wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கள்ளாமை

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்

கள்ளாமை காக்கதன் நெஞ்சு


என்ற திருக்குறளின் வழி ஒரு மனிதன் பிறரிடமிருந்து எதனை வஞ்சித்துக்கொள்ளக் கூடாது என்கிறார்?

a)

தன்மையான பொருள்

b)

தன்மையான செல்வம்

2.

உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வே மெனல்


என்ற திருக்குறள் வாயிலாக திருவள்ளுவர்

a)

மற்றவர் பொருளை அவர்களுக்குத் தெரியாமல் திருட வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதிப்பதும் தீமையாகும் என்கிறார்.

b)

அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூட திருட எண்ணக்கூடாது என்கிறார்.

c)

உயிர்களை நேசிக்கும் ஆசையைக் கொண்டவரிடம், அடுத்தவர் பொருளை திருடும் மயங்கிய அறிவு இருக்காது என்கிறார்.

3.

களவினா லாகிய ஆக்கம் அளவிறந்

தாவது போலக் கெடும்


என்ற திருக்குறளில் இடம்பெற்ற களவு என்ற சொல்லின் பொருள் யாவை?

a)

கொலை

b)

திருட்டு

c)

கொள்ளை

d)

பொய்

4.

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்

வீயா விழுமந் தரும்


என்ற திருக்குறளில் இடம்பெற்ற காதல் என்ற சொல் உணர்த்தும் பொருள் யாது?

a)

மகிழ்ச்சி

b)

கோபம்

c)

ஆசை

5.

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்


இதில் எந்த நேரத்திற்காக களவு செய்பவர் காத்திருப்பதாகத் திருவளுவர் கூறுகிறார்?

a)

மற்றவர் வேலை செய்யும் நேரம்

b)

மற்றவர் சோர்ந்திருக்கும் நேரம்

c)

மற்றவர் மகிழ்ச்சியாக இருக்கும் நேரம்

6.

அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்

கன்றிய காத லவர்


களவு செய்து பிறர் பொருளில் வாழ நினைக்கும் மனிதர்கள் எந்த நெறியை வாழ்க்கையில் கடைபிடிக்காமல் வாழ்வர் என திருவள்ளுவர் கூறுகிறார்?

a)

அன்பு

b)

கருணை

c)

சிக்கனம்

7.

களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்

ஆற்றல் புரிந்தார்க ணில்


திருக்குறளில் வண்ணமிடப்பட்ட சொல் உணர்த்தும் கருத்து யாது?

a)

களவு என்பதற்குக் காரணமான கூரிய அறிவு

b)

களவு என்பதற்குக் காரணமான மயங்கிய அறிவு

c)

களவு என்பதற்குக் காரணமான ஏரண அறிவு

8.

பின்வரும் திருக்குறளில் களவு மேற்கொள்ளாதவர்களின் உள்ளத்தில் என்ன பண்புகள் நிலைத்து நிற்கும் என திருவள்ளுவர் கருதுகிறார்?


அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்

களவறிந்தார் நெஞ்சில் கரவு

a)

அன்பு

b)

பொய்

c)

அறம்

d)

மெய்

e)

திருட்டு

9.

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல

மற்றைய தேற்றா தவர்


இதில் எந்தச் செயலைச் செய்யும் மனிதர்கள் அப்போதே கெட்டழிவர்?

a)

அறவழியில் நடப்பவர்கள்

b)

களவு மேற்கொள்பவர்கள்

c)

புறம் பேசுபவர்கள்

10.

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்

தள்ளாது புத்தே ளுலகு


களவு மேற்கொண்டு வாழ்பவர் வாழ்வில் உயிர் தவறிப் போகும் எனக் கூறும் திருவள்ளுவர் களவு மேற்கொள்ளாதவர்கள் எதனை அனுபவிப்பர் என்கிறார்?

a)

அமைதியான உலகம்

b)

மகிழ்ச்சியான உலகம்

c)

களவு உலகம்

d)

தேவர் உலகம்