wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

MINGGU SAINS 2017

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.
காற்று, நீர், உணவு மற்றும் வாழிடம் தேவைப்படும் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
தென்னை மரம்
b)
பம்பரம்
c)
பள்ளி
d)
பல்லி
2.
கொம்பு உள்ள விலங்கைத் தேர்ந்தெடுக்கவும்
a)
யானை
b)
நத்தை
c)
மான்
d)
ஒட்டகச்சிவிங்கி
3.
பால் பற்களின் மொத்த எண்ணிக்கை....
a)
22
b)
20
c)
30
d)
32
4.
கீழ்க்காண்பவற்றுள் எது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல?
a)
வகைப்படுத்துதல்
b)
மதிப்பீடு செய்தல்
c)
தொடர்புப் படுத்துதல்
d)
பரிசோதனை செய்தல்
5.
எது காற்றை உள்ளிழுக்கும் போது காற்று செல்லும் சுவாச பாதையைக் காட்டுக்கிறது?
a)
நுரையீரல், மூக்கு, சுவாசக்குழாய்
b)
மூக்கு, நுரையீரல், சுவாசக்குழாய்
c)
நுரையீரல், சுவாசக்குழாய், மூக்கு
d)
மூக்கு, சுவாசக்குழாய், நுரையீரல்
6.
நேரம் என்றால் என்ன?
a)
நிரப்பப்பட்ட இடத்தின் அளவு
b)
இரண்டு புள்ளிகளுக்கிடையே உள்ள தூரம்
c)
ஒரு இடத்தைச் சென்றடைய எடுத்துக் கொள்ளும் கால அளவு
d)
இரண்டு வேளைகளுக்கு இடையே உள்ள கால அளவு
7.
பின்வரும் நடவடிக்கைகளுள் எதற்கு உராய்வு தேவைப்படாது?
a)
மின்விளக்கின் விசையைத் தட்ட
b)
தீக்குச்சி எரிவதற்கு
c)
ஓடும் மிதிவண்டியை நிறுத்த
d)
பளிங்குத் தரையில் நடந்து செல்ல
8.
காந்தத்தின் இரு வெவ்வேரு துருவங்கள் சந்தித்தால்.........
a)
நடக்கும்
b)
சிரிக்கும்
c)
ஈர்க்கும்
d)
எதிர்க்கும்
9.
எது தாவர உண்ணி?
a)
கோழி
b)
குரங்கு
c)
புலி
d)
காண்டாமிருகம்
10.
எது நீரை உறிஞ்சும் பொருள் அல்ல
a)
மெல்லிழைத் தாள்
b)
துவாலை
c)
நெகிழிப் பை
d)
காகிதம்
11.
தன் முட்டையைப் பாதுகாக்காது, இலை அடிப்பாகத்தில் முட்டையிடும்.
அது எது?
a)
வெட்டுக்கிளி
b)
ஈக்கள்
c)
வண்ணத்துப்பூச்சி
d)
கரப்பான் பூச்சி
12.
குயவன் பானைச் செய்ய தேவைப்படும் மண் எது?
a)
தோட்ட மண்
b)
களிமண்
c)
மணல்
d)
காலடி மண்
13.
இயற்கை நீர் சுழற்சியில், மேகங்கள் உருவாகும் செயற்பாங்கு என்ன?
a)
உருகுதல்
b)
திண்மமாகுதல்
c)
கொதித்தல்
d)
உறைதல்
14.
ஒரு கட்டடத்தின் நிலைத்தன்மையை எது நிர்ணயிக்கிறது?
a)
அடித்தளத்தின் பரப்பளவு மற்றும் கட்டடத்தின் வடிவம்
b)
அடித்தளத்தின் பரப்பளவு மற்றும் கட்டடத்தின் உயரம்
c)
பயன்படுத்தப்பட்ட பொருள் மற்றும் கட்டடத்தின் உயரம்
d)
பயன்படுத்தப்பட்ட பொருள் மற்றும் கட்டடத்தின் வடிவம்
15.
பூமி எந்தத் திசையில் சுழல்கிறது.
a)
மேற்கில் இருந்து கிழக்காக
b)
வடக்கில் இருந்து கிழக்காக
c)
கிழக்கில் இருந்து மேற்காக
d)
வடக்கில் இருந்து மேற்காக
16.
எந்த விலங்குக்கு அதிகமான கால்கள் உள்ளன?
a)
பூரான்
b)
எறும்பு
c)
மரவட்டை
d)
சிலந்தி
17.
எது மிகவும் வெப்பமான கோள்
a)
வெள்ளி
b)
பூமி
c)
புதன்
d)
வருணன்
18.
இது வாயு பருப்பொருளின் தன்மை அல்ல.
a)
வாயுக்கு எடை உண்டு
b)
வாயுக்கு நிலையான வடிவம் இல்லை
c)
வாயு வெற்றிடத்தை நிரப்பாது
d)
வாயுவை அடர்வளுத்த முடியும்
19.
பூமியில் இருந்து நான்காவது கிரகம் எது?
a)
வெள்ளி
b)
செவ்வாய்
c)
நிருதி
d)
வியாழன்
20.
ஒளிச்சேர்க்கையின் போது தாவரம் எதை உணவாக உருவாக்குகிறது.
a)
கஞ்சி மற்றும் உயிர்வளி
b)
சர்க்கரைப் பொருள் மற்றும் உயிர்வளி
c)
கஞ்சி மற்றும் சர்க்கரைப் பொருள்
d)
பச்சையம் மற்றும் உயிர்வளி