NEW
Font size
Worksheetsநுண்ணங்கிகள் அலகு 1 தரம் 8
Total questions: 25
Worksheet time: 25mins
வெற்றுக்கண்களால் அவதானிக்க முடியாத, நுணுக்குக்காட்டியின் உதவியுடன் மட்டும் பார்க்கக்கூடிய அங்கிகள் எவ்வாறு அழைக்கப்படும்?
பெரிய அங்கிகள்
நுண்ணங்கிகள்
தாவரங்கள்
விலங்குகள்
முதன்முதலில் நுண்ணங்கிகளை அவதானித்த விஞ்ஞானி யார்?
ஐசக் நியூட்டன்
லூயி பாஸ்டர்
அன்டன் வொன் லீவன் ஹுக்
ராபர்ட் ஹுக்
கீழ்வருவனவற்றுள் எது தனிக்கலப் பூஞ்சணத்திற்கு (Fungus) உதாரணமாகும்?
அமீபா
மதுவம் (Yeast)
பற்றீரியா
வைரசு
தேங்காய் நீரை மூன்று நாட்கள் திறந்து வைக்கும் போது அதில் உருவாகும் நுண்ணங்கி எது?
சக்ரோமைசிஸ்
லெக்டோபசிலஸ்
மியுக்கர்
பரமேசியம்
இலத்திரன் நுணுக்குக்காட்டியின் (Electron Microscope) உதவியுடன் மாத்திரம் அவதானிக்கக்கூடிய நுண்ணங்கி எது?
பற்றீரியா
பூஞ்சணம்
வைரசு
புரட்டோசோவா
பானில் வளரும் கறுப்பு நிற நார் போன்ற பூஞ்சணத்தின் பெயர் என்ன?
மதுவம்
மியுக்கர்
அமீபா
கிளாமிடோமோனாஸ்
நுண்ணங்கிகள் வளர்ச்சியடைய சாதகமான வெப்பநிலை வீச்சு எது?
0° C - 10° C
25° C - 30° C
60° C - 80° C
100° C இற்கு மேல்
வெல்லம் (சீனி) அதிகமுள்ள உணவுகளில் நுண்ணங்கித் தொழிற்பாட்டால் ஏற்படும் மாற்றம் என்ன?
அழுகலடைதல்
நொதித்தல்
பாண்டலடைதல்
ஆவியாதல்
புரதம் அதிகமுள்ள உணவுகள் (இறைச்சி, மீன்) பழுதடைவதை எவ்வாறு அழைக்கலாம்?
நொதித்தல்
அழுகலடைதல்
பாண்டலடைதல்
உரைதல்
எண்ணெய் (இலிப்பிட்டு) அதிகமுள்ள உணவுகள் பழுதடைவதால் ஏற்படும் மாற்றம் என்ன?
நொதித்தல்
பாண்டலடைதல் (Rancidity)
அழுகலடைதல்
ஆவியாதல்
வெதுப்பக உற்பத்திகளின் போது (பாண், பணிஸ்) மாக்கலவை பொங்குவதற்கு காரணமான வாயு எது?
ஆக்சிசன்
நைதரசன்
காபனீரொட்சைட்டு
ஐதரசன்
சீனிக்கரைசலில் மதுவம் தொழிற்படும் போது உருவாகும் திரவப் பதார்த்தம் எது?
நீர்
வினாகிரி
எதைல் அற்ககோல் (எதனோல்)
எண்ணெய்
கீழ்வருவனவற்றுள் வைரசினால் ஏற்படும் நோய் எது?
காசம்
டெங்குக் காய்ச்சல்
மலேரியா
தேமல்
மலேரியா நோயை உண்டாக்கும் நுண்ணங்கி வகை எது?
வைரசு
பற்றீரியா
புரட்டோசோவா
பூஞ்சணம்
குளிரூட்டியில் (Fridge) வைக்கப்படும் உணவுகள்
நுண்ணஙகியில முழுமையாக பாதுகாக்கும்
நுண்ணஙகியில் பாதுகாப்பு கிடைக்காது
நுண்ணங்கியின் தொழிப்பட்டினை காட்டுப்படுத்தும்
உணவு வெப்பநிலை வேறுபடும்
மலேரியா நோயை உண்டாக்கும் நுண்ணங்கி வகை எது?
வைரசு
பற்றீரியா
புரட்டோசோவா
பூஞ்சணம்
குளிரூட்டியில் (Fridge) வைக்கப்படும் உணவுகள் விரைவில் பழுதடையாமல் இருப்பதன் காரணம் என்ன?
அங்கு ஈரலிப்பு அதிகம்
அங்கு வெப்பநிலை மற்றும் ஈரலிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
அங்கு ஆக்சிசன் இல்லை
அங்கு வெளிச்சம் இல்லை
இறந்த தாவர மற்றும் விலங்குப் பகுதிகளைச் சிதைவடையச் செய்வதன் மூலம் நுண்ணங்கிகள் எதனைப் பேணுகின்றன?
நீர் வட்டம்
சூழல் சமநிலை
வளிமண்டல அமுக்கம்
புவி வெப்பமடைதல்
தீய நுண்ணங்கிகளை அழிக்க மற்றொரு நுண்ணங்கியைப் பயன்படுத்துவது எவ்வாறு அழைக்கப்படும்?
இரசாயனக் கட்டுப்பாடு
உயிரியல் கட்டுப்பாடு (Biological Control)
இயந்திரக் கட்டுப்பாடு
இயற்கை அழிவு
கீழ்வருவனவற்றுள் பற்றீரியாவினால் ஏற்படும் நோய் எது?
தடிமன்
போலியோ
தைபொயிட்டு (காய்ச்சல்)
தேமல்
பூஞ்சணங்களினால் (Fungus) மனிதனுக்கு ஏற்படும் பாதிப்பு எது?
தடிமன்
தோல் அழற்சி (தேமல்)
வயிற்றுளைவு
டெங்கு
நுண்ணங்கிகள் தொடர்பான ஆய்வுகள் வளர்ச்சி பெற எது முக்கிய காரணமாக அமைந்தது?
கணினி கண்டுபிடிப்பு
நுணுக்குக்காட்டி தொழில்நுட்பத்தின் முன்னேற்றம்
வாகனக் கண்டுபிடிப்பு
மின்சாரக் கண்டுபிடிப்பு
படத்தில் காட்டப்பட்டுள்ள நுண்ணங்கி எது ?
பாக்டீரியா
பங்கசு
வைரஸை
புரோட்டோசோவா
படத்தில் காட்டப்பட்டுள்ள நுண்ணங்கி எது ?
பாக்டீரியா
பங்கசு
அல்கா
புரோட்டோசோவா
படத்தில் காட்டப்பட்டுள்ள நுண்ணங்கி எது ?
பாக்டீரியா
வைரஸ்
அல்கா
புரோட்டோசோவா
