NEW
Font size
Worksheetsபெயர்ச்சொல்
Total questions: 20
Worksheet time: 15mins
பொருட்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
அத்தை
வால்
அலகு
கை
பேரங்காடியில் நிறைய புத்தாடைகள் வாங்கினோம்.
மேற்காணும் வாக்கியத்தில் இடப்பெயரைக் குறிக்கும் சொல் எது?
பேரங்காடியில்
புத்தாடைகள்
நிறைய
வாங்கினோம்
கீழ்காணும் வாக்கியங்களில் எந்த வாக்கியத்தில் காலப்பெயர் குறிப்பிடப்படவில்லை?
கோடை காலத்தில் வெயில் கடுமையாக இருந்தது.
'கோவிட்19' ஒரு தொற்று நோயாகும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் நாங்கள் ஆலயத்திற்குச் செல்வோம்.
சென்ற ஆண்டு நாங்கள் வெளியூர் சென்றோம்.
பறவை சிறகை விரித்து வானத்தில் பறந்தது.
மேற்காணும் வாக்கியத்தில் சினைப்பெயரைத் தெரிவு செய்க.
பறவை
சிறகை
வானத்தில்
பறந்தது
அன்னம் குளத்தில் நீந்தி மகிழ்ந்தது.
கோடிடப்பட்ட சொல் ______________ குறிக்கிறது.
பொருட்பெயர்
தொழிற்பெயர்
இடப்பெயர்
சினைப்பெயர்
குரங்கு உயரமான தென்னை மரத்தில் ஏறியது.
கோடிடப்பட்ட சொல் __________________ குறிக்கிறது.
சினைப்பெயர்
தொழிற்பெயர்
பண்புப்பெயர்
காலப்பெயர்
கீழ்க்காணும் வாக்கியத்தில் இடப்பெயரைக் குறிக்கும் வாக்கியம் எது?
ஆசிரியர் பாடம் போதித்தார்.
குயவன் பானையை வனைந்தான்.
வளவன் மேடையில் உரையாற்றினான்.
மயில் அழகிய தோகையை விரித்து ஆடியது.
ஓவியம் வரைவது கந்தனின் மகிழியாகும்.
மேற்காணும் வாக்கியத்தில் தொழிற்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
ஓவியம்
வரைவது
கந்தனின்
மகிழியாகும்
கீழ்க்காணும் வாக்கியங்களில் சினைப்பெயரைக் குறிக்காத வாக்கியம் எது?
காற்றில் மரக்கிளைகள் அசைந்தன
அண்ணன் பாடலுக்கு ஏற்ப தலையை அசைத்தார்.
மீன் குளத்தில் அழகாக நீந்தியது
கிளி தன் அலகால் பழத்தைத் தின்றது.
மேற்காணும் படம் உணர்த்தும் பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
பொருட்பெயர்
சினைப்பெயர்
காலப்பெயர்
இடப்பெயர்
சரியான காலப்பெயரைத் தெரிவு செய்க.
________________ யில் இலைகளின் மீது பனி படந்திருக்கும்.
நள்ளிரவு
காலை
தை
சித்திரை
தமிழ்ப் புத்தாண்டு _______________ மாதத்தில் தொடங்கும்.
சித்திரை
வைகாசி
ஐப்பசி
பங்குனி
நாரை தனது ________________ மீன்களைக் கொத்தித் தின்றது.
கொடுக்கால்
தும்பிக்கையால்
இதழ்களால்
அலகால்
வாழைத் ____________________ உடலுக்கு நார்ச்சத்தைத் தரும்.
இலை
தண்டு
பழம்
காய்
யானை தனது __________________ நீரை அருந்தியது.
மூக்கால்
தும்பிகையால்
தந்தத்தால்
வாயால்
மந்திரியார் கூறப்பட்ட பணிகளை முடிக்காததால், அரசர் __________________ கொண்டார்.
மகிழ்ச்சி
கவலை
சினம்
பரிவு
___________________ தென்னைமரம், புயல் காற்றால் சாய்ந்தது.
குட்டையான
உயரமான
தடித்த
நீளமான
அமுதன் நகைச்சுவையைப் பார்த்துக் கலகல என ___________________.
அழுதான்
பேசினான்
சிரித்தான்
உள்ளூர் நடிகர்கள் மேடை நிகழ்ச்சிகளில் சிறப்பாக _____________________.
நடித்தனர்
ஆடினர்
பாடினர்
பேசினர்
எந்த வேலையையும் _____________________, ____________________ செய்ய வேண்டும்.
பொறுமையுடனும், விவேகத்துடனும்
வேகத்துடனும், அவசரமாகவும்
அவசரமாகவும், அறைகுறையாகவும்
சுறுசுறுப்புடனும், அறைகுறையாகவும்
