NEW
Font size
Worksheetsமரபுத்தொடர்கள் 1 (4EX/5N)
Total questions: 10
Worksheet time: 30mins
மாணவர்கள் படிக்கும் பருவத்தில் தேவையற்ற சிந்தனைகளுக்கு _____________ அவர்களின் முன்னேற்றம் பாதிக்கப்படும்.
இடங்கொடுத்தால்
செவி சாய்த்தால்
ஒரு நிகழ்வைப் பற்றி _____________ கேள்விப்பட்டதை மட்டும் வைத்துக்கொண்டு எடுக்கப்படும் முடிவு சரியான தீர்வாக அமையாது.
அரைகுறையாக
தப்பும் தவறுமாக
பணக்காரர்கள் ஏழைகளுக்குச் சொந்தமான உடைமைகளை ______________ நிலை இன்றும் சில நாடுகளில் காணப்படுகிறது.
தட்டிக் கேட்கும்
தட்டிப் பறிக்கும்
பொது நலத்திற்குக் கேடு ஏற்படும்போது மட்டுமே ஒரு தனி மனிதனின் சுதந்திரத்தில் __________ உரிமை பிறருக்கு உண்டு.
தலையிடும்
தட்டிக்கேட்கும்
குடும்பத்தினரிடையே __________________ பழக்கம் இருந்தால்தான் அவர்களிடையே புரிந்துணர்வு ஏற்பட்டு உறவு மேம்படும்.
மனந்திறந்து பேசும்
தூக்கிவாரிப் போடும்
தமிழ் மொழி மாதத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளால் நம் மாணவர்கள் தமிழ்மொழியின் ___________________ அறிய முடிகிறது.
அருமை பெருமைகளை
நன்மை தீமைகளை
திருக்குறள் ஓர் ___________ நூல் என்றால் அது மிகையல்ல.
ஒப்புயவற்ற
உயர்வு தாழ்வற்ற
மாலாவின் குணம் தெரிந்ததால் அவள் பிரியாவைப் பற்றி ___________________ கூறிய செய்திகளை யாரும் நம்பவில்லை.
கதைகட்டி
இட்டுக்கட்டி
தனக்கு ஐபேட் என்ற மின்னியல் சாதனத்தை வாங்கிக் கொடுத்தே தீர வேண்டும் என்று தன் மகள் சூழ்நிலை தெரியாமல் ___________________ நின்றது மாறனை வேதனையில் ஆழ்த்தியது.
குரங்குப்பிடியாக
ஒற்றைக்காலில்
குடித்துவிட்டு ___________________ வாகனம் ஒட்டுவதால் விபத்துகள் ஏற்படுவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
கண்மூடித்தனமாக
கரடு முரடாக
