wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மொழியணிகள்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

காற்பந்து விளையாட்டின்போது மயங்கி விழுந்த ரவிந்திரனைப் பள்ளியின் செம்பிறை சங்க மாணவர்கள் __________________வென மருத்துவர் கூடாரத்திற்கு அழைத்துச் சென்றனர்.

a)

திமுதிமு

b)

பரபர

c)

விறுவிறு

d)

துருதுரு

2.

வகுப்பறையில் ஆசிரியர் போதித்துக் கொண்டிருந்தபோது, ரமேஷ் தன் நண்பர்களுடன் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தான்.

a)

சடசட

b)

தொணதொண

c)

விறுவிறு

d)

கிடுகிடு

3.

அதிகாலையில் வீசிய புயல்காற்றினால் வீட்டின் முன்னிருந்த மரக்கிளைகள் ________________வென முறிந்து கூரையின் மீது விழுந்தன.

a)

தளதள

b)

வெடவெட

c)

மடமட

d)

சடசட

4.

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டடங்கள் __________________வென ஆட்டங்கண்டதால் மக்கள் பதற்றத்தோடு வெளியேறினர்.

a)

கடகட

b)

கிடுகிடு

c)

நசநச

d)

வெடவெட

5.

வேட்டுச் சத்தத்தைக் கேட்ட காட்டு விலங்குகள் ________________ வென பாதுகாப்பான

இடம் தேடி ஓடின.

a)

தளதள

b)

விறுவிறு

c)

திமுதிமு

d)

கிடுகிடு

6.

ஆசிரியர் கற்பித்த திருக்குறட்பாக்கள் அனைத்தையும் இளமாறன் ஒரே மூச்சில் மனனம் செய்து ஒப்புவித்தான்.

a)

சடசட

b)

கடகட

c)

விறுவிறு

d)

கிடுகிடு

7.

திருமண விருந்தில் ............................வென அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அப்பெரியவர் கண்டித்தார்.

a)

தொணதொண

b)

கலகல

c)

துருதுரு

d)

பரபர

8.

மலை பிரதேசத்திற்குச் சுற்றுலா சென்ற அன்பரசன் குளிர் தாங்க முடியாமல் ................................. என நடுங்கினான்.

a)

சிலுசிலு

b)

கடகட

c)

நசநச

d)

வெடவெட

9.

நன்கு நீரூற்றி உரமிட்ட மல்லிகைச் செடிகள் ______________ எனச் செழிப்பாக வளர்ந்திருந்தன.

a)

சிலு சிலு

b)

தளதள

c)

நசநச

d)

பரபர

10.

திரையரங்கினுள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக செய்தி பரவியவுடன் மக்கள் முண்டியடித்துக் கொண்டு வெளியேறினர்.

a)

திமு திமு

b)

துரு துரு

c)

விறு விறு

d)

பர பர