NEW
Font size
WorksheetsMarabuthodar
Total questions: 20
Worksheet time: 10mins
இன்றைய இளையர்கள் தங்கள் பெற்றோர்களையே _____ பேசுவதைக் காணும்பொழுத் நம் மனம் புண்படுகிறது.
எடுத்தெறிந்து
ஏட்டிக்குப் போட்டியாக
தட்டிக் கொடுத்து
இடித்துரைத்து
மாணவர்களை அச்சுறுத்தி படிக்கச் செய்வதைவிட ______ படிக்கத் தூண்டினால் அதிகப் பலன் தரும்.
தட்டிக் கேட்டு
இனிக்கப் பேசி
தட்டிக் கொடுத்து
தட்டிப் பறித்து
இளையர்கள் சிலர் தங்கள் கடமையை மறந்து கடைத்தொகுதிகளில் சுற்றித் திரிந்து _______ காலத்தை வீணாக்குவதை நம்மால் காண முடிகிறது.
வெட்டிப்பேச்சில்
பல்லவி பாடுவதில்
கொட்டமடிப்பதில்
இனிக்கப் பேசுவதில்
உலக இலக்கியங்களுள் திருக்குறள் ___ நூலாக விளங்குகிறது என்று கூறினால் மிகையாகாது.
ஒப்பு உயர்வற்ற
உயர்வு தாழ்வற்ற
ஈடு இணையாக
சீரும் சிறப்புமிக்க
தனக்குக் கொடுக்கப்படும் பணி எத்தகையதாக இருப்பினும் அதனை _____ செய்து முடிக்கும் திறன் பெற்றவள் கோமதி.
ஓடியாடிப் பார்த்து
தலைமேற்கொண்டு
ஒரு காலில் நின்று
தப்பும் தவறுமாக
________________ செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
சாடைமாடையாய்
ஒப்பும் உயர்வற்ற
தப்பும் தவறுமாக
அருமை பெருமையான
குழந்தைகள் ___உள்ளவர்கள் என்று கவிஞர்கள் பலர் பாராட்டிப் பாடியுள்ளனர்.
வெள்ளை மனம்
கள்ளங்கபடு
ஈவிரக்கம்
அண்மையில் எகிப்து நாட்டில் அரசியல் கலவரங்கள் ஏற்பட்டபோது சமூக விரோதிகள் மக்களின் உடைமைகளை _______.
சூறையாடினர்
சூளுரைத்தனர்
உழைக்காமல் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் மேலதிகாரியைச் சிலர் ___ மிக விரைவில் பதவி உயர்வு பெற்றுவிடுகிறார்கள்.
காட்டிக் கொடுத்து
காக்கை பிடித்து
நடிப்பாற்றலில் சிறந்து விளங்கிய ரமணன் தான் ஒரு திடைப்பட நடிகனாக வேண்டுமென்ற கனவு ____ மனமுடைந்து போனான்.
கரையேறாததால்
கை கூடாததால்
நாம் ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன்னர் அதனால் விளையக்கூடிய _____ ஆராய வேண்டும்.
அருமை பெருமைகளை
நன்மை தீமைகளை
இன்ப துன்பத்தை
தங்களுக்கு நேரத்தோடு சம்பளம் கொடுக்கப்படாததால் கோபம் அடைந்த தொழிலாளர்கள் தங்கள் முதலாளியை _____.
கை கழுவினர்
தட்டிக் கேட்டனர்
கை நனைத்தனர்
தட்டிப் பறித்தனர்
மாறன் தன் மேலதிகாரியிடமிருந்து நற்பெயரைப் பெறுவதற்காக அவர் கூறியதற்கெல்லாம் ___ மற்ற ஊழியர்களின் வெறுப்புக்கு ஆளானான்
செவிசாய்த்ததால்
ஒத்துப் படியதால்
தனக்குக் கொடுக்கப்படும் பணி சவால்மிக்கதாக இருந்தாலும் அதனை ______ திறம்படச் செய்யும் பாலனைப் பலரும் விரும்பினர்.
கண்மூடித்தனமாக
ஒளிவுமறைவின்றி
தலைமேற்கொண்டு
தென்கிழக்காசிய நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்று உலக வரலாற்றில் ____ இராஜேந்திர சோழனின் வீரத்தைத் தமிழர்கள் போற்றுகின்றனர்.
பெயர் பொறித்த
ஒப்பு உயர்வற்ற
சீரும் சிறப்புமிக்க
மாதவன் தாம் புதிதாகத் தொடங்கிய நிறுவனத்தைச் சரியாக நிர்வகிகாததால் சில மாதங்களிலேயே அந்நிறுவனத்தின் நிதி நிலை ________
கையைக் கடித்தது
இழுத்தடித்தது
அணுவாயுதங்களைத் தாயாரிப்பதிலிருந்து ___ மறுக்கும் நாட்டிற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென்று உலகத் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.
பின்வாங்க
ஒத்துப்பாட
தான் விரும்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண்பதற்காகக் கோமதி தனது வீட்டுப்பாடங்களை ___ செய்து முடித்தாள்.
அறக்கப் பறக்க
பம்பரமாகச் சுழன்று
திரு முகுந்தன் பணத்தை ___ தம் பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாடினர்.
அள்ளிக்கொட்டி
ஈடுகட்டி
அள்ளியிறைத்து
தம்மை நாடி வந்த மக்களுக்குப் பல _______ செய்து வந்த பாண்டிய மன்னனை அனைவரும் போற்றினர்.
தான தர்மங்கள்
நகை நட்டுகள்
