Worksheetsவேகம்
Total questions: 10
Worksheet time: 6mins
வேகம் என்றால் என்ன?
குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பொருள் சென்ற தூரம்
குறுகிய நேரத்தில் ஒரு பொருள் சென்ற தூரம்
அதிக நேரத்தில் ஒரு பொருள் சென்ற தூரம்
இரண்டு பொருள்களிடையே ஏற்பட்ட உராய்வு
அமின் 2 மணி நேரத்தில் 120km பயணிக்கிறான். அவனது வேகம் என்ன?
120கிமீ/ மணி
60கிமீ/ மணி
30கிமீ/மணி
60 மணி
குமார் மணிக்கு 10கிலோமீட்டர் வேகத்தில் மிதிவண்டி செலுத்தினான். முத்து இன்னும் வேகமாக மிதிவண்டி ஓட்டினான். அவர்கள் 20கிமீ பயணித்தால் முத்து சென்றடைந்த நேரம் என்ன?
2 மணி நேரம்
1 மணி 40 நிமிடம்
2 மணி 40 நிமிடம்
3 மணி நேரம்
குமார் பட்டணம் A வில் இருந்து பட்டணம் B-கு 90கிமீ/மணி வேகத்தில் செல்கிறான். வழியில் பலகையைப் பார்க்கிறான். அதில் B பட்டணம் செல்ல இன்னும் 30 கிமீ இருப்பதாக எழுதப்பட்டிருந்தது. அவன் இலக்கை அடைய இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?
20 நிமிடம்
30 நிமிடம்
10 நிமிடம்
40 நிமிடம்
கண்ணாடி, பலகை மற்றும் மணல் மேற்பரப்பில் ஒரே வகையான மூன்று பந்துகள் உருட்டப்பட்டன. பந்துகள் 10மீ சென்ற நேரம் குறிக்கப்பட்டது. எந்த மேற்பரப்பில் பந்து மெதுவாகச் செல்லும்?
கண்ணாடி
மணல்
பலகை
கண்ணாடி, பலகை மற்றும் மணல் மேற்பரப்பில் ஒரே வகையான மூன்று பந்துகள் உருட்டப்பட்டன. பந்துகள் 10மீ சென்ற நேரம் குறிக்கப்பட்டது. கண்ணாடி மேற்பரப்பில் பந்தின் வேகத்தைக் கொண்டு ஓர் ஊகத்தைக் கண்டறிக.
கண்ணாடியில் உராய்வு மிக குறைவு
கண்ணாடியில் உராய்வு மிக அதிகம்
கண்ணாடி சொரசொரப்பானது
ஒரு மகிழுந்து இலக்கை அடைய அதிக நேரம் எடுத்தால், அது.......
மெதுவாக செல்கிறது
வேகமாக செல்கிறது
பழுதடைந்து இருக்கலாம்
மணி பள்ளிக்கு நடந்து செல்ல 30 நிமிடம் எடுத்துக் கொண்டான். அவன் சென்ற தூரம் 3கி.மீ ஆகும். அவனது வேகத்தைக் கணக்கிடுக.
1கிமீ/ மணி
6கிமீ/ நிமிடம்
6 கிமீ/ மணி
3 கிமீ/ மணி
திரு. மதி 100கிமீ/மணி வேகத்தில் மூடுந்தைச் செலுத்தினார். அவர் 45 நிமிடத்தில் இலக்கை அடைந்தால் அவர் சென்ற தூரம் என்ன?
30 கி/மீ
40 கி/மீ
60 கி/மீ
75கி/மீ
தமிழழகி 80 கிமீ/மணி வேகத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வேலைக்குச் சென்றாள். வீட்டிலிருந்து வேலையிடம் 40கி/மீ ஆகும். அவள் வேலையிடத்தை அடைய எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டாள்?
40 நிமிடம்
30 நிமிடம்
2 மணி நேரம்
1 மணி 30 நிமிடம்
