wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கொன்றைவேந்தன்,உலகநீதி -கடந்த யூ.பி.எஸ்.ஆர் கேள்விகள்

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் கூற்றுக்குப் பொருத்தமான கொன்றைவேந்தன் யாது? (2016)


மாணவர்களே, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? அதற்குத் தேவை விடாமுயற்சிதான். அதுவே உங்களை மேம்படுத்தும்.

a)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

b)

நுண்ணிய கருமமும் எண்ணித் துணி

c)

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

2.

சரியான இணையைத் தெரிவு செய்க.(2017)

a)

ஐயம் புகினும் செய்வன செய்- வறுமை ஏற்படும் வரையிலும் செய்ய வேண்டிய நற்செயல்களைச் செய்ய வேண்டும்.

b)

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை- மற்றவர்களின் குறைகளைப் பெரிதுப்படுத்தினால் உறவினரும் நண்பர்களும் நம்மை விரும்புவார்கள்.

c)

சூதும் வாதும் வேதனை செய்யும்- சூதாடுதலும் வாக்குவாதம் செய்தலும் பிறரைத் துன்புறுத்தும் செயல்களாகும்.

d)

ஏவா மக்கள் மூவா மருந்து- சொல்லாமல் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகள் நீண்ட ஆயுளைத் தரும் அமிர்தம் போல் ஆவர்.

3.

கீழ்க்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.(2018)


இங்குப் போதிய வருமானம் கிடைக்கவில்லை. பிற நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்து பொருள் ஈட்டலாம் என்று நினைக்கிறேன்.


நல்லது நண்பா, பொருள் ஈட்டத் தகுந்த இடம் தேடிச் செல்வது வரவேற்கக் கூடியதுதான்; சென்று வா.

a)

ஐயம் புகினும் செய்வன செய்

b)

நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக

c)

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

d)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

4.

சரியான இணையைத் தெரிவு செய்க.(2016)

a)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்- யாரைப் பற்றியும் பொறாமை கொண்டு பேசக்கூடாது.

b)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்- தீய செயல்கள் செய்வாரோடு நட்பு கொள்ளக்கூடாது.

c)

போகாத விடந்தனிலே போக வேண்டாம்- இதுவரை செல்லாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.

d)

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்- ஒருவரைப் போகவிட்டு அவரின் பெருமையைப் பற்றிப் பேசக்கூடாது.

5.

கீழ்க்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான உலகநீதியின் பொருளைத் தெரிவு செய்க.(2017)


அப்பா: மகனே, எனக்குப் பிறகு மறவாமல் நீதான் இந்தத் தரும காரியங்களைச் செய்து வர வேண்டும்.


மகன்: கண்டிப்பாகச் செய்வேன், அப்பா.

a)

அறம் செய்ய ஒருபோதும் மறக்கக்கூடாது.

b)

தன்னை நம்பி வந்தவரை ஒருபோதும் கெடுக்கக்கூடாது.

c)

நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த முயலக்கூடாது.

d)

செல்வத்தைத் தேடி அதை அனுபவிக்காமல் பூமியில் புதைத்து வைக்க வேண்டாம்.