wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி படிவம் 4 2022

Total questions: 30

Worksheet time: 1hrs 13mins

Name
Class
Date
1.

பின்வரும் மொழியணிக்குப் பொருள் எழுதவும்.

 

அரிய பெரிய     

         

a)

மிகப் பெரிய

b)

அபூர்வமான

c)

அரியது

d)

நுண்னியது

2.

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல என்பதன் பொருள் என்ன?

a)

பாதிப்பு உறுதி

b)

இனிப்பு

c)

பாதகம்

d)

மாட்டிக்கொண்டது

3.

திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என்பதன் பொருளென்ன?

a)

கடவுள் திசை தெரியாதவருக்குத் தவிப்புக் கொடுப்பார்

b)

இறைவன் ஏழைகளுக்குத் துணை புரிவார்

c)

துன்பத்தில் உள்ளவருக்கு ஆண்டவன் பாதுகாப்பு

d)

பெரிய கடவுள் ஏழைகளுக்குத் துணை புரிவார்

4.

கால நேரம் என்பதன் பொருள் என்ன?

a)

சுக துக்கம்

b)

தக்க சமயம்

c)

தகுந்த கிழமை

d)

தருணம்

5.

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

............................................................................................................................

a)

பண்புடை யவர் தொடர்பு

b)

பண்புடையாளர் தொடர்பு

c)

பண்புடையாளரின் தொடர்பு

d)

பண்புடை யாளர் தொடர்பு

6.

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

....................................................................................................

     

a)

அவ்வ துறைவது அறிவு

b)

அவ்வாறு துறைவது அறிவு

c)

அவ்வ துறை அறிவு

d)

அவ் துறைவது அறிவு

7.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல என்பதன் பொருள்

a)

அதிக துன்பம்

b)

மேலும் துன்பம்

c)

துன்பத்திற்கு இன்பம்

d)

துன்பத்திற்கு மேல் துன்பம்

8.

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்பதன் பொருள்        

a)

கடல் கடந்து செல்வம் தேட வேண்டும்

b)

கடல் கடந்து சென்றும் தேட வேண்டும்

c)

கடல் கடந்து சென்றும் செல்வம் தேட வேண்டும்

d)

கடல் கடந்தும் செல்வம் தேட வேண்டும்

9.

குந்தித் தின்றால்............................................

a)

குன்றும் உயரும்

b)

குன்றும் ஆளும்

c)

மந்தி சாயும்

d)

குன்றும் மாளும்

10.

நொறுங்கத் தின்றால் ......................................

a)

முப்பது ஆண்டு வாழலாம்

b)

முன்னூறு வயது

c)

நூறு வயது

d)

முன்னூறு ஆண்டு வாழலாம்

11.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

..............................................................................................................

a)

ஊக்க முடைய நுழை

b)

ஊக்க முடை நுழை

c)

ஊக்க முடை நூழை

d)

ஊக்க முடையா நுழை

12.

நிறை குடம் என்பதன் பொருள்......

a)

அதிகம் தெரிந்திராமல் அடக்கமாக இருத்தல்

b)

அதிகம் தெரிந்திருந்தும் அடங்காப்பிடாரியாக இருத்தல்

c)

அதிகம் தெரிந்திருந்தும் அடக்கமாக இருத்தல்

d)

அதிகம் தெரிந்திருந்தும் அடக்கமில்லாமல் இருத்தல்

13.

சாயம் வெளுத்தது என்பது

a)

பொய்த் தோற்றம்

b)

உண்மை வெளிப்படுதல்

c)

உண்மை நிலை

d)

உண்மை

14.

குற்றெழுத்தைக் கொண்டு தொடங்கும் சொல்லைத் தெரிவு செய்க.

 

a)

ஐவர்                 

   

b)

அன்பு

c)

ஆசை 

d)

ஔடதம்

15.

கீழ்க்காணும் பனுவலில் அடைப்புக்குறிக்குள் இருக்க வேண்டிய பொருத்தமான

    மொழியணிகளை எழுதுக. பத்தியை மீண்டும் எழுத வேண்டாம்.

 

ஒரு செயலில் வெற்றியடைய வேண்டும் என்று உறுதிகொண்ட ஒருவர் அக்காரியத்தில் வெற்றியடையும் வரை தன் உடல் நோவை உணர மாட்டார். பசி, தூக்கம் முதலியவற்றைப் பொருட்படுத்தமாட்டார். பிறர் தனக்குச் செய்யும் தீங்கினையும் காதுக்கினியவற்றையும் பொருட்படுத்தமாட்டார். அதுமட்டுமின்றி தன்னைச் சுற்றியுள்ள       பிறர் தன்னைப் போற்றுவதையும் தூற்றுவதையும் பற்றிக்கூட  அவர் கருத மாட்டார்.       ( I இணைமொழி )  சுருங்கக் கூறின், அவருடைய முழு கவனமும் அவர் செய்கின்ற அச்செயலில் கருத்தூன்றி இருக்கும். ( II உவமைத் தொடர் ).

a)

உண் உறக்கம்

b)

சீரும் சிறப்பும்

c)

தூண்டில்கரனுக்குத் தக்கை மேல் கண் போல

d)

மலரும் மணமும் போல

16.

ங், ஞ், ண், ந், ம், ன்

மேற்காணும் மெய்யெழுத்துகள் எவ்வகையைச் சார்ந்தவை?

     

            A.       B.           C.    

a)

உயிர்மெய்

b)

வல்லினம்

c)

மெல்லினம்

d)

இடையினம்

17.

