wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி

Total questions: 20

Worksheet time: 19mins

Name
Class
Date
1.
கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.

மாலதி தான் சிறு வயதில் கற்ற மலாக்கா சரித்திரம் இன்னும் மனதிலே மறையாது ஞாபகத்தில் இருப்பதாகத் தன் அம்மமவிடம் அடிக்கடிக் கூறுவாள்.
a)
காட்டுத் தீ போல
b)
வேலியே பயிரை மேய்ந்தது போல
c)
சிலை மேல் எழுத்து போல
d)
பசுத்தோல் போர்த்திய புலி போல
2.
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க. 

ஆசிய பூப்பந்து போட்டியில் தோல்வியுற்ற குணசீலன் அடுத்த ஆண்டு நிச்சயம் வெல்வேன் என்று __________.
a)
மனப்பால் குடித்தான்
b)
வெளுத்து வாங்கினான்
c)
ஒற்றைக் காலில் நின்றான்
d)
கங்கணம் கட்டிக்கொண்டான்
3.
 கீழ்காணும் கருத்துக்கேற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க. 
முயற்சியைக் விட்டு விடக்கூடாது
a)
ஆறுவது சினம்
b)
ஊக்கமது கைவிடேல்
c)
ஊண்மிக விரும்பு
d)
ஓதுவ தொழியேல்
4.
கீழ்க்காணும் காலி இடத்திற்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க,

சாரணர் முகாமில் கலந்து கொண்டவர்களில் மிகவும் அமைதியாகக் காணப்பட்ட சிவகார்த்திகேயன், திறமையாக ஒவ்வொரு பயிற்சியையும் செய்தபோது __________ இருந்த அவனது ஆற்றல் வெளிப்பட்டது.
a)
காட்டுத் தீ போல
b)
இலைமறை காய் போல
c)
சிலை மேல் எழுத்து போல
d)
சூரியனைக் கண்ட பனி போல
5.
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் படர்க்கைச் சொல் ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
உங்கள் உழைப்பிற்குப் பலன் கிட்டியது.
b)
கனகா சிறந்த ஆசிரியை என எல்லாரும் ஏற்றுக் கொண்டனர்.
c)
நாங்கள் தமிழ்மொழி கட்டுரையைப் பிழையின்றி எழுதினோம்.
d)
நம் கையிலுள்ள பத்து விரல்களும் ஒரே அளவில் அமைந்திருக்கவில்லை.
6.
கீழ்க்காண்பனவற்றுள் தன்மை சொல் ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
எங்கள் பயணம் வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறோம்
b)
உன் வளர்ச்சியைக் கண்டு இந்த நாடு பெருமைக் கொள்கிறது.
c)
பாரதி ஒரு சிறந்த தமிழ் புலவர்.
d)
உமது பாட்டும் நடனமும் மிகச் சிறப்பாக இருக்கின்றன.
7.
கீழ்க்காண்பனவற்றுள் முன்னிலைச் சொல் ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
நான் போட்டியில் வெற்றிப் பெற கடும் பயிற்சி மேற்கொண்டேன்
b)
அவள் பள்ளியின் மிகச் சிறந்த மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள்
c)
நீ செய்த தானதருமங்கள் என்றும் மக்களால் போற்றப்படும்.
d)
நாங்கள் லங்காவித் தீவைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம்.
8.
கீழ்க்காணும் வாக்கியத்தில் காலியிடத்திற்கு ஏற்ற சொல்லைத் தெரிவு செய்க.

டிங்கி __________ உயிர் இழக்கும் மக்களின் எண்ணிக்கை நம் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
a)
காய்ச்சலை
b)
காய்ச்சலுடைய
c)
காய்ச்சலால்
d)
காய்ச்சல்
9.
பின்வரும்  சொற்கள் எந்த வேற்றுமை உருபை ஏற்று வந்துள்ளன? 

புத்தகத்தை 
கிழித்ததை
a)
ஆறாம் வேற்றுமை உருபு
b)
மூன்றாம் வேற்றுமை உருபு
c)
நான்காம் வேற்றுமை உருபு
d)
இரண்டாம் வேற்றுமை உருபு
10.
வேற்றுமை உருபைச் சரியாகப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
2ஆம் வேற்றுமை - மாலா கோவிலுக்குச் சென்றாள்.
b)
4ஆம் வேற்றுமை - கபிலன் நாயைத் துரத்தி அடித்தான்.
c)
2ஆம் வேற்றுமை - பூனைக்கு வால் உண்டு.
d)
4ஆம் வேற்றுமை - சிவாவுக்குத் தாகம் எடுத்தது.
11.
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு மிகப் பொருத்தமான இடைச்சொற்களைத் தெரிவு செய்க. 

