wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உயர்நிலை 1

Total questions: 8

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

விமலா _______ என்பதால் அவளிடம் எந்த ரகசியத்தையும் கூற அவள் தோழிகள் முன் வருவதில்லை.

a)

ஓட்டைக் கை

b)

அவரசக் குடுக்கை 

c)

ஓட்டை வாய்

d)

அடக்கவொடுக்கம்

2.

இரவு முழுவதும் கணினி விளையாட்டை விளையாடிதால் காலையில் கால தாமதமாக எழுந்த மாறன் பள்ளிக்கு ________ ஓடினான்.

a)

அறக்க பறக்க

b)

ஆறஅமர

c)

அவசரக்குடுக்கையாக

d)

கம்பி நீட்டினான்

3.

வீட்டில் தனியாக இருந்த முதியோரிடம் ____  தன்னிடமுள்ள பொருட்களை விற்க முயன்ற இளையரின் எண்ணம் ஈடேறவில்லை.

a)

அடக்கவொடுக்கம்

b)

ஒற்றைக் காலில் நின்று

c)

இனிக்க பேசி

d)

ஆற அமர 

4.

ஆண்டிறுதித் தேர்வில் ராமன் சிறப்பு தேர்ச்சி பெற்றதால் பள்ளியிலேயே சிறந்த மாணவன் என்று பாராட்டப்பட்டதை நினைத்து அவனது பெற்றோர் ______.

a)

ஒற்றைக் காலில் நின்றனர்,

b)

உச்சி குளிர்ந்தனர்

c)

கரைத்துக் குடித்தனர்

d)

இனிக்கப் பேசினர்

5.

கல்விகேள்விகளில் சிறந்தவர் என்று பாரட்டப்படும் திரு. குமரன் வாழ்வில் வெற்றி பெற அவர் ________ நடந்துகொண்டதே காரணமாகும்.

a)

அவசரக்குடுக்கையாக  

b)

அறக்க பறக்க

c)

ஆற அமர

d)

அடக்கவொடுக்கமாக

6.

கண்ணன் எப்போதும் கேட்கப்படும் வினாக்களை முழுமையாகப்  புரிந்துகொள்ளாமல் ____ பதில் அளிக்கும் குணம் படைத்தவன்.

a)

ஆறஅமர

b)

அவசரக்குடுக்கையாக

c)

அவசரக்குடுக்கை

d)

கண்மூடித்தனமாக

7.

கொடுக்கப்படும் வேலைகளை உடனுக்குடன் செய்யாமல் ______ செய்வதால் வாழ்க்கையில் பல விசயங்களை நாம் இழந்துவிடுகிறோம்.

a)

கரைத்துக்குடித்து

b)

ஆறப்போட்டு 

c)

ஆற அமர

d)

அறக்க பறக்க

8.

கடைத்தொகுதியில் பார்த்த பொம்மை வேண்டும் என்று _______ மகனை தாய் சமாதனப்படுத்த முயன்றும் அது பயனளிக்கவில்லை.

a)

அடக்கவடுக்கமாக

b)

கண்டதையும் கேட்டதையும்

c)

ஒற்றைக் காலில் நின்ற

d)

அறக்க பறக்க