Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 5 ALLI
Total questions: 20
Worksheet time: 17mins
இரத்தத்தில் இருக்கும் நோய்க் கிருமிகளைக் கண்டறியத் தேவைப்படும் கருவி எது?
தொலைநோக்கி
நுண்ணோக்காடி
உருப் பெருக்காடி
ஸ்டெதாஸ்கோப்
நிலநடுக்கத்தையும் சுனாமி அபாயத்தையும் கண்டறிய உதவும் கருவி எது?
ரெக்டர் கருவி
ஸ்டெதாஸ்கோப்
உருப் பெருக்காடி
படத்திலுள்ள சுவைபானத்தின் சுவையை எந்த ஐம்புலன்களைக் கொண்டு அறிய முடியும்?
மூக்கு
நாக்கு
தோல்
கண்
கீழ்க்கண்ட படத்திலுள்ள விலங்குகளுள் வேறுபாடானது எது?
அறிவியல் அறைக்குள் நுழையும் முன்னர் _________________ அனுமதியைப் பெற வேண்டும்.
தலைமையாசிரியரின்
அறிவியல் ஆசிரியரின்
தலைமை மாணாக்கரின்
துணைத் தலைமை ஆசிரியரின்
அறிவியல் அறையில் உள்ள வேதியல் ( இரசாயன) பொருள்களை முகரக் கூடாது.ஏன்?
அறிவியல் ஆசிரியர் கோபம் கொள்வார்
அவை நச்சுத்தன்மை கொண்டிருக்கக் கூடும்.
அவை நாற்றமடிக்கும்
அவற்றின் தன்மை மாறிவிடும்
அறிவியல் அறையில் ஓடி விளையாடக் கூடாது.ஏன்?
ஆய்வுப் பொருள்கள் உடைந்து போகும்
ஆபத்தை உண்டாக்கும்
ஆய்வில் இடையூறு ஏற்படுத்தும்
ஆய்வில் பயன்படுத்திய ரொட்டியை, ஆய்வுக்குப் பின்னர் ___________________________
சக மாணவர்களுடன் பகிர்ந்து சாப்பிட வேண்டும்.
பையில் கட்டிக் குப்பைத்தொட்டியில் போட வேண்டும்.
பையில் கட்டாமல் குப்பைத்தொட்டியில் போட வேண்டும்.
அழுங்கு எவ்வாறு எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?
நிறத்தை மாற்றிக் கொள்கிறது.
பந்துபோல் சுருண்டு கொள்கிறது
துர்நாற்றத்தை வெளியாக்குகிறது
ஓட்டுக்குள் இழுத்துக் கொள்கிறது.
தன்னைத் தற்காத்துக் கொள்ள இறந்துபோல் நடிக்கும் விலங்கு எது?
வண்டு
நத்தை
ஆமை
கணவாய்
துர்நாற்றத்தை வெளிப்படுத்தித் தன்னை தற்காத்துக் கொள்ளும் விலங்குகள் யாவை?
பல்லி,மூட்டைப் பூச்சி
தவளை,மூட்டைப் பூச்சி
ஸ்கங்,மூட்டைப் பூச்சி
ஓநாய்,மூட்டைப் பூச்சி
நீண்ட உறக்கத்தின்வழி தன்னைக் கடுங்குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் விலங்கு எது?
பாண்ட
துருவக்கரடி
பெங்குயின்
கோமோடோ
பின்வரும் உணவுச் சங்கிலியைப் பொருத்தமாக நிறைவு செய்க.
நெற்பயிர் - வெட்டிக்கிளி - ________________ - கழுகு
மண்புழு
புலி
பாம்பு
மான்
பின்வரும் எது தொடுதல் புலனுடன் தொடர்புடையது அல்ல?
ஒரு குவளையில் உள்ள நீரின் வெப்பநிலையை அறிதல்.
ஒரு பாத்திரத்தில் உள்ள சீனி தூளின் மென்மையை அறிதல்
மணற்தாளின் சொர சொரப்பை அறிதல்.
இசைக்கருவியின் ஒலியை அறிதல்.
படம், இரண்டு வித விலங்குகளைக் காட்டுகிறது. இந்த விலங்குகள் எவ்வாறு தம் இனவகை நீடுநிலவலை உறுதி செய்கின்றன?
கூட்டமாக வாழும்
குட்டிகளைப் பாதுகாக்கும்
அதிக முட்டைகள் இடும்
தனித்து வாழும்.
பின்வருவனவற்றுள் எது சரியான இணை அல்ல?
பல்லி - வாலைத் துண்டித்துக் கொள்ளும்.
அழுங்கு - உடலைச் சுருட்டிக் கொள்ளும்
கரப்பான் பூச்சி - இறந்ததைப் போல பாசாங்கு செய்யும்.
ஒட்டகம் - நீரில் புரளும்.
மாணவர்கள் அறிவியல் அறையினுள் நுழைவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?
ஆசிரியர் அனுமதியைப் பெற வேண்டும்.
கைகளைத் தூய்மையாகக் கழுவ வேண்டும்.
கையுறை அணிய வேண்டும்.
பள்ளி சீருடையை அணிய வேண்டும்.
சீதா ரோஜா மலரை நுகர்கிறாள்.
மேற்காணும் சூழலில் சீதா உற்றறிய எந்தப் புலனைப் பயன்படுத்துகிறாள்.
நாக்கு
மூக்கு
காது
தோல்
கீழ்க்காண்பவனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல ?
வகைப்படுத்துதல்
தொடர்புப் படுத்துதல்
மதிப்பீடு செய்தல்
பரிசோதனை செய்தல்
