wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி புதிர்

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்

நெல்லுக்கு உமியுண்டு, நீருக்கு நுரையுண்டு

புல்லிதழ்பூவிற்கும் உண்டு

a)

பழமொழி

b)

நாலடியார்

c)

திருக்குறள்

2.

நல்லார் என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

நல்ல மரம்

b)

நல்லவர்

3.

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்

நெல்லுக்கு உமியுண்டு, நீருக்கு நுரையுண்டு

புல்லிதழ்பூவிற்கும் உண்டு

a)

நண்பர்களின் குறைகளைப் பிறரிடம் கூற வேண்டும்.

b)

நல்லவர் என ஒருவரை நாம் நினைத்து அதிக அன்புடன் உறவாடிப் பழகிய பின்னர், அவர் நல்லவராக இல்லாவிடினும் அவருடைய குற்றங்களைப் பிறரிடம் கூறக்கூடாது. அவற்றை மனதிலேயே அடக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், நெல்லுக்கும் அதன் உமி குறையாக உண்டு. நீருக்கும் நுரை குறையாக உள்ளது. சிறப்புப் பெற்ற மலருக்கும் கூட அதன் மேல் உள்ள புற இதழ் குறையாக உள்ளது. ஒருவருடைய குற்றங்களைப் பெரிதுபடுத்தக்கூடாது.

4.

'அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்' என்ற வரி உணர்த்தும் பொருள் என்ன?

a)

அவர் நல்லவராக இல்லாவிடினும் அவருடைய குற்றங்களைப் பிறரிடம் கூறக்கூடாது.

b)

நெல்லுக்கும் அதன் உமி குறையாக உண்டு. நீருக்கும் நுரை குறையாக உள்ளது.

5.

'நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை ' எனும் வரி உணர்த்தும் பொருள் என்ன?

a)

அவர் நல்லவராக இல்லாவிடினும் அவருடைய குற்றங்களைப் பிறரிடம் கூறக்கூடாது.

b)

நல்லவர் என ஒருவரை நாம் நினைத்து அதிக அன்புடன் உறவாடிப் பழகிய பின்னர்

6.

'நெல்லுக்கு உமியுண்டு, நீருக்கு நுரையுண்டு ' என்ற வரி உணர்த்தும் பொருள் என்ன?

a)

நெல்லுக்கும் அதன் உமி குறையாக உண்டு. நீருக்கும் நுரை குறையாக உள்ளது.

b)

சிறப்புப் பெற்ற மலருக்கும் கூட அதன்மேல் உள்ள புற இதழ் குறையாக உள்ளது

7.

பொருளுக்கேற்ற செய்யுள் எது?


நல்லவர் என ஒருவரை நாம் நினைத்து அதிக அன்புடன் உறவாடிப் பழகிய பின்னர், அவர் நல்லவராக இல்லாவிடினும் அவருடைய குற்றங்களைப் பிறரிடம் கூறக்கூடாது. அவற்றை மனதிலேயே அடக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், நெல்லுக்கும் அதன் உமி குறையாக உண்டு. நீருக்கும் நுரை குறையாக உள்ளது. சிறப்புப் பெற்ற மலருக்கும் கூட அதன் மேல் உள்ள புற இதழ் குறையாக உள்ளது. ஒருவருடைய குற்றங்களைப் பெரிதுபடுத்தக்கூடாது.

a)

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்

நெல்லுக்கு உமியுண்டு, நீருக்கு நுரையுண்டு

புல்லிதழ்பூவிற்கும் உண்டு

b)

துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்

பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க

அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்

சகடக்கால் போல வரும்.

8.

'புல்லிதழ்பூவிற்கும் உண்டு '


மேற்காணும் வரி உணர்த்தும் பொருள் என்ன?

a)

நல்லவர் என ஒருவரை நாம் நினைத்து அதிக அன்புடன் உறவாடிப் பழகிய பின்னர்

b)

சிறப்புப் பெற்ற மலருக்கும் கூட அதன்மேல் உள்ள புற இதழ் குறையாக உள்ளது.

9.

ஆசிரியர் கற்பித்த செய்யுளை மாணவன் மனனம் செய்து __________வென ஒப்புவித்தான்.

a)

கிடுகிடு

b)

வெடவெட

c)

நசநச

d)

கடகட

10.

