wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

காரணப்பெயர்/ இடுகுறிப்பெயர் - வலிமிகா இடங்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. கோடிடப்பட்டுள்ள சொற்களின் வகையைத் தெரிவு செய்க.


அந்த நாற்காலி பிளாஸ்டிக் அல்லது மரம் துணைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பொருளாகும்.

a)

நாற்காலி மரம்


A.இடுகுறிப்பெயர், காரணப்பெயர்

b)

நாற்காலி மரம்

B.காரணப்பெயர்,இடுகுறிப்பெயர்

c)

நாற்காலி மரம்


c.பெயர்ச்சொல், பெயர்ச்சொல்

d)

நாற்காலி மரம்

D.பொருட்பெயர் பெயர்ச்சொல்

2.

1. கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் சரியான வினைத்தொகையில் வலிமிகாத இணையைத் தெரிவு செய்க.

a)

A. ஊறு + காய் = ஊறுக்காய்

b)

B. வளர் +மதி = வளர்மதி

c)

C. கதை +கட்டினான் = கதை கட்டினான்

d)

D. பூ +கூடை =பூக்கூடை

3.

இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகாது என்னும் விதிக்கேற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

A. அக்கா பழத்தைச் சாப்பிட்டார்

b)

B. மணியம் தேன் குடித்தான்.

c)

C.ராணி வீட்டுக்குப் புறப்பட்டாள்.

d)

D.மாலதி சாலையைக் கடந்தாள்.

4.

கீழ்க்காணும் சொற்கள் உணர்த்தும் மிகச் சரியான இலக்கண விதியைத் தெரிவு செய்க.


· தம்பி சட்டை

· குழந்தை கை

a)

A.ஆறாம் வேற்றுமைத்தொகையில் வலிமிகும்.

b)

B.ஆறாம் வேற்றுமைத்தொகையில் வலிமிகாது.

c)

C.இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வலிமிகாது.

d)

D.உம்மைத்தொகையில் வலிமிகாது.

5.

கீழ்க்காண்பனவற்றுள் உம்மைத்தொகையில் வலிமிகா சொற்கள் ஏற்றுள்ள தொடரைத் தெரிவு செய்க.

a)

A.சேவல் கூவியது

b)

B.செடி கொடி

c)

C.தம்பி சட்டை

d)

D.பார்த்த படம்

6.

6. கீழ்க்காணும் விதிக்கேற்ற சரியான விடையைத் தெரிவு செய்க.


இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகாது

a)

A. விறகு கட்டினான்

b)

B. தம்பி சட்டை

c)

C.சேவல் கூவியது

d)

D.பார்த்த படம்

7.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் காணப்படும் சொற்களுக்கான ஏற்ற இணையைத் தெரிவு செய்க.

நீர், நிலம், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் பஞ்சபூதங்களில் அடங்கும்.இவையனைத்தும் நமக்கு மிக அவசியம்.

a)

A. நீர் - காரணப்பெயர்

b)

B. நிலம் - இடுகுறிப்பெயர்

c)

C. காற்று - சினைப்பெயர்

d)

D.நெருப்பு - பண்புப்பெயர்

8.

கொடுக்கப்பட்ட சூழலில் காலியிடத்திற்குப் பொருத்தமான காரணப்பெயர்களைத் தெரிவு செய்க.

குப்பைகளைத் திறந்த வெளியில் எரிப்பதால் தூய்மைக்கேடு ஏற்படுகிறது.அதுமட்டுமின்றி,அக்குப்பைகளால் அசுத்தமடைந்து உயிரினங்களுக்கு பெரிய பாதிப்புள்ளாகிறது.

a)

A.காற்று,மண்

b)

B.காற்று,நீர்

c)

C.நீர்,காற்று

d)

D.நீர்,மண்

9.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் கோடிட்டப்பட்டுள்ள சொற்களுக்குச் சரியான

விதியைத் தெரிவு செய்க.


அம்மா என் கை குழந்தைகையினதுப் போன்று இருக்கின்றது என்று சொன்னார்.

a)

A.ஆறாம் வேற்றுமைத் தொகை நிலைத்தொடர் வாக்கியத்தின் முதலில் வந்தால் வலிமிகும்.

b)

B.ஆறாம் வேற்றுமைத்தொகையில் நிலைமொழி உயர்திணையாய் இருப்பின் வலிமிகாது.

c)

C.ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாக இருந்தால் வலிமிகும்.

d)

D.ஆறாம் வேற்றுமை தொகைநிலைத் தொடர் வாக்கியத்தின் இடையில் வந்தால் வலிமிகும்.

10.

கீழ்க்காணும் கூற்றில் கோடிடப்பட்டுள்ள சொற்றொடரில் வலிமிகவில்லை.ஏன்?

பல காலம் இருமல் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ராமு, அம்மாவின் ஆலோசனைப்படி தேன் குடித்து வந்ததால் குணமடைந்தான்.

a)

A.இரண்டாம் வேற்றுமைத் தொகை என்பதால்.

b)

B.ஆறாம் வேற்றுமைத் தொகை என்பதால்

c)

C. உம்மைத்தொகை என்பதால்

d)

D. வினைத்தொகை என்பதால்