wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தொகாநிலைத் தொடர்

Total questions: 25

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பின்வருவனவற்றில் எஃது எழுவாய்த் தொடர்?

a)

முல்லை பூத்தது

b)

புத்தகத்தைக் கொடு

c)

இறைவா காப்பாற்று

d)

வாருங்கள் மாமா

2.

விளித்தொடரைத் தெரிவு செய்க.

a)

குயில் கூவியது

b)

பாடகர் பாடினார்

c)

அக்கா கொடுங்கள்

d)

அம்மா வந்தார்

3.

'பூனை + கத்தியது'

சேர்த்து எழுதுக.

a)

பூனைக் கத்தியது

b)

பூனைக்குக் கத்தியது

c)

பூனையே கத்தியது

d)

பூனை கத்தியது

4.

'தலைவா + கேள்'

சேர்த்து எழுதுக.

a)

தலைவாக் கேள்

b)

தலையே கேள்

c)

தலைவர்க்குக் கேள்

d)

தலைவா கேள்

5.

வெள்ளம் வருமா?

இஃது என்ன வகைத் தொகாநிலைத் தொடர்?

a)

வினாத்தொடர்

b)

வினைத்தொடர்

c)

எழுவாய்த்தொடர்

d)

விளித்தொடர்

6.

'நண்பனே வா!'

இஃது என்ன வகைத் தொகாநிலைத் தொடர்?

a)

எழுவாய்த்தொடர்

b)

விளித்தொடர்

c)

வினைமுற்றுத்

தொடர்

d)

வேற்றுமைத்

தொடர்

7.

மாமா ஆசிரியர்

இஃது என்ன வகைத் தொகாநிலைத் தொடர்?

a)

பெயரெச்சத் தொடர்

b)

வினையெச்சத் தொடர்

c)

எழுவாய்த்தொடர்

d)

விளித்தொடர்

8.

மனிதர்கள் ஒழுக்கத்தைப் பேண திருக்குறளை எழுதினார் திருவள்ளுவர்.

இதில் கோடிடப்பட்டுள்ள தொடர்?

a)

எழுவாய்த்தொடர்

b)

விளித்தொடர்

c)

வினைமுற்றுத்

தொடர்

d)

பெயரெச்சத்

தொடர்

9.

'கடவுளே, கருனை காட்டு!' என வேண்டினான் பக்தன்.

இதில் கோடிடப்பட்டுள்ள தொடர்?

a)

எழுவாய்த்தொடர்

b)

விளித்தொடர்

c)

வேற்றுமைத்தொடர்

d)

அடுக்குத்தொடர்

10.

இனியன் பாடத்தைச் செய்தான்.

இதில் கோடிடப்பட்டுள்ள தொடர்?

a)

வேற்றுமைத்தொடர்

b)

எழுவாய்த்தொடர்

c)

வினைமுற்றுத்

தொடர்

d)

பெயரெச்சத் தொடர்

11.

முகிலன் நண்பனுடன் வந்தான்

இதில் கோடிடப்பட்டுள்ள தொடர்?

a)

இரண்டாம் வேற்றுமைத்தொடர்

b)

மூன்றாம் வேற்றுமைத்தொடர்

c)

நான்காம் வேற்றுமைத்தொடர்

d)

ஐந்தாம் வேற்றுமைத்தொடர்

12.

அண்ணனைப் பார்த்தான்.

இஃது எவ்வகைத் தொகாநிலைத் தொடராகும்?

a)

இரண்டாம் வேற்றுமைத் தொடர்

b)

மூன்றாம் வேற்றுமைத் தொடர்

c)

நான்காம் வேற்றுமைத் தொடர்

d)

ஐந்தாம் வேற்றுமைத் தொடர்

13.

கபிலனது புத்தகம்.

இஃது எவ்வகைத் தொகாநிலைத் தொடராகும்?

a)

மூன்றாம் வேற்றுமைத்தொடர்

b)

நான்காம் வேற்றுமைத்தொடர்

c)

ஐந்தாம் வேற்றுமைத்தொடர்

d)

ஆறாம்

வேற்றுமைத்தொடர்

14.

இறைவன்பால் பக்தி

இஃது எவ்வகை தொகாநிலைத் தொடர்?

a)

ஐந்தாம் வேற்றுமைத்தொடர்

b)

ஆறாம் வேற்றுமைத்தொடர்

c)

ஏழாம் வேற்றுமைத்தொடர்

d)

விளித்தொடர்

15.

பின்வருவனவற்றில் எஃது ஐந்தாம் வேற்றுமைத் தொடர்?

a)

பணத்தைக் கொடுத்தான்

b)

மலையின் அருவி

c)

மகனொடு வந்தார்

d)

கலையரசினது கவிதை

16.

பின்வரும் தொடரைச் சேர்த்து எழுதினால்?

'கடை சென்றான்'

a)

கடை சென்றான்

b)

கடையில் சென்றான்

c)

கடைக்குச் சென்றான்

d)

கடையைச் சென்றான்

17.

பின்வரும் தொடரைப் பிரித்து எழுதுக.

'அண்ணனின் சட்டை'

a)

அண்ணன் + சட்டை

b)

அண்ணன் + இன் + சட்டை

c)

அண்ண + இன் + சட்டை

d)

அண்ணன் + இன் + அது + சட்டை

18.

'பேசிப் பார்த்தான்'

இஃது என்ன வகைத் தொகாநிலைத் தொடர்?

a)

பெயரெச்சத் தொடர்

b)

வினையெச்சத் தொடர்

c)

வினைமுற்றுத் தொடர்

d)

எழுவாய்த்தொடர்

19.

'படித்த மாணவன்'

இஃது என்ன வகைத் தொகாநிலைத் தொடர்?

a)

வினையெச்சத் தொடர்

b)

பெயரெச்சத் தொடர்

c)

வினைமுற்றுத் தொடர்

d)

விளித்தொடர்

20.

பின்வரும் வினையடியை வினையெச்சமாக மாற்றினால்?

'ஓடு'

a)

ஓடிய பையன், ஓடும் பையன்

b)

ஓடிச் சென்றான்,

ஓடிய பையன்

c)

ஓடிச் சென்றான், ஓடப் பார்த்தான்

d)

ஓடப் பார்த்தான், ஓடும் பையன்

21.

கீழ்க்காண்பனவற்றுள் எது வினைமுற்றுத் தொடர் அல்ல?

a)

சிரித்தனர் பெண்கள்

b)

அழுதது குழந்தை

c)

பறந்த பறவை

d)

பறந்தது பறவை

22.

எஃது உரிச்சொற்றொடர் அல்ல?

a)

வா, வா

b)

கழிப்பேருவகை

c)

சாலச் சிறந்தது

d)

உறுமீன்

23.

அடுக்குத்தொடரைத் தெரிவு செய்க.

a)

பேசினான்

b)

பேசாதே பார்க்காதே

c)

பேசு, பேசு

d)

பேசினாயா

24.

தொகாநிலைத் தொடர் மொத்தம் ____ வகைப்படும்.

a)

3

b)

5

c)

7

d)

9

25.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

கதவைத் திறந்தான் - வினைமுற்றுத்

தொடர்

b)

எழுதினார் கவிஞர் - எழுவாய்த்தொடர்

c)

குடித்த நீர் - பெயரெச்சத் தொடர்

d)

எடுத்துக் கொடுத்தான் -

உரிச்சொற்றொடர்