நாம் சிறு வயதில் கற்கும் கல்வியே அழியாமல் மனதில் பதியும்.

இக்கூற்றுக்குக் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

விளையும் பயிர் முளையில் தெரியும்

c)

அறியுடையாரை அரசனும் விரும்பும்

d)

இளமை கல்வி சிலை மேல் எழுத்து

11.

மாறன் : பாடகர் எஸ்.பி.பாலாவின் மகன் சரணும் சிறப்பாகப் பாடுகிறாரே?


நாதன் :.........................................................................................

a)

இளங்கன்று பயம் அறியாது

b)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

c)

விளையும் பயிர் முளையிலே தெரியும்

d)

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

12.

உரையாடலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


தம்பி : அம்மா,தம்பி என் பென்சிலைத் திருடி விட்டான்


அம்மா :சிறுபிள்ளை தானே.பரவாயில்லை

a)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

b)

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்

c)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

d)

தீட்டின மரத்திலே கூர்பார்ப்பதா?

13.

பாலன் : ஏன் கவலையாக இருக்கிறாய்?

சிவா : என் மகனுக்கு உடல் நலமில்லை.அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.இன்னும் ஊதியம் கிடைக்கவில்லை.அதான்..........

பாலன் : இந்தா,முதலில் இந்தப் பணத்தைப் பணத்தைப் பெற்றுக் கொள்.

a)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

b)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

c)

உப்பிட்டவரை உள்ளளளவும் நினை

d)

அறிவுடையாரை அரசனும் விரும்பும்

14.

கீழ்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி யாது?


நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.

a)

ஊருடன் கூடி வாழ்

b)

ஒற்றுமையே பலம்

c)

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

d)

தனிமரம் தோப்பாகாது

15.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு


என்ற திருக்குறள் அடிகள் உணர்த்தும் பழமொழி யாது?

a)

தனிமரம் தோப்பாகாது

b)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

c)

ஒற்றுமையே பலம

d)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

16.

சூழலுக்கு ஏற்ற பழமொழி யாது?


சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த வாணி சிரமப்பட்டுப் பட்டபடிப்பை முடித்தாள்.பல இடங்களில் வேலை தேடி அலைந்தாள் கிடைக்கவில்லை. உறவினர் ஒருவர் தம் நிறுவனத்தில் வேலை கொடுப்பதாகக் கூறியதும் என்ன வேலை என்று கேட்காமல் உடனே ஒப்புக்கொண்டாள்.

a)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

b)

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

c)

வெள்ளம் வருமுன் அணை போடு

d)

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

17.

உப்பிட்டவரை உள்ளளளவும் நினை


கொடுக்கப்பட்ட பழமொழியில் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

a)

உப்புக் கொடுத்தவரை

b)

உப்பு வாங்கியவரை

c)

உணவு கொடுத்தவரை

d)

உணவு வாங்கியவரை

18.

கொடுக்கப்பட்ட பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.


தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

a)

நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது

b)

அறிவாளியாக இருப்பவளே ஆற்றல்மிக்கவளாகத் திகழ்வாள்

c)

பதற்றப்படாமல் பொறுமையுடன் ஒரு செயலைச் செய்தால் அச்செயல் சிறப்பாக முடிவுறும்.

d)

நாம் தூய்மையைக் கடைபிடித்தால் நோயின்றி நலமாக வாழலாம்.

19.

விளக்கத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.


குணா, நாதனின் ஏழ்மையைக் கண்டு மனமிரங்கி பல உதவிகள் செய்தார்.நாதன் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்ததும் கொஞ்சமும் நினைத்துப் பாராமல் அவரிடம் சண்டை போட்டான்.

a)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

b)

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

c)

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

d)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

20.

குமார் : உன் தாத்தாவுக்கு என்ன வயது? மிகவும் இளமையாக இருக்கிறாரே?


தரணி :என் தாத்தாவுக்கு எழுபது வயதாகிறது.இன்னும் நோயின்றி சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்.

a)

சுத்தம் சுகம் தரும்

b)

தனிமரம் தோப்பாகாது

c)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

d)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்