NEW
Font size
S
M
L
XL
WorksheetsUPSR Sains (தொகுதி 5) - உமா பதிப்பகம்
Total questions: 10
Worksheet time: 50mins
Name
Class
Date
1.
பின்வரும் விலங்குகளுள் எது பறவை இனத்தைச் சேராதது ஆகும்?
a)
கழுகு
b)
வௌவால்
c)
கொக்கு
d)
தீக்கோழி
2.
கீழ்க்காணும் உணவு வகையில் உடல் வளர்ச்சிக்கு உதவுவது எது?
a)
மீன்
b)
ஆப்பிள்
c)
முள்ளங்கி
d)
பால்
3.
பின்வருபனவற்றுள் எது சரியான உணவுச் சங்கிலியைக் காட்டுகிறது?
a)
சுறா → சால்மன் மீன் → மீன் குஞ்சுகள் → பிளாங்தன்கள்
b)
சுறா → பிளாங்தன்கள் → மீன் குஞ்சுகள் → சால்மன் மீன்
c)
பிளாங்தன்கள் → மீன் குஞ்சுகள் → சுறா → சால்மன் மீன்
d)
பிளாங்தன்கள் → மீன் குஞ்சுகள் → சால்மன் மீன் → சுறா
4.
கீழ்க்காண்பனவற்றுள் எது ஒலியை எழுப்பாது?
a)
நாற்காலியை இழுத்தல்
b)
புட்டியின் வாய்ப்பகுதியில் ஊதுதல்
c)
மேசையின் மேற்பரப்பை உராய்தல்
d)
புல்லாங்குழல் இசைப்பதைப் பார்த்தல்
5.
ஒரே துருவத்தைக் கொண்ட இரு காந்தங்களை அருகே கொண்டு சென்றால் என்ன நிகழும்?
a)
ஒன்றையொன்று ஈர்க்கும்.
b)
ஒன்றையொன்று எதிர்க்கும்.
c)
ஒன்றுடன் மற்றொன்று ஒட்டிக்கொள்ளும்.
d)
ஒன்றுடன் மற்றொன்று ஈர்த்துக்கொள்ளும்.
6.
பின்வரும் விலங்குகளுள் எது முதலையைப் போல இனவிருத்தி செய்யாது?
a)
கழுகு
b)
கடலாமை
c)
டால்பின்
d)
உடும்பு
7.
தாவரத்தின் வேர், கீழ்நோக்கிச் செல்ல காரணமாய் இருக்கும் தூண்டல் எது?
I. ஒளித்தூண்டல்
II. புவி ஈர்ப்புத் தூண்டல்
III. நீர்த் தூண்டல்
IV. வேர்த் தூண்டல்
a)
I, II
b)
I, III
c)
II, III
d)
III, IV
8.
கவிதா ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி, வெயில் படும் இடத்தில் வைத்தாள். 3 மணி நேரம் கழித்து, நீரின் அளவு குறைந்திருப்பதை அவள் கண்டாள். நீரின் அளவு குறைய காரணம் என்ன?
a)
திண்மமாதல்
b)
உருகுதல்
c)
நீராவியாதல்
d)
உறைதல்
9.
பிரம்பும் (ரோத்தான்) மூங்கிலும் எவ்வாறு தங்களை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்கின்றன?
a)
சுணைகளைக் கொண்டுள்ளன.
b)
பாலை வெளியாக்குகின்றன.
c)
தடித்த மரப்பட்டைகளைக் கொண்டுள்ளன.
d)
நச்சுத்தன்மை கொண்டுள்ளன.
10.
கீழே உள்ள இணைப்புகளில் எது சரியாகப் பொருந்துகிறது?
I. தந்த மோதிரம் – விலங்கு
II. பட்டுச் சேலை – தாவரம்
III. புத்தகம் – தாவரம்
IV. நெகிழி வாளி – தாவரம்
a)
I, II
b)
I, III
c)
II, III
d)
III, IV
Reset
