wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 21

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று என்ற திருக்குறளின் பொருளை தெரிவு செய்க.

a)

உலகத்தில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வதோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

b)

ஒரு துறையைச் சார்ந்து இருக்க எண்ணங்கொண்டவர்கள் அத்துறையில் பிறர் புகழும்படியாகச் சிறந்து விளங்க வேண்டும். இல்லையேல் அத்துறையில் ஈடுபடாதிருத்தல் நல்லது.

c)

தமக்கு புகழ் உண்டாகுமாறு வாழ முடியாதவர் தம்மைத் தாமே நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்வதால் பயனில்லை.

d)

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும் ; தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.

2.

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும் ; தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம் என்ற பொருளுக்கு ஏற்ற திருக்குறளை தெரிவு செய்க.

a)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

b)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

c)

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்க குழையும் விருந்து.

d)

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

3.

நாலாப்பக்கமும் / சுற்றிலும்


சரியான இணைமொழியை தேர்வு செய்க.

a)

அல்லும் பகலும்

b)

அன்றும் இன்றும்

c)

அங்கும் இங்கும்

d)

சுற்றும் முற்றும்

4.

காய்ந்த இலைகளின் நடுவே பாம்பு ஊர்ந்து சென்ற போது _________________ வென ஓசை கேட்டது.

a)

சல சல

b)

சர சர

c)

தர தர

d)

கிலு கிலு

5.

சிவா கூடா நட்பால் தீய செயல்களில் ஈடுபட்டு சீரழிந்து போனான்.


இச்சூழலுக்கு ஏற்ற உலகநீதியை தேர்ந்தெடுக.

a)

போகாத விடந்தனிலே போக வேண்டாம்

b)

அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்

c)

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

d)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.

6.

காலை கதிரவனின் ஒளிபட்டு, கடல்நீர் ___________ வென காட்சியளித்தது

a)

மினு மினு

b)

தக தக

c)

பள பள

7.

அளவுக்கு மேல் செலவழித்தல்


இதற்கு ஏற்ற சரியான மரபுத்தொடரை கண்டுபிடி.

a)

அள்ளி விடுதல்

b)

அள்ளி கட்டுதல்

c)

அள்ளி வீசுதல்

d)

அள்ளி இறைத்தல்

8.

இப்படத்திற்கு பொருந்திய பழமொழியை அடையாளமிடுக.

a)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

b)

இளங்கன்று பயமறியாது

c)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

d)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

9.

விட்டுப்பிரியாமை / சேர்ந்தே இருத்தல்


இதற்கேற்ற உவமைத்தொடர் என்ன?

a)

நகமும் சதையும் ,போல

b)

சிலை மேல் எழுத்து போல

c)

மலரும் மணமும் போல

d)

எலியும் பூனையும் போல

10.

பொறாமை கொண்டு பிறரை தூற்றிப் பேச கூடாது என்பதின் ஆத்திச்சூடி எது?

a)

ஔவியம் பேசேல்

b)

ஒப்புர வொழுக

c)

ஔடதம் குறை

d)

எண்ணெழுத் திகழேல்

11.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம் என்ற திருக்குறளுக்கு ஏற்றவை யாவை?

a)

கோபம்

b)

பேராசை

c)

கடுஞ்சொல்

d)

வெறுப்பு

12.

ஆடிப்பாடி


ஏற்ற பொருள் என்ன?

a)

மகிழ்சியுடன்

b)

பாட்டும் நடனமும்

c)

பாட்டும் கூத்தும்

d)

உடையும் ஆபரணமும்

13.

செவி சாய்தலுக்கு பொருள் தருக.

a)

உடன்படுதல்

b)

இணங்குதல்

c)

இசைதல்

14.

எவ்வித பயிற்சியும் முயற்சியும் இல்லாமல் தன்னால் ஓட்ட பந்தயத்தில் முதல் இடத்தை பிடிக்க முடியும் என்று கவின் தனக்குள் "மனக்கோட்டை" கட்டிக் கொண்டான்.


மேற்காணும் வாக்கியத்திலுள்ள மரபுத்தொடருக்கான பொருள் என்ன?

a)

உறுதி பூணுதல்

b)

வெறும் கற்பனை

c)

நடைமுறைக்கு பயன்படாத அறிவு

d)

முழு முயற்சியுடன்

15.

இளவயதினர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு செயலில் துணிந்து இறங்கி விடுவர் என்பதன் பொருள் என்ன?

a)

இளஙகன்று பயமறியாது

b)

இளம் கன்று பயமறியாது

16.

வாய்விட்டு சிரிக்கும் ஒலி என்ன?

a)

ஹ ஹ

b)

சல சல

c)

திரு திரு

d)

கல கல

17.

"நன்றி ஒருவற்குச் செய்தக்கா லநநன்றி

என்று தருங்கொ லெனவேண்டா" என்ற செயுளடியின் பொருள் எழுதுக.

a)

நல்லவர்களுக்குப் பயன்கருதாமல் நாம் செய்கின்ற உதவி

b)

நல்லவர்களுக்கு பயன்கருதாமல் நாம் செய்கின்ற உதவி, தென்னையானது தன் வேரால் உறிஞ்சிய நீரைத் தன் தலையில் இளநீராக தருவதை போல நிச்சயமாக நமக்கு பயன் தரும்.

18.

ஐம்பொறி ஆட்சிகொள் என்ற ஆத்திச்சுடியில் உள்ள "ஐம்பொறி" ஆக கருதுவது யாவை?

a)

மெய்

b)

கை

c)

மூக்கு

d)

கண்

19.

விடாமுயற்சியோடு செயல்படுவது வாழ்கையை வளப்படுத்தும்


பொருந்திய கொன்றை வேந்தனை தேர்ந்தெடுக.

a)

ஏவா மக்கள் மூவா மருந்து

b)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

c)

நுண்ணிய கருமமும் எண்ணித் துணி

d)

ஐயம் புகினும் செய்வன செய்

20.

கல்வியை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் கடவுளுக்கு நிகராவார்.


சரியான வெற்றி வேற்கை தெரிவு செய்க.

a)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

b)

கல்விக் கழகு கசடற மொழிதல்

c)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

21.

ஆடிப்பாடி


ஏற்ற பொருள் என்ன?

a)

மகிழ்சியுடன்

b)

பாட்டும் நடனமும்

c)

பாட்டும் கூத்தும்

d)

உடையும் ஆபரணமும்