wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கீக்காணும் பொருளைத் தரும் பழமொழியைத் தெரிவு செய்க.

எதையும் முறியாகச் பயிற்சி செய்து வந்தால்தான் நாம் அதில் வல்லமை பெற முடியும்.

a)

வருந்தினால் வாராதது இல்லை

b)

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

c)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

d)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

2.

மந்திரி : அன்று என் வேண்டுகோளுக்குத் தாங்கள் _______________

மன்னர் : ஆமாம். தங்கள் சொற்படி நடந்திருந்தால் இந்தத் __________ ஏற்பட்டிருக்காது.

a)

கை கொடுக்கவில்லை / கரி பூசுதல்

b)

ஆழம் பார்க்கவில்லை / ஈவிரக்கம்

c)

செவி சாய்க்கவில்லை / தலை குனிவு

d)

அள்ளி இறைக்கவில்லை / காது குத்துதல்

3.

கீழ்க்காணும் பொருளைத் தரும் கொன்றை வேந்தன் யாது?

விடாமுயற்சியோடு செயல்படுவது வாழ்க்கையை வளப்படுத்தும்.

a)

ஐயம் புகினும் செய்வனச் செய்

b)

திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு

c)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

d)

நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக

4.

________ ஓடி வந்த சிறுவன் வாழைப்பழத் தோலை மிதித்து வழுக்கி விழுந்ததும் எல்லாரும் ______ சிரித்தனர்.

a)

சரசரவென/ கலகலவெனச்

b)

சரசரவென / கிலுகிலுவெனச்

c)

குடுகுடுவென / கலகலவெனச்

d)

குடுகுடுவென / கிலுகிலுவெனச்

5.

________________________________________________

மாடல்ல மற்றை யவை


குறட்பாவை நிறைவு செய்க.

a)

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

b)

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

c)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு

d)

அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு

6.

இவற்றுள் எந்தத் தொடர் நல்ல நட்புக்கு உவமையாக அமைகிறது.

a)

நகமும் சதையும் போல

b)

மலரும் மணமும் போல

c)

எலியும் பூனையும் போல

d)

கண்ணினைக் காக்கும் இமை போல

7.

படர்க்கை வினைமுற்றைக் கொண்ட வாக்கியம் எது?

a)

அவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்றாய்.

b)

அவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்றான்.

c)

அவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்றேன்.

d)

அவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்றோம்.

8.

சேர்த்தெழுதுக.

வேல் + படை = ____________________

a)

வேற்படை

b)

வேட்படை

c)

வேல்படை

d)

வேலப்படை

9.

பிரித்தெழுதுக.

நன்னான்கு = _________________

a)

நாலு + நான்கு

b)

நல்ல + நான்கு

c)

நன்று + நான்கு

d)

நான்கு + நான்கு

10.

பெயரெச்சம் கொண்ட வாக்கியம் எது?

a)

அருண், திறந்த கதவைச் சாத்து.

b)

வேதா, வாசல் மணி ஒலிக்கிறது.

c)

லோகா, புத்தகத்தை எடுத்துப் படி.

d)

அம்மா, படம் பார்க்கப் போகிறேன்.

11.

நான் வரமாட்டேன் _________ அது மாதிரி இடங்களுக்கு போகக் கூடாதென்று என் வீட்டில் சொல்லியிருக்கிறார்கள்.

a)

ஆனால்

b)

ஆதலால்

c)

ஏனெனில்

d)

இருப்பினும்

12.

சரியான வினைச்சொல்லைத் தெரிவு செய்க.

ஒருமை, நிகழ்காலம், உயர்தினை, பெண்பால், படர்க்கை

a)

கொண்டாடுவாள்

b)

கொண்டாடுகிறது

c)

கொண்டாடுகிறாள்

d)

கொண்டாடினார்கள்

13.

எழுவாய்க்கேற்ற பயனிலை அமைந்த வாக்கியம் எது?

a)

அம்மா முருகனிடம் புறப்படும்படி கேட்டார்.

b)

ஆற்றுவெள்ளம் மலையுச்சியிலிருந்து ஊர்ந்தது.

c)

குதிரை தன் எஜமானனைக் கண்டதும் கத்தியது.

d)

மன்னர் தாம் நீதி தவறியதை எண்ணி வருந்தினார்.

14.

கீழ்காணும் வாக்கியத்திலுள்ள ஒருமைச் சொற்களைப் பன்மையாக்குக.

அது அவன் பின்னால் வாலாட்டிக்கொண்டு சென்றது.

a)

அது அவன்களின் பின்னால் வாலாட்டிக்கொண்டு சென்றது.

b)

அவை அவர்களின் பின்னால் வாலாட்டிக்கொண்டு சென்றன.

c)

அதுகள் அவர்களின் பின்னால் வாலாட்டிக்கொண்டு சென்றதுகள்.

d)

அவைகள் அவர்களின் பின்னால் வாலாட்டிக்கொண்டு சென்றார்கள்.

15.

கீழ்க்காணும் குறட்பாவில் எத்தனை வல்லின உயிர்மெய் எழுத்துகள் உள்ளன?


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு

a)

ஏழு

b)

ஒன்பது

c)

பதினொன்று

d)

பதின்மூன்று