Font size
Worksheetsஆண்டு 6 நன்னெறிக்கல்வி : நேர்மை| ஓநாயும் இடையனும்
Total questions: 8
Worksheet time: 6mins
ஏன் ஆடு மேய்க்கும் இடையன் "ஓநாய், ஓநாய்" என அழுதான்?
அவன் புதரின் அசைவைக் கண்டு தவறாக எண்ணி விட்டான்.
அவனுக்குக் கண் சரியாகத் தெரியவில்லை.
பொழுது போகவில்லை என்பதனால் அவ்வாறு பொய்யுரைத்தான்
ஏமாற்றுவது அவனது குணம்
இடையனிடம் உள்ள தீய குணங்கள் யாவை?
உண்மை பேசுதல்
பொய் உரைத்தல்
பிறருக்கு உதவுதல்
சோம்பல்
அவனது பொய்யால் என்ன நிகழ்ந்தது?
அவன் ஓநாய்க்கு இரையானான்.
ஊர் மக்கள் ஓநாய்க்கு இரையாகினர்.
அவனது ஆடுகள் அனைத்தும் ஒநாயால் அடித்துக் கொல்லப்பட்டன.
ஓநாய் அவனைக் கொன்றிருக்கும்.
ஊர் மக்கள் ஏன் அவனுக்கு உதவ முன் வரவில்லை?
பல முறை பொய் கூறியதால் ஓநாய் உண்மையில் வரும்போது ஊர் மக்கள் அவன் பொய் உரைக்கிறான் என எண்ணினர்.
ஊர் மக்கள் உதவும் எண்ணம் கொண்டவர்கள் அல்ல.
அவன் பொறாமை குணம் கொண்டவன் என்பதனால்
அவன் கருமி என்பதனால்
நேர்மையற்ற குணத்தால் ஏற்படும் விளைவுகள் என்ன?
அக்குணம் நமக்குத் தீமையையே ஏற்படுத்தும்.
யாரும் நம்மை நம்பமாட்டார்கள்
அனைவரும் நம்மிடம் அன்பாகப் பழகுவர்.
யாரும் நமக்கு உதவ முன் வரமாட்டார்கள்.
ஒரு கடை முதலாளி தரமற்றப் பொருள்களை விற்றால் என்ன நிகழும்?
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும்.
வியாபாரம் நஷ்டத்தில் முடியும்
அதிக லாபம் ஈட்டலாம்.
வியாபாரம் சிறப்பாக நடைபெறும்
ஏன் நாம் செய்த தவற்றை ஒப்புக்கொள்ள வேண்டும்?
அப்பொழுதுதான் நாம் தவறு செய்யாத போது உண்மை பேசினால் பிறர் நம்மை நம்புவர்.
அப்பொழுதுதான் பிறருக்கு நம் மீது நம்பிக்கை பிறக்கும்.
பொய் உரைப்பது மகிழ்ச்சியைத் தரும்.
உண்மையைச் சொன்னால் தண்டனை கிடைக்கும்.
வழியில் பணப்பையைக் கண்டெடுத்தால் என்ன செய்வாய்?
உரியவரிடம் கொடுப்பேன்
காவல் அதிகாரியிடம் ஒப்படைப்பேன்
பணத்தை எடுத்துக்கொள்வேன்.
இறைவனுக்கு நன்றி கூறுவேன்
