Worksheetsஉயிரினங்களை ஆராய்தல் ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
படம் 5 நாட்கள் அறிவியல் கூடத்தில் நீரில் ஊற வைக்கப்பட்ட விதைகளின் மீது ஆண்டு 4-ஐச் சேர்ந்த மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டதைக் காட்டுகிறது. இந்த ஆய்வின் வழி என்ன கற்றுக் கொள்ளலாம்?
தாவரங்கள் உயிர் வாழ மண் தேவை
தாவரங்கள் உயிர் வாழ காற்று தேவை
தாவரங்கள் உயிர் வாழ நீர் தேவை
தாவரங்கள் உயிர் வாழ சூரிய ஒளி தேவை
திருமதி பரமேஸ்வரி, சில தாவரத்தின் கன்றுகளை ஒரே ஜாடியில் நட்டார். சில மாதங்களுக்குப் பிறகு செடிகளின் வளர்ச்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதை அவள் கவனித்தார்.
பின்வருவனவற்றுள் எது, அந்த கன்றுகளின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்?
ஜாடியை மண்ணால் நிரப்புதல்
மறைவான இடத்தில் வைத்தல்
அதிகமான நீரை ஊற்றுதல்
ஜாடியில் உள்ள கன்றுகளைக் குறைத்தல்
திரு வெள்ளையப்பன், தனது தோட்டத்தில் சில மிளகாய் கன்றுகளை நட்டார். ஒரு மாதத்திற்குப் பிறகு, தனது மிளகாய் செடிகள் தாமதமாக வளர்வதைக் கண்டறிந்தார்.
பின்வருவனவற்றுள் எது, அந்த செடிகள் செழிப்பாக வளர உதவும்?
அந்த மிளகாய் செடிகளுக்கு உரம் இடுதல்
அந்த மிளகாய் செடிகளுக்கு ஊற்றப்படும் நீரின் அளவைக் குறைத்தல்
அந்த மிளகாய் செடிகளுக்கு இடையில் வேறு செடிகளை நடுதல்
அந்த மிளகாய் செடிகளை மறைவான இடத்தில் நடுதல்
படம் 9 நாட்கள் அறிவியல் பூங்காவில் ஆண்டு 4-ஐச் சேர்ந்த மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வைக் காட்டுகிறது. இந்த ஆய்வின் வழி என்ன கற்றுக் கொள்ளலாம்?
தாவரங்கள் உயிர் வாழ மண் தேவை
தாவரங்கள் உயிர் வாழ காற்று தேவை
தாவரங்கள் உயிர் வாழ நீர் தேவை
தாவரங்கள் உயிர் வாழ சூரிய ஒளி தேவை
பிரியதர்ஷன் ஒரு மூடிய பாத்திரத்தில் ஒரு வண்ணத்துப்பூச்சியை விட்டான். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, அது இறக்கும் தருவாயில் இருப்பதை அறிந்தான்.
பின்வருவனவற்றுள் எது, அந்த வண்ணத்துப்பூச்சி இறக்காமல் இருப்பதற்கு உதவும்?
மூடிய கண்ணாடி தொட்டியில் வைத்தல்
வலை கம்பியைப் பயன்படுத்துதல்
பெரிய பாத்திரத்தில் வைத்தல்
உணவை அதிகரித்தல்
ராஜேஸ் இரவு நேரத்தின் போது தனது வீட்டில் அதிக கொசுக்களைக் கண்டான். அக்கொசுக்கள் தனது வீட்டின் அருகில் உள்ள பழைய குளத்திலிருந்து வருவதை கண்டறிந்தான்.
பின்வருவனவற்றுள் எது, அந்த கொசுக்களை அழிக்க உதவும்?
குளத்தினுள் தாவரக் கொல்லி மருந்தைத் தெளித்தல்
குளத்தின் நீரை வெளியேற்றுதல்
குளத்தை மண்ணால் மூடுதல்
சில மீன்களைக் குளத்தில் விடுதல்
படம் தோட்டம் ஒன்றில் ஒரு மாதம் மழை பெய்யாமல் இருந்ததால் மரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காட்டுகிறது. மேலுள்ள உற்றறிதலின் வழி என்ன முடிவு எடுக்கலாம்?
தாவரங்கள் உயிர் வாழ காற்று தேவை
தாவரங்கள் உயிர் வாழ நீர் தேவை
தாவரங்கள் உயிர் வாழ மண் தேவை
தாவரங்கள் உயிர் வாழ சூரிய ஒளி தேவை
படம் ஓர் ஆராய்வைக் காட்டுகிறது. இரண்டு நாள்களுக்குப் கருப்பான் பூச்சியின் சிசுவின் நிலை என்ன ஆகும்?
முட்டையிடும்
உயிரோடு இருக்கும்
கருப்பான் பூச்சியாக மாறிவிடும்
தன் நிறம் மாறிவிடும்
படம் ஓர் ஆராய்வைக் காட்டுகிறது. சில நாள்களுக்குப் பிறகு கருப்பு நெகிழியால் மூடப்பட்ட இலையின் நிலை என்ன ஆகும்?
உதிர்ந்து விடும்
செழிப்பாக வளரும்
மேலும் பெரியதாகும்
மஞ்சளாக மாறி வாடிவிடும்
படம் ஓர் ஆராய்வைக் காட்டுகிறது. நான்கு நாள்களுக்குப் பிறகு முட்டைப்புழுவின் நிலை என்ன ஆகும்?
கொசுவாக மாறிவிடும்
அதிகரித்துவிடும்
உயிரோடு இருக்கும்
இறந்து விடும்
