wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியக் கேள்விகள்

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் வாக்கியத்தை ஏற்புடைய இணைமொழியைக் கொண்டு நிரப்புக.


  • குடிநீர் திட்டத்தில் குழாய் நீர் பதித்த சாலைகளில் குழியைச் சரியாக மூடாததால் _____________மாகக் காணப்படுகிறது.
a)

மேடு பள்ளம்

b)

ஒளிவு மறைவு

c)

அங்கும் இங்கும்

2.

பின் வரும் பொருளுக்கு ஏற்ற செய்யுள் எது ?


நாம் பொறாமை கொண்டு பிறரை தூற்றிப் பேசக் கூடாது.

a)

ஏற்பது இகழ்ச்சி

b)

உடையது விளம்பேல்

c)

ஔவியம் பேசேல்

3.

தாய்க் கொஞ்சுவதைக் கண்டு குழந்தை ____________ என்று சிரித்தது.

a)

கல கல

b)

சல சல

c)

மள மள

d)

பள பள

4.

கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.


கோபங்கொண்டோர் வீட்டின் வழியே போக வேண்டாம்.

a)

சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்

b)

நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்

c)

நல்லிணக்க மில்லோரோ டிணங்க வேண்டாம்

d)

சினந்திருந்தார் வாசல் வழிச் சேறல் வேண்டாம்.

5.

செய்யுளைப் பூர்த்தி செய்க.


_______________ மண்னாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

கோனாகி யான் எனது என்றவரைக் __________________

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.

a)

வானாகி ......... தேனாகி

b)

தேனாகி ......... கூத்தாட்டு

c)

வானாகி ......... கூத்தாட்டு

6.

சரியான இரட்டைக்கிளவியைக் கொண்ட வாக்கியத்தை நிறைவு செய்க.


  • காவல் அதிகாரிகள் ________________வென திருடர்களை இழுத்துச் சென்றனர்.
a)

திரு திரு

b)

தர தர

c)

சல சல

d)

குடு குடு

7.

கீழே கொடுக்கப்பட்டுள்ள மொழியணிக்கு ஏற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடுக.


  • ஊண்மிக விரும்பு
a)

அஞ்சா நெஞ்சத்துடன் செயற்பட வேண்டும்.

b)

பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்.

c)

உடலுக்கு நலத்தைத் தருகின்ற உணவுகளை விரும்பி உண்ண வேண்டும்.

8.

கீழ்க்காணும் விளக்கத்திற்கு பொருத்தமான உவமைத் தொடரைத் தெரிவு செய்க.


நல்லவன் போல நடித்துப் பிறரை

ஏமாற்றும் குணம் படைத்தவன்.

a)

எலியும் பூனையும் போல

b)

இலைமறை காய் போல

c)

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

d)

பசுத்தோல் போத்திய புலி போல

9.

கீழ்க்காணும் செய்யுளின் மூன்றாவது அடி எது ?


அடக்க முடையா ரறிவிலரென் றென்னிக்

கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில்

________________________________________________

வாடி யிருக்குமாங் கொக்கு.

a)

ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்

b)

ஆன முதலில் அதிகஞ் செலவானால்

c)

மெய்வருத்தம் பாரார்

10.

கொடுக்கப்பட்ட கொன்றை வேந்தனுக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.


  • அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
a)

தாயும் தந்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய தெய்வம் ஆவர்.

b)

நமது அன்னை மிகவும் நல்லவர்.

c)

பெற்ற தாயைவிட ஒருவருக்குச் சிறந்த கோயில் வேறெதுவும் கிடையாது.

d)

தந்தையின் சொல்லைவிட மேலான அறிவுரை கிடையாது.