கோடிடப்பட்ட செய்யுளடிகளை எழுதுக.

 

 

     நிலத்தினும் பெரிதே;..................................

     நீரினும் ஆர் அளவின்றே - சாரல்

     கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு

     பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

 

a)

வானினும் உயர்ந்தன்று;

b)

வானினு உயர்ந்தது

c)

வானினும் உயர்ந் தன்று;

d)

வானின் உயர்ந்தன்று;

18.

கோடிடப்பட்ட செய்யுளடிகளை எழுதுக.

           புத்திமான் பலவா னாவான் பலமுளான் புத்தி யற்றால்

.......................................................................................................................          

           மற்றொரு சிங்கந் தன்னை வருமுயல் கூட்டிச் சென்றே

         ..................................................................................................................................... 

a)

எத்தனை விதத்தி னாலு மிடரது வந்தேதீரும்

b)

எத்தனை விதத்தி னாலும் மிடாரது வந்தேதீரும்

c)

உற்றதோர் கிணற்றில் சாயல் காட்டிய வுவமை போல

d)

உற்றதோர் கிணற்றி சாயல் காட்டிய வுவமை போல

19.

பிரித்து எழுதுக

   i) எவ்வெட்டு 

a)

எ+எட்டு

b)

எட்டு+எட்டு

c)

எ+வெட்டு

d)

எ+ட்டு

20.

கீழ்க்காணும் வாக்கியங்களில் காணப்படும் தொகையினைக் குறிப்பிடுக.

 

கனிகா சிரிக்கும்போது தென்படும் முத்துப்பல் அனைவரையும் வசிகரித்தது

a)

உம்மத்தொகை

b)

வேற்றுமைத்தொகை

c)

உவமைத்தொகை

d)

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

21.

இன எழுத்துகளைக் கொண்ட சரியான வரிசையைத் தெரிவு செய்க.

 

          

a)

பஞ்சம்,

பாசம்,

பக்தி   

b)

பந்தம், பழக்கம், பண்பு 

c)

தங்கம், அந்தம், கண்டம்

d)

வண்டி, பையன், தையல்

22.

‘அறமா’ இச்சொல் எவ்வகை வினாச்சொல்?

 

          

a)

புறவினா

b)

அகச்சுட்டு  

c)

புறச்சுட்டு

d)

அகவினா

23.

சரியான விடையைத் தெரிவு செய்க.

அரசு, சிரசு, பரிசு         -

           

a)

நெடில்தொடர்க் குற்றியலுகரம்

b)

மென்தொடர்க் குற்றியலுகரம்

c)

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

d)

வன்தொடர்க் குற்றியலுகரம்

24.

கீழ்க்காணும் சொற்களுள் இடைத்தொடர்க் குற்றியலுகரச் சொல்லைத் தெரிவு செய்க.

 

     

a)

மூன்று

b)

முரடு

c)

செய்து

d)

பட்டு                    

25.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் எவ்வகை ஆகுபெயராகும்?

இளமாறன் வீட்டுக்கு வெள்ளை அடித்தான்

a)

தொழிலாகு பெயர்                      

 

b)

பண்பாகு பெயர்

c)

இடவாகு பெயர்              

d)

பொருளாகு பெயர்

26.

1.   பன்மையைக் குறிக்கும் சொற்களைத் தெரிவு செய்க.

 

a)

குழந்தை வளர்ப்பில் பெற்றோர் கவனமுடன் செயல்பட வேண்டும்.

b)

சூறாவளி வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

c)

இந்தியர்கள் வியாபாரத் துறையில் முன்னேறியுள்ளனர்.

d)

மான்கள் துள்ளி ஓடுவது பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.

27.

வேற்றுமை உருபு _________________ வேறுபடுத்திக் காட்டும்.

 

 

a)

வினைச்சொல்லை                         

b)

உரிச்சொல்லை

c)

இடைச்சொல்லை

d)

பெயர்ச்சொல்லை   

28.

வேற்றுமை _________ வகைப்படும்.

 

a)

8

b)

7

c)

5

d)

6

29.

பின்வரும் வாக்கியங்களில் எது இரண்டாம் வேற்றுமை உருபை ஏற்று வந்துள்ளது?

a)

குமார் தேர்வு எழுதினான்

b)

மலர்விழி தேன்மொழியைப் பாராட்டினாள்

c)

குமரப்பனால் கோயில் கட்டப்பட்டது

d)

தமிழ்முல்லை, இங்கே வா!

30.

மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஓர் அழகிய அருவியில் நீர்

குடிப்பதற்குப் பல வனவிலங்குகள் இரவில் வரும்.

a)

மலையடிவாரத்தில் பல வனவிலங்குகள் உள்ளன.

   அங்குள்ள அழகிய அருவியில் நீர் குடிப்பதற்கு இரவில் வரும்.

b)

 

மலையடிவாரத்தில் ஓர் அழகிய அருவி அமைந்துள்ளது.

   அந்த அருவியில் நீர் குடிக்கப் பல வனவிலங்குகள் இரவில் வரும்.

c)

அந்த அருவியில் நீர் குடிக்கப் பல வனவிலங்குகள் இரவில் வரும்.

  மலையடிவாரத்தில் ஓர் அழகிய அருவி அமைந்துள்ளது.

d)

மலையடிவாரத்தில் ஓர் அழகிய அருவி அமைந்துள்ளது.

   அதனால், நீர் குடிக்கப் பல விலங்குகள் இரவில் வரும்.