NEW
Font size
Worksheetsவேற்றுமை
Total questions: 10
Worksheet time: 5mins
கவிதா சாப்பிடாமல் இருந்ததால் _________ மயக்கம் வந்தது.
அவளிடம்
அவளுடைய
அவளுக்கு
அவளின்
அக்காலத்தில் புலவர்கள் பல பாடல்களைப் பாடி ____________ பல பரிசுகள் பெற்றார்கள்.
மன்னர்களுக்கு
மன்னர்களில்
மன்னர்களுடைய
மன்னர்களிடமிருந்து
மாறன் தன் ____________ பூங்காவிற்குச் சென்று மிதிவண்டி ஓட்டினான்.
தங்கையுடன்
தங்கையை
தங்கையின்
தங்கையிடம்
____________ உறுதி வேண்டும் என்று பாரதியார் கூறியிருக்கிறார்.
மனதோடு
மனதுக்கு
மனதில்
மனதிலிருந்து
சிவா துணிச்சலுடன் செயல்பட்டு ____________ கண்டுபிடித்தான்.
குற்றவாளியிடம்
குற்றவாளியின்
குற்றவாளியை
குற்றவாளியோடு
சிதம்பரனாரின் _____________ வியாபாரத்தில் நட்டத்தை எதிர்நோக்கிய ஆங்கிலேயர்கள் அவர் மீது கடுங்கோபம் கொண்டனர்.
செயலை
செயலால்
செயலின்
செயலுக்கு
சாலையைக் கடந்ததும் முதியவர் ________________ இருப்பதாகக் கூறினார்.
பசிக்கு
பசியால்
பசியை
பசியுடன்
______________ அமைதி குறைந்து, துன்பம் ஏற்படுவதற்குக் காரணம் ஆசையே.
மனிதர்களுடன்
மனிதர்களை
மனிதர்களின்
மனிதர்களுக்கு
முதலை விழுங்கும் கற்கள் அதன் வயிற்றினுள் இருக்கும் இரையை மாவு அரைக்கும் மின் ____________ போன்று அரைக்கும்.
அரவையின்
அரவையை
அரவையுடன்
அரவைக்கு
பெங்குவின் பறவைகள் பெரும்பாலும் தென் துருவப் _____________ மிகுதியாகக் காணப்படும்.
பகுதிக்கு
பகுதியை
பகுதியின்
பகுதியில்
