பிடிப்பதிலிருந்து பாதுகாக்கும் சிறந்த முறையைத் தெரிவு செய்க.

a)

வேலி - எண்ணெய் பூசுதல்

b)

கரண்டி - சாயம் பூசுதல்

c)

சாவி - மெழுகிடுதல்

d)

பேருந்து - சாயம் பூசுதல்

8.

8. கீழ்க்காணும் அனைத்தும் துருப்பிடிப்பதனால் ஏற்படும் நன்மைகளாகும், ஒன்றைத்தவிர....

a)

பொருள் அசுத்தமாவதைத் தவிர்க்க முடியும்

b)

பண விரயம் அதிகம் ஏற்படும்

c)

பொருளின் ஆயுட்காலம் நீடிக்கும்

d)

பொருளின் அழகைப் பாதுகாக்க முடியும்

9.

9. செல்வி இலக்‌ஷனா போர்டிக்சன் கடற்கரை பகுதிக்குப் புதிதாக குடியேறினார். அவருடைய மகிழுந்து விரைவாக துருப்பிடிப்பதை உணர்ந்தார். இச்சிக்கலுக்கான காரணத்தை அனுமானிக்கவும்.

a)

அதிகமான வெப்பக் காற்று வீசுகிறது

b)

அதிக ஈரப்பதம் கொண்ட காற்று படுகிறது

c)

உப்பு நிறைந்த காற்று படுகிறது

d)

அதிக உப்பு கலந்த நீர் படுகிறது

10.

10. துருப்பிடித்தலுக்கான காரணிகள் யாவை?

a)

நீர்

b)

காற்று

c)

உப்பு

d)

நீரும் காற்றும்