Worksheetsதமிழ்மொழி இலக்கியம்
Total questions: 15
Worksheet time: 8mins
வானத்தில் _________ என ஒளிர்ந்து கொண்டிருந்த நட்சத்திரங்களைக் கதிரவன் இரசித்தான்.
பளார் பளார்
மினு மினு
சிடு சிடு
கடு கடு
தவறு செய்த தம் மகனை அப்பா கன்னத்தில் ____________ என அறைந்தார்.
பளீர் பளீர்
கடு கடு
சர சர
பளார் பளார்
குறட்பாவை நிறைவு செய்க
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
______________________________________
துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
அன்றே மறப்பது நன்று
நாவினாற் சுட்ட வடு
சூழலுக்கேற்ற பழமொழியை எழுதுக
திரு.ராஜேந்திரன் தம் ஆராய்ச்சியைப் பதற்றப்படாமலும் பொறுமையுடனும் செய்து சிறந்த அறிவியலாளர் விருதைப் பெற்றார்.
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமே
பதறாத காரியம் சிதறாது
அழுத பிள்ளை பால் குடிக்கும்
சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடரை எழுதுக
தம்பிக்குச் சேர வேண்டிய சொத்துகள் அனைத்தையும் அண்ணன் நயவஞ்சகமாக எடுத்துக் கொண்டான்.
பசுத்தோல் போர்த்திய புலி போல
சூரியனைக் கண்ட பனி போல
குடத்திலிட்ட விளக்கு போல
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடரை எழுதுக
முத்தப்பனின் குடும்பம் வறுமை ,பிள்ளைகள் தலையெடுத்து வேலைக்குச் சென்ற பின் நீங்கியது
குடத்திலிட்ட விளக்கு போல
நகமும் சதையும் போல
சூரியனைக் கண்ட பனி போல
பசுத்தோல் போர்த்திய புலி போல
பொருளுக்கேற்ற உவமைத்தொடரை எழுதுக
நல்லவன் போல் நடிக்கும் தீய குணம் உள்ளவன்
எலியும் பூனையும் போல
பசுத்தோல் போர்த்திய புலி போல
சூரியனைக் கண்ட பனி போல
குடத்திலிட்ட விளக்கு போல
வெற்றி வேற்கையை எழுதியவர் யார்?
ஓளவையார்
மாணிக்கவாசகர்
அதிவீரராம பாண்டியன்
திருவள்ளுவர்
வெற்றி வேற்கைக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடு
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
பிச்சை எடுத்துக் கற்க வேண்டும்
வறுமையிலும் நன்கு கற்க வேண்டும்
பிச்சையெடுக்கும் நிலையிலும் கற்க வேண்டும்
வேலை செய்து கொண்டே கற்க வேண்டும்
சூழலுக்கு ஏற்ற பழமொழியை எழுதுக
சிறுவயது முதற்கொண்டே தம் ஆசிரியர் அளித்த நம்பிக்கையும் ஆதரவும் விமலா சிறந்த மருத்தவராக விளங்குவதற்குக் காரணமாகும்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
அழுத பிள்ளை பால் குடிக்கும்
சுவரை வைத்துதான் சித்திரம் வரைய வேண்டும்
அண்ணமிட்ட வீட்டில் கன்னமிடலாமா
பொருளுக்குச் சரியான பழமொழியை எழுதுக
எப்படிப்பட்ட பிடிவாதம் கொண்டவரிடமும் பக்குவமாக எடுத்துக் கூறினால் அவர் மனம் இரங்கி விடுவார்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
சுவரை வைத்துதான் சித்திரம் வரைய வேண்டும்
இலவு காத்த கிளி போல
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
இணைமொழியை தேர்ந்தெடுக்கவும்
அப்பெரியவர் ஒவ்வொர் ஆண்டும் ஏழை மக்களுக்குத்_______________ செய்வார்
பழக்க வழக்கம்
மூலை முடுக்கு
தான தர்மம்
வரவு செலவு
இணைமொழியைத் தெரிவு செய்க
என் தந்தை ஒவ்வொர்ரு நாளும் அன்றைய ___________ கணக்கை எழுதி வைப்பார்
பழக்க வழக்கம்
வரவு செலவு
தான தர்மம்
மூலை முடுக்கு
மரபுத்தொடரைத் தெரிவு செய்க
தன் மகள் தேர்வில் கட்டாயம் சிறப்புத் தேர்ச்சி பெறுவாள் என்று பெற்றோர் _______________________ ஆக நம்பினர்.
ஆணித்தரம்
தலைகுனிதல்
எடுப்பார் கைப்பிள்ளை
உறுதி
பொருளுக்கேற்ற திருக்குறளை எழுதுக
நல்லவர்களோடு ஒரு நாள் மட்டுமே தொடர்பும் நட்பும் கொண்டிருந்தாலும் ,அந்த நட்பானது பூமியைப் பிளந்து ஆழ ஊடுருவும் உறுதியான வேரைப் போன்றதாகும்
நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்குட் பாசிபோல் வேர்க்கொள்ளாதே
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
ஒரு நாள் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர் வீழ்க்குமே
அகர முத எழுத்தெல்லாம்