ஆசிரியர்கள் தன்னலம் கருதாது மாலை வகுப்புகள் நடத்துகின்றனர். __________ , சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இவ்வகுப்பிற்கு அனுப்புவதில்லல.
a)
எனவே
b)
 இருப்பினும்
c)
 இருப்பினும்
d)
ஆகையால்
12.
கீழ்க்காணும் வாக்கியங்களில் காலியிடங்களுக்கு ஏற்ற சரியான இடைச்சொற்களைத் தெரிவு செய்க.
இளம் சமுகத்தினர் இந்நாட்டின் நாளைய தலைவர்கள். __________ , பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை நன்னடத்தையுடனும் ஒழுக்கத்துடனும் 
வளர்க்க வேண்டும்.
a)
ஆனால்
b)
இருப்பினும்
c)
எனவே
d)
மேலும்
13.
கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கேற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.
பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் 
செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.
a)
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
b)
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
c)
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்
d)
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்
14.
கீழ்க்காணும் வாக்கியத்தில் விடுபட்ட இணைமொழியைத் தெரிவு செய்க. 

பள்ளியின் பரிசளிப்பு விழாவில் மாணவர்களின் __________ நிகழ்வுகள் வந்திருந்தோரை மிகவும் கவர்ந்தது.
a)
கல்வி கேள்வி
b)
ஆடை அணிகலன்
c)
அருமை பெருமை
d)
ஆடல் பாடல்
15.
உலக மக்களால் __________ போற்றப்படுகின்ற திருக்குறளை அருளிய திருவள்ளுவரின் __________ வருங்கால சந்ததினர்கள் அறிய வேண்டும்.
a)
அன்றும் இன்றும், கல்வி கேள்வி
b)
அன்றும் இன்றும், அருமை பெருமை
c)
அல்லும் பகலும், குறை நிறை
d)
அல்லும் பகலும், அருமை பெருமை
16.
கீழ்க்காணும் காலியிடத்திற்குப் பொருத்தமான மொழியணியைத் தெரிவு செய்க.

கவிதாவின் பெற்றோரின் வருமானம் தன்னுடைய மூன்று உடன் பிறப்புகளின் கல்வி செலவுக்கே போதுமானதாக உள்ளது. ஆனால், இவற்றைப் பொருட்படுத்தாத கவிதா, __________ வாங்குவதற்கென்று பணத்தை விரயம் செய்கிறாள்.
a)
ஆடை அணிகலன்
b)
ஆடல் பாடல்
c)
அல்லும் பகலும்
d)
மேடு பள்ளம்
17.
கொடுக்கப்பட்டுள்ள ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பாலைத் தெரிவு செய்க. 

அரசன்
a)
அரசி
b)
அசுரன்
c)
அரசத்தி
d)
அரசின்
18.
கீழ்க்காணும் சூழலில் காலியிடங்களுக்கு ஏற்ற விடையைத் தெரிவு செய்க.

கடந்த 2004 ஆம் ஆண்டு __________ சுனாமி பேரலையால் பலர் உடைமைகளை __________.
a)
ஏற்படும் … இழப்பர்
b)
ஏற்பட்ட … இழந்தனர்
c)
ஏற்பட்ட … இழக்கின்றனர்
d)
ஏற்படுகின்ற … இழக்கின்றனர்
19.
கீழ்க்காண்பனவற்றுள் இறந்தகால வாக்கியத்தைத் தெரிவு செய்க .
a)
இப்பொழுது புலவர் கீரன் இராமாயணச் சொற்பொழிவு நிகழ்த்துகின்றார்.
b)
புத்த மகான் மக்களுக்கு நல்வழி போதனைகளைப் புகட்டினார்.
c)
அன்னை குழந்தையைப் பாசமுடன் வளர்ப்பாள்.
d)
தச்சர் மரத்தினால் பெட்டிகளைச் செய்வார்.
20.
கோடிடப்பட்ட இடத்திற்குப் பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்க.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் உலக நாடுகளின் அவசர க் கால உதவிக்காக காத்துக் __________.
a)
கொண்டனர்
b)
கொண்டிருக்கின்றனர்
c)
கொண்டிருப்பார்
d)
கொண்டிருக்கவில்லை