wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 6 (1)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

குளிர் காலத்தின் போது திமிங்கலம் வெப்பமான இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லும். ஏன் இந்த விலங்கு சீதோஷ்ண நிலையின் மாற்றத்தின் போது இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்கிறது/

a)

தன் இனத்தை அதிகரிக்க

b)

உணவு பெறுவதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும்

c)

உடலின் வெப்பத்தை அதிகப்படுத்த

d)

உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த

2.

தொற்றுநோய் பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய சரியான வழிமுறையைத் தெரிவு செய்க.

a)

குழாய் நீரை அருந்த வேண்டும்

b)

உணவுப் பொருள்களை ஈக்கள் மொய்க்காதவாறு மூடி வைக்க வேண்டும்

c)

தொற்று நோய் கண்டவரின் துவாலையைப் பகிர்ந்து பயன்படுத்தலாம்.

d)

தேவைப்படும்போது மட்டுமே பல் துலக்க வேண்டும்.

3.

பின்வரும் விலங்குகளில் தனித்து வாழும் விலங்கு எது?

a)

எறும்பு

b)

சிங்கம்

c)

புலி

d)

கழுதை

4.

பின்வருபவை யாவும் மாணவர்கள் அறிவியல் அறையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், ஒன்றைத் தவிர

a)

ஆசிரியர் அனுமதியின்றி பரிசோதனையை மேற்கொள்ளக் கூடாது.

b)

அறிவியல் அறை எப்பொழுதும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

c)

கழிவுகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.

d)

பரிச்சோதனைக்குப் பயன்படுத்திய கருவிகளைச் சுத்தம் செய்யக் கூடாது

5.

கீழ்க்காண்பனவற்றுள் நுண்ணுயிர்களைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக

a)

நுண்ணுயிர்கள் சுவாசிக்கும், நகரும், வளரும், இனவிருத்தி செய்யும்.

b)

நுண்ணுயிர்களை நாம் கண்களால் பார்க்க முடியும்.

c)

நுண்ணுயிர்கள் தீமையை மட்டுமே தருகின்றன.

d)

நொதிமம் உயிர்வளியை வெளியிடுகின்றது.

6.

நுண்ணுயிரின் நன்மையைத் தேர்ந்தெடுக.

a)

சொத்தைப் பல் உண்டாக்குதல்

b)

நோய் எதிர்ப்பு மருந்துகள் உருவாக்கப் பயன்படுகிறது

c)

உணவைக் கெடச் செய்கிறது

7.

கீழ்காணும் விலங்குகள் எஃது அழிவை எதிர்நோக்கும் விலங்காகும் ?

a)
b)
c)
d)
8.

கீழ்காண்பனவற்றுள் எஃது உந்து விசையின் விளைவு அல்ல ?

a)

பொருளின் வடிவத்தில் மாற்றம்

b)

பொருளின் வேகத்தில் மாற்றம்

c)

பொருளின் அளவில் மாற்றம்

d)

பொருளின் நகரும் திசையில் மாற்றம்

9.

கீழ்காணும் நடவடிக்கை அதிக வேகத்தைக் கொண்ட நடவடிக்கையைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
10.

ஆதாம் குன்றின் உச்சியில் நிற்கிறான். அவன் குன்றிலிருந்து 1 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தன் பள்ளியைப் பார்க்க நினைத்தான். அவனுடைய பள்ளியைத் தெளிவாகப் பார்க்கப் பயன்படுத்தக் கூடிய பொருத்தமான கருஇ எது?

a)

தொலைநோக்காடி

b)

இணைப்பார்வை தொலைநோக்காடி

c)

நுண்பெருக்கி

d)

உருப்பெருக்காடி

11.

சில விலங்குகள் தனித்து வாழ்வதன் அவசியம் என்ன?

a)

வசிப்பிடத்திற்கான போராட்டம் அதிகரிக்கிறது.

b)

உணவுப் போராட்டத்தைத் தவிர்த்து விடுகிறது.

c)

மற்ற இனவகை விலங்கிடமிருந்து ஏற்படும் எதிர்ப்பு.

d)

உயிரிழப்பு

12.

எந்தப் பதப்படுத்தும் முறையின்வழி அந்தக் குளிர்பானம் அதிக நாள் கெடாமலிருக்கும்?

a)

சீனி சேர்க்கப்பட்டதால்.

b)

உப்பு சேர்க்கப்பட்டதால்.

c)

வெப்பப்படுத்தப்பட்டு உடனடியாகக் குளிர வைத்ததால்.

d)

உலர வைத்துக் காற்றை வெளியேற்றியதால்

13.

கீழ்க்காணும் பிராணிகளுள் எவை வெட்டுக்கிளியைப் போல் சுவாசிக்கின்றன?

a)

தலைப்பிரட்டை மற்றும் கரடி

b)

கொசு மற்றும் தவளை

c)

வண்ணத்துப்பூச்சி மற்றும் கரப்பான் பூச்சி

d)

புழு மற்றும் பட்டுப் புழு

14.

பின்வரும் எந்த பொருள் மட்கும்?

a)
b)
c)
d)
15.

பூமி தன் அச்சில் சுற்றி வர _______ ஆகிறது?

a)

1 வருடம்

b)

2 நாள்கள்

c)

24 மணி நேரம்

d)

1 மாதம்

16.

பின்வரும் நிலவின் கலைகளில் எது மதிமான நாள்காட்டியில் 15-ஆவது நாளில் தெரியும்?

a)
b)
c)
d)
17.

கைப்பேசி ஒலிக்கும்போது எவ்வகையான சக்தி மாற்றம் ஏற்படும்?

a)

மின்சக்தி ---> ஒளிசக்தி --> இயக்க சக்தி -->

b)

உள்நிலை சக்தி --> ஒளி சக்தி --> வெப்ப சக்தி

c)

இராசயன சக்தி --> ஒளி சக்தி --> ஒலி சக்தி

d)

மின்சக்தி --> ஒலி சக்தி --> இயக்க சக்தி

18.

கீழ்க்காண்பவற்றுள் எது pH 7-க்கு மேலான தன்மையுடைய பொருளைக் குறிக்கிறது?

a)

ஆரஞ்சு

b)

மருந்து

c)

வழலைக்கட்டி

d)

நீர்

19.

கீழ்க்காண்பனவற்றுள் எது பூமி தன் அச்சில் சுழலதால் ஏற்படும் விளைவைக் காட்டுகிறது?

a)

சூரியன் காலையில் மேற்கில் உதிக்கிறது

b)

நிழலின் நிலையில் மாற்றம் ஏற்படுகிறது

c)

பூமி தன் அச்சில் கிழக்கிலிருந்து மேற்காகச் சுழல்கிறது

d)

பூமி சூரியனை ஒரு முழுச் சுற்றை அடைய 12 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.

20.

மறுசுழற்சி செய்ய வேண்டியதன் அவசியம் யாது?

a)

கழிவுகளை அகற்றுவதற்கான செலவைக் குறைக்கிறது.

b)

இயற்கை வளங்களைப் பாதிப்படையச் செய்ய

c)

இயற்கை வளங்களைப் பாதுகாக்காமல் இருக்க

d)

கழிவுகளின் பயன்பாட்டை அதிகரிக்க