wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

‘கடுக்காய் கொடுத்தல்’ எனும் மரபுத்தொடருக்குப் பொருந்தி வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மணியம் தன் தந்தையிடம் மரியாதைக் குறைவாகப் பேசினான்.

b)

பாலன் வாங்கிய கடனைச் செலுத்தாமல் ஏமாற்றிச் சென்றான்.

c)

குணாளன் வறுமையின் காரணத்தால் சாப்பாட்டுக்கே திண்டாடினான்.

d)

முகிலன் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் காலம் தாழ்த்தினான்.

2.

கவிதா படித்து, பட்டம் பெற்று தன் தாயையும் சகோதரர்களையும் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என ___________________

a)

கரி பூசினாள்.

b)

கங்கணம் கட்டினாள்.

c)

ஒற்றைக் காளில் நின்றாள்.

d)

கை கொடுத்தாள்.

3.

தாயார் பலமுறை அறிவுரை கூறியும் கோபாலன் பலத்த மழையிலும் பந்து விளையாட்டுக்குச் செல்ல முடிவெடுத்தான்.

சூழலுக்கேற்ற பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

a)

மனப்பால் குடித்தல்

b)

செவி சாய்த்தல்

c)

கம்பி நீட்டுதல்

d)

குரங்குப் பிடி

4.

சரியான விளக்கத்துடன் கொண்ட மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

a)

A.அவசரக் குடுக்கை - ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்.

b)

B.அரக்க பரக்க - அவசரமும் பதற்றமும்

c)

C.வாரி இறைத்தல் - அளவுக்கு மேல் செலவு செய்தல்.

d)

D.அள்ளி இறைத்தல் - விரயம் செய்தல்

5.

சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.


தாமரை தன் முதல் சம்பளத்தைக் கொண்டு தேவையற்ற பொருள்களை வாங்கினாள். தேவைக்கு அதிகமான ஆடை ஆபரணங்களை வாங்கினாள். பின் எஞ்சிய நாள்களுக்குப் போதுமான பணம் இல்லாததால் வருத்தப்பட்டாள்.

a)

அள்ளி இறைத்தல்

b)

அரக்க பரக்க

c)

வாரி இறைத்தல்

d)

மனப்பால் குடித்தல்

6.

குணாளன் வறுமையில் வாடிய தம்பதியருக்குக் ...................................

a)

கை கொடுத்தான்.

b)

தோள் கொடுத்தான்.

c)

கரி பூசினான்.

d)

கங்கணம் கட்டினாள்.

7.

_____________________ தமிழர்கள் இசைக்கலையில் நாட்டம் உடையவர்கள்.

a)

கடுக்காய் கொடுத்தல்.

b)

கரி பூசுதல்.

c)

தொன்றுதொட்டு

d)

மனக்கோட்டை

8.

தானும் தன் தந்தையுடன் மலாக்கா வருவேன் என்று குமார் _____________________ நின்றான்.

a)

கடுக்காய் கொடுத்தல்.

b)

கரி பூசிக் கொண்டான்

c)

தொன்றுதொட்டு

d)

ஒற்றைக்காலில்

9.

சுந்தரி படிக்காமல் சுற்றித் திரிந்துவிட்டு சிறப்புத் தேர்ச்சி பெறலாம் என நினைப்பது. _____________________

a)

கங்கணம் கட்டுதல்.

b)

கடுக்காய் கொடுத்தல்

c)

மனக்கோட்டை

d)

ஒற்றைக்காலில் நிற்றல்

10.

வெறும் கற்பனை =

a)

கங்கணம் கட்டுதல்.

b)

கடுக்காய் கொடுத்தல்

c)

மனக்கோட்டை

d)

ஒற்றைக்காலில் நிற்றல்

11.

பிடிவாதமாக இருத்தல் =

a)

கங்கணம் கட்டுதல்.

b)

கடுக்காய் கொடுத்தல்

c)

மனக்கோட்டை

d)

ஒற்றைக்காலில் நிற்றல்

12.

திலகா தவறுதலாக கீழே விழுந்ததை ராமன் மிகைப்படுத்தி ஆசிரியரிடம் கூறியது திலகாவிற்குக் கோபம் ஏற்பட்டது. ராமனின் இச்செயல் எந்த மரபுத்தொடருக்குப் பொருந்தி வருகிறது?

a)

அள்ளி விடுதல்

b)

அள்ளி இறைத்தல்

c)

ஆறப் போடுதல்

13.

சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.


தாமரை தன் முதல் சம்பளத்தைக் கொண்டு தேவையற்ற பொருள்களை வாங்கினாள். தேவைக்கு அதிகமான ஆடை ஆபரணங்களை வாங்கினாள். பின் எஞ்சிய நாள்களுக்குப் போதுமான பணம் இல்லாததால் வருத்தப்பட்டாள்

a)

அள்ளி இறைத்தல்

b)

அரக்கப் பரக்க

c)

கம்பி நீட்டுதல்

14.

கீழ்காணும் சூழல்களில் எது அள்ளி இறைத்தல் என்ற மரபுத்தொடருக்குப் பொருந்தி வரவில்லை?

a)

குமரன் கோழிகளுக்குத் தீனியை அள்ளி இறைத்ததால் அவனது அப்பா அவனைக் கண்டித்தார்.

b)

மாலா தேவையற்றப் பொருள்களை வாங்கி பணத்தை அள்ளி இறைத்ததால் இன்று சிரமப்படுகிறாள்.

c)

குவளையைத் தம்பி தான் உடைத்ததாக தீபன் அம்மாவிடம் அள்ளி இறைத்தான்.

15.

ராதா குமரனின் புத்தகத்தைத் திருடிவெட்டு அள்ளி இறைத்ததால் ஆசிரியர் அவளுக்குத் தண்டனை வழங்கினார்.

a)

சரி

b)

தவறு

16.

அள்ளி விடுதல் என்பதின் பொருள் என்ன?

a)

பிறருடைய கவனத்திலிருந்து தப்பித்துப் போய்விடுதல்

b)

பொருட்களை எடுத்து கீழே இறைத்தல்

c)

அளவுக்கு மேல் செலவழித்தல்

d)

ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்

17.

படம் உணர்த்தும் மரபுத்தொடர் எது?

a)

கண்ணும் கருத்தும்

b)

அள்ளி இறைத்தல்

c)

அள்ளி விடுதல்

d)

செவி சாய்த்தல்

18.

சரியான பொருளைத் தெரிவு செய்க.

ஏட்டுச் சுரைகாய்

a)

சமைக்க உதவும்

b)

மொரு செயலைக் காலந்தாழ்த்திச் செய்தல்

c)

நடைமுறைக்குப் பயன் படாத அறிவு

19.

செல்வனுக்கு வாகனங்களைப் பற்றி அனுபவக்கல்வி இல்லை. தான் பணிபுரியும் பட்டறையில் பழுதடைந்த வாகனங்களைச் சீர்ச் செய்ய,அவன் கற்ற கல்வி உதவவில்லை.

a)

கம்பி நீட்டுதல்

b)

ஏட்டுச் சுரைக்காய்

c)

ஆறப் போடுதல்

20.

இராஜா இரவு முழுவதும் தொலைக்காட்சியில் நேரம் செலவழித்துக் காலையில் தாமதமாக எழுந்ததால் ........................... தயாராகி வேலைக்குச் சென்றான்.

a)

நாக்கு நீளுதல்

b)

அரக்க பரக்க

c)

அள்ளி இறைத்தல்

d)

எடுப்பார் கைப்பிள்ளை