NEW
Font size
Worksheets10 ஆம் வகுப்பு கணிதம் பயிற்சி 2.10 ஆக்கம் கோ.இளவரசு
Total questions: 15
Worksheet time: 8mins
யூக்ளிடின் வகுத்தல் துணைத்தேற்றத்தின் படி a மற்றும் b என்ற மிகை முழுக்களுக்கு தனித்த மிகை முழுக்கள் q மற்றும் r, a=bq+r என்றவாறு அமையுமானால் ,இங்கு r ஆனது,
1<r<b
0<r<b
0 ≤ r<b
0<r ≤ b
யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி, எந்த மிகை முழுவின் கனத்தையும் 9 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்
0,1,8
1,4,8
0,1,3
1,3,5
65 மற்றும்117-யின் மீ.பொ.வ.வை 65m - 117 என்ற வடிவில் எழுதும்போது,m -யின் மதிப்பு
4
2
1
3
1729 -ஐ பகாக் காரணிப்படுத்தும் போது,அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல்
1
2
3
4
1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து என்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண்
2025
5220
5025
2520
74k ≅ __________(மட்டு 100)
1
2
3
4
F1=1,F2=3 மற்றும் Fn=Fn-1+Fn-2 என கொடுக்கப்பட்டால் F5 ஆனது
3
5
8
11
ஒரு கூட்டுத்தொடர்வரிசையின் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 எனில்,பின்வரும் எண்களில் எது இந்த கூட்டுத்தொடர் வரிசையில் அமையும்?
4551
10091
7881
13531
ஒரு கூட்டுத்தொடர்வரிசையின் 6 வது உறுப்பின் 6 மடங்கும் 7 வது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில்,அந்த கூட்டுத்தொடர் வரிசையின் 13 வது உறுப்பு?
0
6
7
13
ஒரு கூட்டுத்தொடர்வரிசையில் 31உறுப்புகள் உள்ளன.அதன் 16 வது உறுப்பு m எனில்,அந்த கூட்டுத்தொடர் வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல்
16 m
62 m
31 m
231 m
ஒரு கூட்டுத்தொடர்வரிசையின் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 . இந்த கூட்டுத்தொடர் வரிசையின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்
6
7
8
9
A=265 மற்றும் B=264+263+262+...+20 எனக் கொடுக்கப்பட்டுள்ளது எனில் பின் வருவனவற்றில் எது உண்மை?
B ஆனது A ஐ விட 264 அதிகம்
A மற்றும் B சமம்
B ஆனது A ஐ விட 1 அதிகம்
A ஆனது B ஐ விட 1 அதிகம்
163 , 81 , 121 , 181 , . . . என்ற தொடர் வரிசையின் அடுத்த உறுப்பு
241
271
32
811
t1,t2,t3,--- என்பது ஒரு கூட்டுத்தொடர் வரிசை எனில், t6,t12,t18, .... என்பது
ஒரு பெருக்குத்தொடர் வரிசை
ஒரு கூட்டுத்தொடர் வரிசை
ஒரு கூட்டுத்தொடர் வரிசையுமல்ல, ஒரு பெருக்குத்தொடர் வரிசையுமல்ல
ஒரு மாறிலித்தொடர் வரிசை
(13+23+33+....+153) - (1+2+3+...+15) யின் மதிப்பு
14400
14200
14280
14520
